மூலிகைப் பெயர்................................ கழுதை முள்ளி,
01. கழுதைமுள்ளி எனப்படும் குடியோட்டிப்பூண்டு சமூலச் சாம்பல் 30 மில்லி கிராம் எடை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர ஆஸ்துமா தீரும். (சமூலம் = வேர் முதல் பூ, காய் வரையிலான முழுச் செடி)
02. கழுதைமுள்ளி (பிரமதண்டு) இலைச் சாறு (பால்) ஒரு துளி கண்ணில் விட்டு வந்தால் கண்ணில் சதை வளர்வதைத் தடுக்கும். (024)
03. கழுதைமுள்ளி (பிரமதண்டு) இலைச் சாறு (பால்) சில துளிகளை எடுத்து தேள் கொட்டிய இடத்தில் தடவினால் தேள் விஷம் முறிவடையும். (904)
04. கழுதைமுள்ளி (பிரமதண்டு) இலைச் சாறு (பால்) 10 மி.லி எடுத்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும். (1474)
05. கழுதைமுள்ளி (பிரமதண்டு) சமூலச் சாம்பல் மூன்று அரிசி எடை எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா, இரைப்பிருமல், நுரையீரல் நோய்கள் தீரும். (1475)
06. கழுதைமுள்ளி (பிரமதண்டு) வேர்ப் பொடி 2 கிராம் எடுத்து வெந்நீரில் கலந்து குடித்தால் மலப்புழுக்கள் வெளியேறும். (1476)
07. கழுதைமுள்ளி (பிரமதண்டு) இலைகளை எரித்த சாம்பலைப் பற்பொடியாக்கி பல் துலக்கி வந்தால் பற்காரை, பற்சொத்தை தீரும். (223) (243) (992)
08. கழுதைமுள்ளி (பிரமதண்டு) சமூலம் எடுத்து அரைத்து 30 கிராம் உள்ளுக்குக் கொடுப்பதுடன் கடிவாயிலும் கட்டினால் பாம்புக் கடி விஷம் இறங்கும். (883)
=================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய்
ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச்
செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு
தினமலர், பெண்கள் மலரில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !
==============================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,விடை(வைகாசி )12]
{26-05-2021}
==============================================
கழுதைமுள்ளி |
கழுதைமுள்ளி |
கழுதைமுள்ளி |
கழுதைமுள்ளி |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக