இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

எருமைத் தக்காளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எருமைத் தக்காளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

எருமைத் தக்காளி.

 

                 மூலிகையின்பெயர்.......... எருமைத் தக்காளி

                 மாற்றுப் பெயர்கள்........சொடக்குத் தக்காளி

                 தாவரவியல் பெயர்................................................

                 ஆங்கிலப் பெயர்.....................................................

 ================================================

 

 

01.  எருமைத் தக்காளி முட்டை வடிவ இலைகளும்,  இலை விளிம்புகளில் அலைகள் போன்ற ஓர வெட்டும் உடைய குத்துச் செடி. இரண்டு அடி உயரம் வரை வளரக் கூடியவை..

 

02.  எருமைத் தக்காளிக் காய்கள் பலூன் போன்ற மேல் உறையுடைய தோற்றம் உடையவை. அதற்குள் சுண்டைக்காய் அளவில் காய் இருக்கும். காய்களுக்குள் சன்னமான விதைகள் நிரம்ப இருக்கும்.

 

03.  எருமைத் தக்காளிச் செடியின் இலைகளும் காய்களும் மருத்துவக் குணம் உடையவை.  வலி நிவாரணியாகவும், கட்டிகளைக் கரைப்பானாகவும் செயல்படுகிறது.

 

04.  எருமைத் தக்காளி இராஜ பிளவை எனப்படும் புற்று நோய் திசுக்களை (செல்கள்) செயலிழக்கச் செய்யும் குணமுடையவை.

 

05.  எருமைத் தக்காளி சிறு நீர் பெருக்கியாகவும் செயல்படுகிறது. செரிமான ஆற்றலைத் தூண்டக் கூடியது.

 

06.  எருமைத் தக்காளி இலை மற்றும் காய்களைப் பறித்து வந்து நசுக்கி சிறிது மஞ்சள் தூள் கலந்து நீரிலிட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி தினசரி 2 வேளைகள் உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் உடல் வலி நீங்கும்

 

07.  எருமைத் தக்காளிக் காயையும் இலைகளையும் சேர்த்து மஞ்சள் சேர்த்து அரைத்து கொதிக்க வைத்து பற்றுப்போட்டு வந்தால் மூட்டு வலி நீங்கும். கட்டிகள் கரையும். புண்கள் ஆறும்.

 

08.  எருமைத் தக்காளி இலைகளை அரைத்து சிறிது வினிகர் சேர்த்து அத்துடன் அரை தேக்கரண்டி திப்பிலித் தூள் சேர்த்து மார்பில் பற்றுப் போட்டு வந்த்தால் தாய்மார்களுக்கு பால் சுரப்பு பெருகும்.

===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க ! 

===================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]

{30-04-2021}

 

===================================================

எருமைத் தக்காளி

எருமைத் தக்காளிப் பழம்