இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

சீயக்காய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீயக்காய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 21 மே, 2021

சீயக்காய்

 

             

         மூலிகைப் பெயர்......................................சீயக்காய்

         மாற்றுப் பெயர்.....................இண்டு, காட்டுசிகை,

         .....................................................................சிகைக்காய்

         தாவரவியல் பெயர்....................ACACIA  CONCINNA

         ஆங்கிலப் பெயர்..........................................SOAPPOD

===================================================

 

01.   சீயக்காய் ஏறு பற்றுக் கொடி வகையைச் சேர்ந்தது. புதர் போன்று வளரும். இதன் இலை இரட்டைச் சிறகு இலை அமைப்பையும் ( புளிய இலை போன்ற அமைப்பு) பூவானது கோள வடிவில் மஞ்சள் நிறத்திலும், 10 விதைகளுடன் காணப்படும். (Asan)

 

02.   சீயக்காயில் வைட்டமின்”, “சி”, “கே”, ஆகியவை உள்ளன. புரதம், அதிகம் உள்ளது. இதில் உள்ள மைக்ரோநியூட்ரியண்டுகள் முடியின் வளர்ச்சியைத் தூண்டி அதன் இயற்கை அழகைத் தக்க வைக்கும். (Asan)

 

03.   சீயக்காயில், அதன்  இலை மற்றும் காய் ஆகியவையே பயன் தரும் பாகங்கள். (Asan)

 

04.   சீயக்காயில் உஷ்ணம் அதிகம். ஆதலால் சோற்றுக் கஞ்சி நீருடன் கலந்து பயன்படுத்தவேண்டும். (Asan)

 

05.   சீயக்காய் ஷாம்பூ:- சீயக்காயை அரைத்த பொடி 200 கிராம், வெந்தயப் பொடி 100 கிராம், நெல்லிக்காய்ப் பொடி 100 கிராம், பூந்திக் கொட்டைப் பொடி 100 கிராம், கறிவேப்பிலை ஒரு கைப்பிடி, துளசி இலை ஒரு கைப்பிடி, அனைத்தையும் எடுத்து வெயிலில் காய வைத்து, நன்கு பொடியாக்கி, காற்றுப் புகாத சீசாவில் அடைத்து வைக்க வேண்டும்.. தலைக்குக் குளிக்கும் போது ஷாம்பூவுக்குப் பதில், இந்தப் பொடியை இரண்டு தேக்கரண்டி எடுத்து தண்ணீர் சேர்த்துக் குழைத்து, தலையில் தடவி, அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால், முடியின் அடர்த்தி அதிகரிக்கும். (Asan)

 

06.   சீயக்காய்ப் பொடியில் தயிர் சேர்த்துக் கலக்கி, தலையில் தடவி 20 நிமிடம் ஊறியபின், குளிர்ந்த நீரில் அலசி வரலாம். முடி நன்கு ஆரோக்கியமாக இருக்கும். (Asan)

 

07.   நெல்லிகாய், சிகைக்காய், பூந்திக் கொட்டையை ஒன்றாக அரைத்து, தலையில் தடவி, சிறிது நேரம் ஊறவைத்து நீரில் நன்றாகத்  தேய்த்து அலசலாம். முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும். நரை முடி மறையும். தலையில் ஈரப் பசையைத் தக்க வைக்கும். (Asan)

 

08.   தலைக்கு மட்டும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது தவறு. சிகைகாய் கலவையை மிகவும் அழுத்தித் தேய்க்கக் கூடாது. (Asan)

 

09.   (ஆதாரம்: நாகர்கோயில் எஸ். மகாலிங்கம் ஆசான் 30-10-2016 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கட்டுரை.)

  =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )07]

{21-05-2021}


===================================================

சீயக்காய்


சீயக்காய்