மூலிகைப் பெயர்.....................................பப்பாளி
மாற்றுப் பெயர்...........................................................
தாவரவியல் பெயர்..................................................
ஆங்கிலப் பெயர்...............................PAPAYA TREE
==================================================
01. பப்பாளியின் இலை, பழம், வேர், மரப்பால் ஆகியவை மருத்துவக் குணம் உடையவை. (Harish)
02. பப்பாளி இலையில் வைட்டமின் ஏ, பி-1, சி, இ, கால்சியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளன. (Harish)
03. பப்பாளிப் பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, சத்துகளும், நார்ச் சத்தும் உள்ளன. (Harish)
04. டெங்குக் காய்ச்சல் குறிகுணங்கள் இருக்கும் பொழுது பப்பாளி இலைச் சாறு 30 மி.லி முதல் 60 மி. லி வரை தினசரி இரு வேளைகள் அருந்தி வந்தால் நல்ல பலன் தரும். (Harish)
05. சுரம் இருக்கும்பொழுது காலையில் ஒரு தேக்கரண்டி அளவு பப்பாளி இலைச் சாறு வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் சுரம் தணியும். (Harish)
06. பப்பாளி இலையுடன், ஆரஞ்சுப் பழத்தையும் தண்ணீரில் இட்டுக் கொதிக்க வைத்து அருந்தி வந்தால் இரத்தத்தில் உள்ள கொழுப்பு குறையும். (Harish)
07. பப்பாளிச் சாறினை முகத்தில் தடவி வந்தால், முகம் மாசு மரு இல்லாமல் இருக்கும். முகப்பரு குறையும். (Harish)
08. காலில் ஆணி இருந்தால், பப்பாளி மரப் பாலினை வைத்து வந்தால், அவை சரியாகும். (Harish)
09. பப்பாளிப் பழத்தை அடிக்கடி உண்டு
வந்தால் வயிற்றுப் புழுக்கள் முற்றிலும் அழியும். (Harish)
10. மலக் கட்டு உள்ளவர்கள் தினசரி சிறிது பப்பாளிப் பழம் சாப்பிட்டு வந்தால், மலக் கட்டு சரியாகும். (Harish)
11. பப்பாளி வேரினை நன்கு கசக்கி, பல் மற்றும் ஈறுகளில் தடவினால் பல் வலி குறையும். (Harish)
12. வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பப்பாளிப் பழம் நல்லது. தினசரி 2 அல்லது 3 நீண்ட துண்டுகள் சாப்பிட்டு ஒரு துண்டினை முகத்திலும் கைகளிலும் தடவி வந்தால் வறட்சி நீங்கும். (Harish)
13. பப்பாளிப் பழத்தில் வைட்டமின் இ மற்றும் சி உள்ளதால் கொழுப்புகளின் அளவைச் சீர் செய்யும். (Harish)
14. பப்பாளிப் பாலைத் தீப்புண்களின் மீது தடவி வந்தால் தழும்புகள் வராது. (Harish)
15. பப்பாளிப் பழம் கல்லீரலைப் பலப் படுத்தும். உடலில் உள்ள கழிவுகளை அகற்றும் தன்மை பப்பாளிப் பழத்திற்கு உள்ளது. (Harish)
16. பப்பாளிக் காயைப் பிரசவித்த பெண்கள் சாப்பிட்டால் பால் சுரப்பு அதிகமாகும். (Harish)
17. (ஆதாரம்:- வேலூர், ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ் மருத்துவமனை, முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ. ஹரிஷ் அன்புச் செல்வன்
M.D.(s) அவர்கள்
09-12-2017 நாளிட்ட தினமலர் நாளிதழின் இணைப்பான பெண்கள் மலரில் எழுதிய கட்டுரை.)
18. பப்பாளிப் பழத்திற்கு மாலைக் கண் நோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது. மாலைக் கண் நோயின் அறிகுறி தென்பட ஆரம்பிக்கும் போதே பப்பாளிப் பழம் சாப்பிட ஆரம்பித்து விட்டால் மாலைக்கண் நோயை வரவிடாமால் தடுத்து விடலாம். (036)
19. பப்பாளிப் பழம் மாம்பழம் இரண்டையும் தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும். (363)
20. பப்பாளிப் பழம் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் இருக்காது. (369) (1168)
21. பப்பாளிப் பழத்தை உறவுக்குப் பின் சாப்பிட்டால் கருத் தரிக்காது.(586) (1874)
22. பப்பாளிப் பழம் சாப்பிட்டால் தொடர் வயிற்றுப் போக்கு குணமாகும். (704)
23. பப்பாளிப் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறலாம்.. (749) (1903) நோய் எதிர்ப்பு சக்தி உடலில் கூடும். (1997)
24. பப்பாளிப் பழத்தை மசித்து முகம், கழுத்து, கைகளில் பூசி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் முகம் அழகு பெறும். (833)
25. பப்பாளிப் பழம் மூல நோய்க்காரர்களுக்கு நல்லது. தயக்கமின்றி சாப்பிடலாம். நோய் குணமாக இது உதவியாக இருக்கும். (1212)
26. பப்பாளிக் காயை சமையல் செய்து அடிக்கடி உணவுடன் உட்கொண்டு வந்தால், உடலில் உள்ள தேவை இல்லாத கெட்ட நீர் சிறு நீர் வழியாக வெளியேறிவிடும். (949) தடித்த உடம்பு குறையும். (1185)
27. பப்பாளி இலையை அரைத்து யானைக் காய் நோய்க்குப் பற்றுப் போட்டு வந்தால், புண்கள் ஆறும். மிகுந்த பயன் உண்டு. (1046) (1773)
28. பப்பாளி இலைச் சாறு வேளைக்கு 50 மி.லி வீதம் குடித்து வந்தால் டெங்கு காய்ச்சல் சரியாகும்.
29. பப்பாளிப் பாலைத் தடவி வந்தால் வாய்ப் புண்கள், நாக்குப் புண்கள், தொண்டைப் புண்கள் ஆறிவிடும். (084) (1413) (1971)
30. பப்பாளிப் பாலை வெங்காயச் சாறுடன் கலந்து வேர்க்குரு உள்ள இடங்களில் தடவி வந்தால், வேர்க்குரு மறைந்து விடும். (1034) (2004)
31. பப்பாளிப் பாலை வெண்காரத்துடன் கலந்து தடவி வந்தாலும் வேர்க்குரு சரியாகிவிடும். (1036)
32. பப்பாளிப் பாலை படிக்காரத்துடன் கலந்து தடவி வந்தால் மண்டைக் கரப்பான் சொறி குணமாகும். (1444)
33. பப்பாளிப் பாலை விளக்கெண்ணெயில் கலந்து குடித்தால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும். (1412)
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,விடை(வைகாசி
)11]
25-05-2021}
===================================================
பப்பாளி |
பப்பாளி |
பப்பாளி |