இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

யானைநெருஞ்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யானைநெருஞ்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 ஜூன், 2021

யானை நெருஞ்சி

      மூலிகைப் பெயர்..................................யானை நெருஞ்சில்

      மாற்றுப் பெயர்கள்.....................................................................

      தாவரவியல் பெயர்....................................................................

      ஆங்கிலப் பெயர்.........................................Pedalium Murex

 ==================================================

01.   பெருநெருஞ்சில் இலை 50  கிராம், அவரி வேர் 20 கிராம், இரண்டையும் அரைத்து எலுமிச்சங் காய் அளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்து வந்தால் , வெள்ளைபடுதல் குணமாகும்.  (608)

02.   பெரு நெருஞ்சிலைப் பிடுங்கி நீரில் ஒரு மணி நேரம் ஊறவிடவும். இந்த நீரில் பட்டு, நூல் துணிகளை ஊற வைத்து எடுக்க  அழுக்கு, கறை அகலும்.

03.   இலை, காம்பு, காய் அனைத்தும் பிடுங்கி ஒரு கையளவு, 250 மிலி சுத்தமான நீரில் போட்டு 30 நிமிடம் வைத்தால் அந்த நீரானது எண்ணெய் அல்லது குழம்பு போல் ஆகும். இதைக் குடித்தால் மெலனின் குறைபாட்டால் ஏற்படும் வெண் தோல் குணமாகும்.

04.   யானை நெருஞ்சில் காயைக் காய வைத்து நன்கு உலர்த்தி  கஷாயம் செய்து குடித்து வந்தால் சிறுநீரகக் கல் கரையும்.


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை,

[தி.பி:2052,விடை(வைகாசி )18]

{01-06-2021} 

========================================================


யானை நெருஞ்சி

யானை நெருஞ்சி விதை

யானை நெருஞ்சி

யானை நெருஞ்சி