இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

வெங்காயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெங்காயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 ஜூன், 2021

வெங்காயம்

        மூலிகைப் பெயர்....................................வெங்காயம்

        மாற்றுப் பெயர்................................................................

        தாவரவியல் பெயர்......................................Allium cepa

        ஆங்கிலப் பெயர்.................................................ONION

    ================================================

 

01.   வெங்காயச் சாறு ஒரு துளி கண்ணில் பட்டால் போதும். சிறிது எரிச்சலுக்குப் பின் ஓய்வுடன் நல்ல தூக்கம் வரும்.  (032)

 

02.   வெங்காயச்  சாறும் இஞ்சிச் சாறும் சம  அளவு எடுத்து பருகி வந்தால் வாந்தி உடனே நிற்கும்.  (101)

 

03.   வெங்காயத்தை உப்பில் தொட்டு தின்று வந்தால் இரத்த வாந்தி நிற்கும்.  (292) (1281) வயிற்று வலி நிற்கும்.  (1587)

 

04.   வெங்காயச் சாறைக் கடுகு எண்ணெயில் கலந்து வலி உள்ள இடத்தில் தடவி வந்தால், மூட்டு வலி தீரும்.   (310)

 

05.   வெங்காயம், தும்பை வேர், வேளை இலை, சேர்த்து அரைத்து வைத்துக் கட்டினால் மூலம், பௌத்திரம் குணமாகும்.   (372)

 

06.   வெங்காயத்தை வதக்கி ஆசனவாயில் கட்டி வந்தால் வெளி மூலத்தால் ஏற்படும் தொந்தரவு தீரும்.  (378) நாளடைவில் குணமாகும்.  (388) (1970)

 

07.   வெங்காயத்தை அதிக அளவில் உணவுடன் சேர்த்து வந்தால், இரத்தம் சுத்தமாகும். இரத்தத்திலுள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் திறனுடையது வெங்காயம்.   (556)

 

08.   வெங்காயச் சாறை வேர்க்குரு மீது தடவி வந்தால், அவை மறையும். உடலும் குளிர்ச்சி பெறும்.  (781)

 

09.   வெங்காயத்தை (வெள்ளை வெங்காயத்தை) நெய்யில் வதக்கிச் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.  (783)

 

10.   வெங்காயத்தை நறுக்கி கடிவாயில் தடவினால் (தேய்த்தால்) விஷக்கடி வலி குறையும்.  (903)

 

11.   வெங்காயமும் செம்பருத்திப் பூவும் அரைத்து வழுக்கை மீது தடவி வந்தால். நாளடைவில் முடி முளைக்கும்.  (920)

 

12.   வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக அரிந்து, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி தீரும்.  (940)

 

13.   வெங்காயத்தை பச்சையாக மென்று தின்றால் நீர்க்கடுப்பு விலகி விடும்.  (988) (1576)

 

14.   வெங்காயம், பூண்டு ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறையும்.  (1059)

 

15.   வெங்காயத்தைச் சாறு பிழிந்து, அத்துடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து தினமும் காலையில் பல் துலக்கிய பின் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் பக்க வாதம் குணமாகும்.  (1105)

 

16.   வெங்காயச் சாறு அரை அவுன்ஸ் (15 மி.லி.) எடுத்து காலை, மாலை நான்கு நாள் சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள்  குணமாகும்.  (1183)  வாந்தி, கப வாந்தி ஆகியவை தீரும்.  (1199)

 

17.   வெங்காயத்தை மிக மெல்லியதாகச் சீவி பசு வெண்ணெயில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும்.  (1225)

 

18.   வெங்காயச் சாறு அரை அவுன்ஸ் (15 மி.லி.)  காலை, மாலை சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குணமாகும்.   (1685)


======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை,

[தி.பி:2052,விடை(வைகாசி )19]

{02-06-2021} 

================================================


வெங்காயம்


வெங்காயம்

வெங்காயம்

வெங்காயம் பூ