இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

கருவேலமரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருவேலமரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

கருவேல மரம்

 

                     மூலிகைப் பெயர்.....................................கருவேல்

                     மாற்றுப் பெயர்..........................................................

                     தாவரவியல் பெயர்................. ACACIA NILOTICA

                     ஆங்கிலப் பெயர்................................BABUL TREE

      ===================================================

 

 

01.  கருப்பு நிறமும், எதிரடுக்கில் அமைந்த சிறிய இலைகளும், உருண்டை வடிவத்தில் மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ள மணமுள்ள பூக்களும் உள்ள மரம் கருவேல மரம்.

 

02.  இருபது அடி உயரம் வரை வளரக் கூடிய உறுதியான உள்ளமைப்பு உடைய கருவேலமரம் கிளைகளில் முட்கள் உள்ள அமைப்பு உடையது.

 

03.  கருவேல மரத்தின் காய்கள் ஆறு அங்குலம் நீளம் வரை வளரக் கூடியவை. பட்டையான அமைப்பு உரைய கருவேலங் காயின் இரு புற விளிம்புகளும் அலை அலையாய் நெளிந்த அழகிய தோற்றம் உடையவை.

 

04.  கருவேல மரத்தின் பிசின் தாள்களை ஒட்டுவதற்குப் பயன் படுத்தப்படுகிறது.

 

05.  கருவேல மர இலைகளைப் பறித்து வந்து அரைத்து இரவு தோறும் ஆசன வாயில் வைத்துக் கட்டி வந்தால் மூலம் குணமாகும்.(353) (387)

 

06.  கருவேல மர இலைகளை அல்லது கொழுந்துகளை மை போல் அரைத்து புண்கள் மீது வைத்துக் கட்டி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.(1033) (1004) (1916)

 

07.  கருவேலம் பிசினைச் சுத்தம் செய்து காய வைத்து இலேசாக வறுத்து தூள் செய்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு தாது புஷ்டியாகும்.(496)

 

08.  கருவேலங் கொழுந்தைக் கசக்கிச் சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.(172)

 

09.  கருவேலந் துளிரைப் பறித்து அரைத்து ஐந்து கிராம் மோரில் கலந்து உள்ளுக்குக் கொடுத்தால் உண்ட நஞ்சு முறியும்.(905)

 

10.  கருவேலம் பட்டையைப் பொடி செய்து பற்பொடியாக்கிப் பல் துலக்கி வந்தால் பல் நோய்கள் நெருங்காது.(248)

===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]

{30-04-2021}

================================================

நாட்டுக் கருவேல மரம்


கருவேல மரம்

கருவேலம் பூ

கருவேலம் பிசின்

கருவேலங்காய்



 

+