இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 ஜூன், 2021

வெள்ளரி

        மூலிகைப் பெயர்:............................................:வெள்ளரி

        மாற்றுப் பெயர்கள்:................:காணீக்காய், முள்ளன்

        தாவரவியல் பெயர்:.........................:CUCUMIS SATIVUS

        ஆங்கிலப் பெயர்:..........................................:CUCUMBER

 

===================================================

     

01.   வெள்ளரியின் இலை, பிஞ்சு, காய், பழம், விதை ஆகியவை மருத்துவக் குணம் உடையவை.

 

02.   இதில் வைட்டமின் K, B-1, B-5, B-7, C ஆகியவையும், தாமிரச்சத்து, பொட்டாசியம், மாங்கனீசு சத்து ஆகியவையும் உள்ளன. (Harish)

 

03.   வெள்ளரியில் 95 விழுக்காடு நீர்ச் சத்து இருப்பதால், உடலில் ஏற்படும் நீர் இழப்பைச் சரி செய்யும்.(Haish)

 

04.   வெள்ளரியில் குறைந்த கலோரியும், அதிக நார்ச் சத்தும் இருப்பதால், உடல் எடை கூடாமலும், வயிற்றுக் கோளாறுகள் வராமலும் தடுக்கிறது. (Harish)

 

05.   வெள்ளரியில் Lignans என்னும் பாலிபீனால் இருப்பதால், மார்பகம், கருப்பை, சினைப்பை புற்று நோய்கள் வராமல் காக்கும். (Harish)

 

06.   வெள்ளரி இலைப் பொடியும், சீரகப் பொடியும் சம அளவு எடுத்து, அரைத் தேக்கரண்டி தேனில் குழைத்து அருந்தினால் தொண்டையில் உண்டாகும் வீக்கம், வலி ஆகியவை குணமாகும்(Harish)

 

07.   வெள்ளரி இலையைக் கசாயம் செய்து குடித்து வந்தால் பல் இறுகும். ஈறு பலப்படும்.(Harish)

 

08.   வெள்ளரிக் காயை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் ஏற்படும் எரிச்சல் தணியும். தோல் புத்துயிர் பெறும்.(Harish)

 

09.   வெள்ளரிக்காய் சாற்றுடன் தேன் கலந்து  தினமும் முகத்தில் தடவிக் காய வைத்த பிறகு கழுவினால் தோல் சுருக்கங்கள் மறையும்.(Harish)

 

10.   வெள்ளரியில் அஸ்கார்பிக் மற்றும் காஃபிக் அமிலங்கள் இருப்பதால் கண் அதைப்பு என்று சொல்லக் கூடிய கண்ணின் கீழ் உள்ள வீக்கத்திற்கு வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி இரு கண்களிலும் தினமும் வைத்து வர  வீக்கம் குறையும்.(Harish)

 

11.   வெள்ளரிப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் கை, கால் மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் குறையும். (Harish)

 

12.   வெள்ளரியில் வைட்டமின்பிசத்துக்கள் உள்ளதால், மனதில் ஏற்படும் அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைக்கும்.(Harish)

 

13.   வெள்ளரிக் காயை விதையுடன் சேர்த்து அரைத்து சாறு பிழிந்து தினமும் அருந்தி வந்தால், முடி உதிர்வதைத் தடுக்கலாம். முடி வளர்ச்சி பெருகும். (Harish)

 

14.   வெள்ளரி விதையின் உட்பருப்பைப் பொடித்து தினமும் அரைத் தேக்கரண்டி அளவுக்கு நீரில் கலந்து அருந்தினால் புண்மம், வாயுத் தொல்லை, வயிற்றெரிச்சல் தீரும்.(Harish)

 

15.   வெள்ளரி விதையை உட்கொள்வதால் வயிற்றில் உள்ள தட்டைப் புழுக்கள் வெளியேறும். (Harish)

 

16.   வெள்ளரியில் அதிக அளவில் சிலிக்கா சத்து இருப்பதால் கண்களைச் சுற்றிக்  கருவளையம் வராமல் தடுக்கும்.(Harish)

 

17.   உடலில் தங்கியுள்ள தேவையற்ற நீர் மற்றும் நஞ்சுகளை வெளியேற்ற  வெள்ளரி உதவும்.(Harish)

 

18.   உடலில் இருந்து யூரிக் அமிலத்தை (Uric Acid) வெளியேற்றும் தன்மை வெள்ளரிக்கு உண்டு. ஆதலால் மூட்டு வலி, மற்றும் மூட்டு வீக்கத்தைக் குணப்படுத்தும்.(Harish)

 

19.   வெள்ளரி விதைகளுடன் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து இரு வேளைகள் குடித்து வந்தால், சிறிய அளவில் உள்ள சிறுநீரகக் கற்கள் கரையும்(Harish)

 

20.   வெள்ளரியில் தாமிரச் சத்து இருப்பதால், மூளை நரம்புகள் தனது பணிகளைச் செம்மையாகச் செய்யப் பெரிதும் உதவும்.(Harish)

 

21.   வெள்ளரி விதைகளைத் திரவமாக்கி அருந்துவதால், வாயில் ஏற்படும் தீய நாற்றத்தைத் தடுக்கலாம். சொத்தைப் பற்கள் வராமல் காக்கலாம். உமிழ்நீர் நன்கு சுரக்க உதவும்.(Harish)

 

22.   (ஆதாரம்: டாக்டர். வெ. ஹரிஷ் அன்புச் செல்வன் M.D (s), முதன்மை மருத்துவ அதிகாரி, ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், வேலூர், அவர்களின் கட்டுரை, தினமலர், பெண்கள் மலர், நாள் 20-05-2017)

 

23.   வெள்ரி இலைகளை சீரகத்துடன் வறுத்துப் பொடி செய்து தாண்ணீரில் கலந்து குடிப்பது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும்.  (753)

 

24.   வெள்ளரிக் காய் சாப்பிட்டு வந்தால் நன்கு பசி எடுக்கும். நீர்க் கடுப்பு குணமாகும். (1244)

 

25.   வெள்ளரி விதை, நீர்முள்ளி விதை, நெருஞ்சில் விதை ஆகியவற்றை  சிதைத்து கசாயம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் தாது பலம் உண்டாகும்.  (1411)


==========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை,

[தி.பி:2052,விடை(வைகாசி )19]

{02-06-2021} 

================================================


வெள்ளரி

வெள்ளரி

வெள்ளரி

வெள்ளரி