இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

திப்பிலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திப்பிலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 மே, 2021

திப்பிலி

 

      மூலிகைப் பெயர்..................................................திப்பிலி

      மாற்றுப் பெயர்................அம்பு, ஆர்கதி, ஆதி மருந்து

      .........................உண்சரம்,உலவைநாசிகனை, கணம்

      ..........................................கலினிகாமன்குடாரிகோலி

      ..........................கோலகம்கோழையறுக்கிசரம்சாடி  

      ...............................சௌண்டிதண்டுலிதிப்பிலி மூலம்

       .................துளவி, பாணம்பிப்பிலிமாகதிவைதேகி

       தாவரவியல் பெயர்.................................PIPER LONGUM

       ஆங்கிலப் பெயர்.........................................LONG PEPPER

 

 ==================================================

 

01.   திப்பிலி கொடி வகையைச் சேர்ந்தது. வெப்பமயமான பகுதிகளில் நன்கு வளரும். இதன் இலைகள் வெற்றிலை போன்ற அமைப்பைக் கொண்டவை.  (Harish)

 

02.   பூக்கள் மிகச் சிறிய அளவில் நெருக்கமாக கூர் முனையுடனும், பழங்கள்  உருண்டையான தோற்றத்துடன் சற்று நீளமாகவும் இருக்கும். பழம் கரும் பச்சை வண்ணத்தில் இருக்கும். (Harish)

 

03.   மிளகைவிடவும் அதிக காரச் சுவை உடையது இந்த திப்பிலி. இவை கொடி வகையைச் சேர்ந்தது. (Harish)

 

04.   திப்பிலியில் இரண்டு வகைகள் உள்ளன. அவை :- (1) அரிசித் திப்பிலி (2) யானைத் திப்பிலி. (Harish)

 

05.   இதில் பீட்டா சைட்டேஸ்டெரால் இருப்பதால் அதி குருதி அழுத்தம் மற்றும் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும். (Harish)

 

06.   மேலும் இவை உடலில் உள்ள நோய் எதிர்ப்பாற்றலை மிகுதி ஆக்கும். புற்று நோயின் செல்களை அழிக்கும் தன்மையும் கொண்டது. (Harish)

 

07.   திப்பிலி சுரத்தைத் தணிக்கும்; இருமல் மற்றும் இரைப்பைக் குறைக்கும்; தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்; செரிமானத்தைச் சீர் செய்யும்; மாசு மருவற்ற சருமத்தை உண்டாக்கும்; ஆண் பெண் போக சக்தியைத் தூண்டச் செய்யும்; இரத்த அணுக்களை அதிகப் படுத்தும்; விக்கலை நிறுத்தும்; உடல் பருமனைக் குறைக்கும். (Harish)

 

08.   திப்பிலிப் பொடி அரை தேக்கரண்டி எடுத்து தேனில் குழைத்து ஒரு மண்டலம் சப்பிட்டு வந்தால் தேமல் நீங்கும். (Harish)

 

09.   அரைத் தேக்கரண்டி திப்பிலிப் பொடியை எடுத்து தேன் மற்றும் கம்மாறு வெற்றிலைச் சாறுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல், சுரம் ஆகியவை குறையும். (Harish)

 

10.   திப்பிலிப் பொடி கால் தேக்கரண்டி எடுத்து தேநீர் மற்றும் இஞ்சி சுரசத்தில் கலந்து மூன்று நாள் இரு வேளை கொடுத்து வந்தால் காய்ச்சல் தீரும். (Harish)

 

11.   இருமல், தும்மல் போன்றவற்றுக்கு கால் தேக்கரண்டி அளவு திப்பிலிப் பொடியை மஞ்சள் தூள் மற்றும் இஞ்சிச் சாறு கலந்து சிறிது நேரம் கொதிக்க வைத்து 50 – 60 மி.லி உள்ளுக்குக் கொடுத்தால் குணமாகும். (Harish)

 

12.   வறட்டு இருமலுக்கு கொள்ளுக் கசாயத்துடன் திப்பிலிப் பொடி கால் தேக்கரண்டி கலந்து குடித்தால் குணமாகும். (Harish)

 

13.   கால் தேக்கரண்டி திப்பிலிப் பொடியை நெய்யில் கலந்து உண்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். (Harish)

 

14.   வெள்ளை மற்றும் பெரும்பாட்டிற்கு திப்பிலி மற்றும் தேற்றான் விதையை நன்கு பொடித்து அதைக் கழுநீரில் 3 – 4 கிராம் அளவு மூன்று நாட்கள் தர குணமாகும். (Harish)

 

15.   பெண்களுக்குப் பால் சுரக்க, கால் தேக்கரண்டி திப்பிலிப் பொடியுடன் சம அளவு மிளகுத் தூள் சேர்த்து வெது வெதுப்பான பாலில் கலந்து அருந்தி வர வேண்டும். (Harish)

 

16.   கால் தேக்கரண்டி சீரகத் தூளுடன் சம அளவு திப்பிலிப் பொடி சேர்த்து அருந்தி வந்தால் செரிமானம் சீராகும். வயிற்று உப்பிசம் குறையும். (Harish)

 

17.   மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு கால் தேக்கரண்டி திப்பிலிப் பொடியுடன் இரண்டு தேக்கரண்டி  அளவு கற்றாழைச் சோற்றின்  சாறுடன் தண்ணீர் கலந்து குடித்தால் அவை சரியாகும். (Harish)

 

18.   நெல்லிச் சாற்றுடன் சிறிது திப்பிலிப் பொடி கலந்து அருந்தி வந்தால் இரத்தம் விருத்தியாகும். (Harish)

 

19.   எட்டுத் திப்பிலி அரிசியுடன் பத்து சீரகம் சேர்த்து தேன் கலந்து சாப்பிட்டால் விடாத விக்கலும் கூட விலகும்.  (Harish)

 

20.   திப்பிலி தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்; மன அழுத்தம் குறையச் செய்யும், திப்பிலியின் காய் அரிசி இரண்டும் மருத்துவக் குணம் உடையவை. (Harish)

 

21.   (தொ.எண் 1 முதல் 20 வரை ஆதாரம்:- வேலூர், ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ் மருத்துவமனை, முதன்மை மருத்துவ அதிகாரி  டாக்டர். வெ. ஹரிஷ் அன்புச் செல்வன் M.D.(s) அவர்கள் 11-11-2017 நாளிட்ட தினமலர் நாளிதழின் இணைப்பான பெண்கள் மலரில் எழுதியுள்ள கட்டுரை.)

 

22.   சிறிதளவு திப்பிலிப் பொடியைத் தேனில் குழைத்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் பசியின்மை, வயிற்றுக் கோளாறுகள் சீராகும். (Asan)

 

 

23.   ஐந்து கிராம் கண்ட திப்பிலியைப் பொடித்து, சிறிதளவு  பாலில் கலந்து குடித்து வந்தால், உடல் வலி, முதுகு வலி, மூட்டு வலி, வாத நோய் குறையும். (Asan)

 

 

24.   திப்பிலிப் பொடியைப் பசுவின் பால் விட்டுக்காய்ச்சி அருந்தி வரலாம். இருமல், முப்பிணி ( வாதம், பித்தம், சிலேத்துமம் ) சரியாகும். (Asan)

 

25.   திப்பிலிப் பொடியை அரைத் தேக்கரண்டி எடுத்து தேன் கலந்து இரு வேளையாக ஒரு மாதம் சாப்பிட்டால் தேமல் கட்டுப்படும். இருமல், கபம், வாயுத் தொல்லை தணியும். செரிமானம் அதிகரிக்கும். குரல் வளம் மிகும். (Asan)

 

26.   சம அளவு திப்பிலிப் பொடி, கடுக்காய்ப் பொடியைத் தேன் விட்டுப் பிசைந்து நெல்லிகாய் அளவு நாளும் இரு வேளை தொடர்ந்து 3 மாதம் சாப்பிடுங்கள். இளைப்பு கட்டுப்படும். (Asan)

 

27.   கிராம்பு 5 , திப்பிலி 10 , மஞ்சள் தூள் அரைத் தேக்கரண்டி, மிளகு 5 , இவற்றை 3 தம்ளர் நீரில் கொதிக்க வைத்து, வாய் கொப்பளித்து வரலாம். காது, மூக்கு, தொண்டை நோய்கள் சீரடையும். (Asan)

 

28.   சிறிதளவு தாளிசபத்திரி, திப்பிலி, தூதுவேளை, சுக்கு, மிளகு, ஆகியவற்றைக் கசாயமாக்கி, வடிகட்டி, தேன் கலந்து அருந்தலாம். மூச்சுத் திணறல், ஆஸ்துமா, குளிர்காய்ச்சல், ஆகியவை குறையும். (Asan)

 

29.   அதிமதுரம், சிற்றரத்தை, திப்பிலி, பனங்கற்கண்டு தலா 100 கிராம் எடுத்து, பொடித்து, தினமும் 2 கிராம் காலை மாலை என 2 வேளைகள் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், சைனஸ், தும்மல், தலை பாரம் குறையும். (Asan)

 

30.   அக்கரகாரம், அதிமதுரம், திப்பிலி மூன்றையும் சம அளவு எடுத்து, பொடித்து, ஒரு கிராம் அளவு வீதம் தினமும் தேனில் குழைத்துச் சாப்பீடலாம். தொண்டைச் சதை விரைவில் கரையும். (Asan)

 

31.   திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கை சம அளவாக எடுத்து, வறுத்துப் பொடியாக்கி தேனுடன் கலந்து 3 வேளை சாப்பிடுங்கள். நீர்க்கோவை, வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சீராகும். (Asan)

 

32.   திப்பிலியை முசுமுசுக்கை இலைச் சாறில் ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, மூன்று சிட்டிகை அளவுப் பொடியைத் தேனில் குழைத்து ஒரு வெற்றிலையில் வைத்து, வெற்றிலையுடன்  சாப்பிடுங்கள். ஆஸ்துமா குறையும். (Asan)

 

33.   திப்பிலியை நெய்யில் வறுத்து, பொடித்து, கால் தேக்கரண்டி வீதம் தினமும் காலை மாலையில் தேனில் குழைத்து உட்கொண்டால், தொண்டைக்கட்டு, கோழை, சுவையின்மை பாதிப்பு அகலும். (Asan)

 

34.   குழந்தை வேண்டும் பெண்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2 கிராம் திப்பிலிப் பொடியை சிறிது ஆமணக்கு எண்ணெயில் கலந்து, மாதவிடாய் ஏற்பட்ட இரண்டாம் நாளில் இருந்து 6 நாட்கள் சாப்பிட்டு, வெது வெதுப்பான நீர் அருந்தினால், ஆரோக்கியமானசினை முட்டை உருவாகும். (Asan)

 

35.   (தொ. எண் 22 முதல் 33 வரை ஆதாரம்:- நாகர்கோயில், எஸ். மகாலிங்கம் ஆசான், 12-02-2017 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கட்டுரை.)

 

36.   திப்பிலி, அதிமதுரம், கடுக்காய், மிளகு சேர்த்து பொடி செய்து, தேன் கலந்து வெந்நீரில் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் குணமாகும்.   (016)

 

37.   திப்பிலி, சுக்கு, வால்மிளகு, ஏலரிசி  இவைகளை வறுத்து, தூளாக்கி, ஒரு சிட்டிகை பால் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப் புண் குணமாகும்.  (69)

 

38.   திப்பிலி, வெள்ளைப் பூண்டு, வெற்றிலைக் காம்பு, வசம்பு ஆகியவை சம அளவு எடுத்து வெண்ணையில் அரைத்து  உள்ளுக்குக் கொடுத்தால் குழந்தைகளுக்கு சளித் தொல்லை நீங்கும்.  (113)

 

39.   திப்பிலி, மிளகு, சுக்கு சம அளவு எடுத்து பொடி செய்து தேனில் குழைத்து உள்ளுக்குக் கொடுத்தால் காய்ச்சல் குணமாகும்.(175)

 

40.   திப்பிலியை வறுத்து பொடி செய்து, அதிலிருந்து அரை கிராம் எடுத்து தேனில் குழைத்து காலை மாலை உள்ளுக்குக் கொடுத்தால் இருமல் குணமாகும் (204)

 

41.   திப்பிலிப் பொடியை நெய்யுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும். (516) (1952)

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )08]

{22-05-2021}

===================================================


திப்பிலி

திப்பிலி

திப்பிலி

திப்பிலி