இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

அறுகம்புல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறுகம்புல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

அறுகம் புல்

 

 

                        மூலிகைப் பெயர்................................அறுகம்புல்

                        மாற்றுப் பெயர்கள்.................நஞ்சகற்றி, பதம்

                         ..............................மூதண்டம்தூர்வை, மேகாரி

                        தாவரவியல் பெயர்.........CYNODON DACTYLON

                       ஆங்கிலப் பெயர்...............................HOLY GRASS

                        சுவை...........................................................இனிப்பு

                        தன்மை.....................................................குளிர்ச்சி

 

============================================== 


1)   குறுகலான நீண்ட இலைகளையும் நேராய் வளரும் தண்டுகளையும் உடைய தன்னிச்சையாய் வயல் வரப்புகளிலும் வெட்ட வெளிகளிலும் வளரும் ஒரு புல் வகை

 

2)   பித்தம், வாதம், சிலேத்துமம் ஆகியவைகளால் உண்டாகும் நோய்கள், ஈளை (கோழை), கண் நோய், கண் புகைச்சல், தலை நோய், குருதி அழல், மருந்துகளின் வெப்பம் ஆகியவை  அறுகம் புல் சாறு உண்பதால் நீங்கும்

 

3)   அறுகம் புல்லை இடித்துப் பிழிந்த சாற்றைக் கண்ணுக்குள் பிழிய, கண்ணோயும், கண் புகைச்சலும், மூக்கிலிட, மூக்கிலிருந்து பாயும் குருதியும், காயம் பட்டவிடத்தில் பூச  அதிலிருந்து வடியும் குருதியும் நிற்கும். புண்களின் மீது தடவ, புண் ஆறி வரும்.

 

4)   அறுகம் புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துத் தடவிவர சொறி, சிரங்கு, படர்தாமரை  ஆகியவை போகும்.

 

5)   அறுகம்புல்லின் வேரெடுத்து கணுவை நீக்கிவிட்டு 10 கிராம் எடுத்து, வெண்மிளகு 2 கிராம் சேர்த்துக் குடிநீரில் இட்டு வடித்து, அதில் 2 கிராம் வெண்ணெய் கூட்டி உட்கொள்ள, மருந்தின் தீங்கு, இரச வேக்காடு, மூலக்கடுப்பு, நீர்க்கடுப்பு, நீரடைப்பு, வெட்டை, நீர்த்தாரை எரிச்சல் நீங்கும்.

 

6)   அறுகம் புல் ஒரு கைப்பிடி எடுத்து தயிரில் அரைத்துக் கலந்து கொடுக்க தணியாத வெள்ளை நோய் குணமாகும்.

 

7)   கணு நீக்கிய அறுகம்புல் சமூலம் 30 கிராம் வெண்ணெய் போல் அரைத்து சம அளவு வெண்ணெய் கலந்து 20 முதல் 40 நாட்கள் சாப்பிட உடல், தளர்ச்சி நீங்கி உறுதிப்படும். அறிவு மிகுந்து முக வசீகரம் உண்டாகும்

 

8)   அறுகம் வேர் 30 கிராம், சிறு கீரை வேர் 15 கிராம், மிளகு 5 கிராம், சீரகம் 5 கிராம் ஒரு லிட்டர் நீரில் சேர்த்து கால் லிட்டராகக் காய்ச்சி, பால், கற்கண்டு கலந்து பருக, மருந்து வீறு தணியும். ( மருந்து வீறு, கடும் மருந்துகளை உட்கொள்வதால் பல் சீழ் பிடித்து, வாய் வயிறு வெந்து காணப்படுதல் ).

 

9)   அறுகம்புல் ஒரு கைப்பிடியும், கானவாழை சமூலம் ஒரு கைப்பிடியும் எடுத்து மைய அரைத்து, கொட்டைப் பாக்கு அளவுக்கு எடுத்து பாலில் கலந்து கொடுத்தால்  இரத்த பேதி நிற்கும்.(092)

 

10)  அறுகம்புல் சாறு எடுத்து அத்துடன் மாதுளம் பூச் சாறு சம அளவு கலந்து மூன்று வேளைகள் பருகினால் மூக்கில் இரத்தம் வடிதல் நிற்கும்.(136)

 

11)  அறுகம்புல் சாறு எடுத்து தினசரி பருகி வந்தால் சளித் தொல்லை தீரும் (137)

 

12)  அறுகம்புல் சாறும் மாதுளம் பழச் சாறும் சம அளவு எடுத்து, கலந்து வேளைக்கு 30 மி.லி வீதம் மூன்று வேளை சாப்பிட்டால் மூக்கில் இரத்தம் வடிதல் நிற்கும்.(140)

 

13)  அறுகம்புல் 30 கிராம் எடுத்து மைய அரைத்து பாலில் கலந்து தொடர்ந்து பருகி வந்தால் இரத்த மூலம் குணமாகும்.(352)

 

14)  அறுகம்புல்லை மைய அரைத்து மஞ்சள் தூள் மற்று சிறிது சுண்ணாம்பு கலந்து பூசி வந்தால் நகச்சுற்று குணமாகும்.(572)

 

15)  அறுகம்புல் சாறும் வில்வ இலைச் சாறும் சம அளவு கலந்து காலை மாலை ஒரு அவுன்ஸ் ( 30 மி.லி ) வீதம் சாப்பிட்டால் உடல் வலி தீரும்.(738)

 

16)  அறுகம்புல் சாறினை தினசரி கால்  அவுன்ஸ்  சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு ஆற்றல் கூடும் (740)

 

17)  அறுகம்புல் ,வேப்ப இலை இரண்டையும் சம அளவு எடுத்து நீர் சேர்த்துக் கசாயம் செய்து தினசரி 100 மி.லி சாப்பிட்டு வந்தால் புற்று நோய் கட்டுப்படும்.(816)

 

18)  அறுகம்புல் ஒரு பிடி, மிளகு 10, சீரகம் 2 கிராம் சேர்த்து அரைத்துப் பசும் பாலில் 7 நாள் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நச்சு நீர் வெளியேறும்.(871)

 

19)  அறுகம்புல், மிளகு , சீரகம், அதிமதுரம், சிற்றரத்தை, மாதுளம்பூ ஆகியவற்றைச் சேர்த்து கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் வெட்டை நோய் குணமாகும்.(943)

 

20)  அறுகம்புல் ஒரு கைப்பிடி எடுத்து நறுக்கி, நீர் விட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி, அத்துடன் பால் , சர்க்கரை ஆகியவை சேர்த்து அருந்தி வந்தால் சிறுநீர்ப் பை வலுவடையும்.(964)

 

21)  அறுகம்புல் சாறு, பூசணிச் சாறு, வாழைத் தண்டுச் சாறு, இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடம்பில் சதை போடுவதைக் தடுக்கலாம்.(1056)

 

22)  அறுகம் புல்லை மைய அரைத்து அத்துடன் சிறிது சுண்ணாம்பு கலந்து வாய்ப் புண்கள் மீது பூசி வந்தால் அவை விரைவில் ஆறும்,(1138)

 

23)  அறுகம் புல்லை நீர் விட்டு அரைத்து வடிகட்டி, அத்துடன் சிறிது வெல்லம் சேர்த்துப் பருகி வந்தால் முகம் அழகு பெறும்.(1178)

 

24)  அறுகம்புல் வேரினை மைய அரைத்து பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் குணமாகும். மூலக் கடுப்பு விலகும்.(371)

 

25)  அறுகம்புல் வேர், ஆவாரம்பூ இரண்டையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து ஒருதேக்கரண்டி பொடியை எடுத்து பசுநெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும்.(374)

 

26)  அறுகம்புல் வேரையும், அகத்திவேரையும் சம அளவு எடுத்து நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் அவற்றை எடுத்துக் கசாயம் செய்து பருகினால் நீர்த்தாரை எரிச்சல் நீங்கும்.(482)

 

27)  அறுகம்புல் தைலம் எடுத்து உடல் முழுதும் தேய்த்துக் குளித்து வந்தால் சொறி சிரங்கு விலகிவிடும்.(2019)


===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க ! 


================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]

{30-04-2021}

================================================


அறுகு.