இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

சிறுகுறிஞ்சா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகுறிஞ்சா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 21 மே, 2021

சிறுகுறிஞ்சா

 

             மூலிகைப் பெயர்...........................சிறு குறிஞ்சான்

             மாற்றுப் பெயர்கள்............குரிந்தை, குறிஞ்சான்,

             .....................................................சர்க்கரைக் கொல்லி

             தாவரவியல் பெயர்...................-.Hoptage madabttc / 

             ...........................................................Gymnema Sylvestris’

             ஆங்கிலப் பெயர்.......................Periploca of the woods

             சுவை....................................................................கசப்பு


====================================================

             

01.   சிறு குறிஞ்சான் எதிர் அடுக்கில் அமைந்த சிறிய இலைகளையும், இலைக் கோணத்தில் (கணுக்களில்) அமைந்த பூங் கொத்துகளையும் உடைய சுற்றுக்கொடி. முதிர்ந்த காய்களில் இருந்து பஞ்சுடன் இணைந்த விதைகள் காற்றில் பறந்து சென்று விதை பரவல் செய்யும்.(Asan)

 

02.   சிறு குறிஞ்சான் வேலிகளில் கொடியாகப் படரும் தாவரம். சுமார் 3 மீட்டர் வரை வளரக் கூடியது. இலைகள் சிறியதாகவும், முனைகள் கூர்மையாகவும், பூக்கள் வெளிர் மஞ்சள் வண்ணத்தில் இருக்கும். காய்கள் பச்சை நிறமானவை.(Asan)

 

03.   சிறு குறிஞ்சான் கொடியின் இலை, வேர் ஆகியவை மருத்துவப் பயன்கள் உடையவை. (Harish)

 

04.   சிறு குறிஞ்சான்  இலையில் ஜிம்னமிக் அமிலம் (Gymnemic Acid) இருப்பதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும். அத்துடன் டார்ட்டாரிக் அமிலம், பார்மிக் அமிலம், பியூட்ரிக் அமிலம் ஆந்தரகுயினோன், ரெசின்கள் போன்ற வேதிப் பொருள்களும் இருக்கின்றன.(Harish)

 

05.   சிறு குறிஞ்சானில் உள்ள இந்த வேதிப் பொருள்கள் மனித  உடலில் இன்சுலின் அளவை சரியான விகிதத்தில் வைத்துக் கொள்ள உதவுகின்றன.(Asan)

 

06.   சிறு குறிஞ்சான் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைச் சமன் படுத்தும்; உடல் எடையைக் குறைக்கும்; கெட்ட கொழுப்பை உடலில் சேராமல் தடுக்கும்; மலக் கட்டை நீக்கும்; சுரத்தைத் தணிக்கும்; இருமலைப் போக்கும்; நஞ்சுகளை உடலில் இருந்து வெளியேற்றும்.(Harih)

 

07.   சிறு குறிஞ்சான் இலை, பித்தம் பெருக்கும்; தும்மல் உண்டாக்கும்; வாந்தி உண்டாக்கும்;; நஞ்சு முறிக்கும்; வேர் காய்ச்சல் போக்கும்; நஞ்சு முறிக்கும் சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும்.(Asan)

 

08.   இவ்வினத்தில் சிறு குறிஞ்சான், பெருங்குறிஞ்சான் என இரு வகை உண்டு. இவை இரண்டின் குணமும் ஒன்றேயாகும்.(Asan)

 

09.   சிறு குறிஞ்சான் இலைப் பொடி நீரிழிவு நோயைத் தணிக்க வல்லது. வயிறு தொடர்பான சிறு நோய்களையும் தீர்க்க வல்லது.(Asan)

 

10.   சிறு குறிஞ்சான் இலையைப் பாலில் அவித்து நிழலில் உலர்த்தி மாப் போல் பொடித்து காலை உணவுக்குப் பின்னும், இரவு உணவுக்குப் பின்னும் ஒரு கிராம் எடை அளவாக உண்டுவர, நீரிழிவு நோய் கட்டுப் படும்; குணமடையும்.(Asan)

 

11.   சிறு குறிஞ்சான் இலை ஒரு பங்கும், 2 பங்கு தென்னம் பூவும் மையாய் அரைத்து பட்டாணி அளவாய் மாத்திரை செய்து, நிழலில் உலர்த்தி, காலை, மாலை ஒரு மாத்திரை வெந்நீரில் விழுங்க, சிறுநீர்ச் சர்க்கரை தீரும். மருந்து சாப்பிடும்வரை நோய் விலகி இருக்கும்.(Asan)

 

12.   சிறு குறிஞ்சான் வேர்ச் சூரணம் ஒரு சிட்டிகை, திரிகடுகு சூரணம் ஒரு சிட்டிகை, வெந்நீரில் கலந்து உட்கொண்டு வந்தால்  கபம் வெளியாகி ஆஸ்துமா, மூச்சுத் திணறல் தீரும்(126)(1074)(1810).(Asan)

 

13.   சிறுகுறிஞ்சான் வேரை எடுத்து நீரிலிட்டுக் காய்ச்சி, குடிநீர் செய்து , அந்தக் குடிநீரில் 50 – 60 மி.லி எடுத்து உள்ளுக்குக் கொடுத்தால் பாம்பு நஞ்சு மாறும். (Harish)

 

14.   சிறுகுறிஞ்சான் வேர்ப் பொடியை வெது வெதுப்பான நீரில் கலந்து குடித்தால் வாந்தி ஏற்பட்டு நஞ்சினால் ஏற்படும் ஒவ்வாமையை நீக்கும்.(Harish)

 

15.   சிறு குறிஞ்சான் வேருடன் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, தண்ணீர் கால் பாகமாகச் சுண்டியதும் வடித்துக் குடிக்க இருமல் தீரும்.(Harish)

 

16.   சுரத்திற்கு சிறு குறிஞ்சான் இலையுடன், சிறிது சுக்கும், மிளகும் சேர்த்துக் கசாயம் வைத்து மூன்று நாட்கள் இரண்டு வேளை அருந்த சுரம் தணியும்.(Harish)

 

17.   சிறுகுறிஞ்சான் கீரையை வாரத்திற்கு ஒருமுறை சமைத்து உண்டு வந்தால் உடல் சூடு தணியும்.(Harish)

 

18.   சிறு குறிஞ்சான்  கீரையுடன் பசுநெய், பாசிப்பருப்பு சேர்த்துச் சாப்பிட்டால் வாய்ப் புண்கள் குணமாகும்.(Harish)

 

19.   ஆமணக்கு எண்ணெய் விட்டு சிறுகுறிஞ்சான் இலைகளை வதக்கி நெறிக்கட்டிகளின் மீது வைத்துக் கட்டலாம்.(Harish)

 

20.   சிறுகுறிஞ்சான் கசாயத்தை 30 – 40 மி.லி வரை உணவுக்கு முன் அருந்தி வந்தால் உடல் எடை குறையும்.(Harish)

 

21.   சிறுகுறிஞ்சான் இலைப் பொடியுடன் நாவல் கொட்டைப் பொடியும் சேர்த்து 500 மி.கி  முதல் 1 கிராம் வரை  உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.(Harish)

 

22.   சிறு குறிஞ்சான் இலைப் பொடியை மட்டும் 500 மி.கி வீதம் தினசரி இருவேளை சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி குறையும்.(Harish)

 

23.   சிறு குறிஞ்சான் இலையைக் கசக்கி பாம்புக் கடி, வண்டுக்கடி ஏற்பட்ட இடத்தில் தடவினால், விஷம் வெளியேறும். இரத்தம் விருத்தியாகும்.(Harish)

 

24.    (தொ.எண். 3, 4, 6, 13 – 23 வரை ஆதாரம்:- வேலூர், ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ் மருத்துவமனை, முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ. ஹரிஷ் அன்புச் செல்வன் M.D.(s) அவர்கள் 18-11-2017 நாளிட்ட தினமலர் நாளிதழின் இணைப்பான பெண்கள் மலரில் எழுதிய கட்டுரை.)

 

25.   சிறு குறிஞ்சான் வேரை நீரில் இட்டு நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இரு வேளைகள் குடித்து வந்தால் காய்ச்சல், காசம், இருமல் குறையும்.(Asan)

 

26.   சிறுகுறிஞ்சான் வேர்ச் சூரணத்தை, திரிகடுகு (சுக்கு,மிளகு, திப்பிலி) சூரணத்துடன் நீரில் சேர்த்து உட்கொள்ளுங்கள். சுவாச காசம் தீரும்.(Asan)

 

27.   பாம்புக் கடிக்கு, சிறு குறிஞ்சான் வேரைக் காய வைத்துப் பொடித்து, ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில்  கலந்துகொடுக்க வேண்டும். உடனே , வாந்தி ஏற்படும். அத்துடன், பாம்பின் விஷமும் முறியும்.(Asan)

 

28.   சிறு குறிஞ்சான் கீரையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி, வீக்கம் உள்ள இடங்களில் கட்டினால் வலி குறையும்.(Asan)

 

29.   சிறு குறிஞ்சான் கீரையை வேகவைத்து, தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்துச் சாப்பிட்டால், ஈரல் பாதிப்புகள் நீங்கும்.(Asan)

 

30.   தினமும் பாசிப் பருப்புடன் சிறு குறிஞ்சான் கீரையை வேக வைத்து, நெய் கலந்து சமைத்து உண்டால் நன்றாகப் பசியைத் தூண்டும். வயிற்றுப் புண், வாய்ப் புண் விரைவில் குணமாகும்.(Asan)

 

31.   சிறு குறிஞ்சான் இலைகளைப் பறித்து நிழலில் உலர்த்திப் பொடித்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.(335) (1922)(Asan)

 

32.   சிறு குறிஞ்சான் இலைகளை வாரம் இருமுறை  உணவில் சேர்த்து வந்தால், உடல் சூடு தணியும்; நீரிழிவு கட்டுப்படும்.(Asan)

 

33.   சிறு குறிஞ்சான் இலைகளை நிழலில் உலர்த்தி சூரணம் செய்து, அதில் பத்தில் ஒரு பங்கு வால்மிளகுத் தூள் சேர்த்து, நன்றாகக் கலந்து, அதிலிருந்து 5 கிராம் எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிடுங்கள். நீரிழிவு நோய் குறையும்.(Asan)

 

34.   சிறிதளவு பாலில் சிறு குறிஞ்சான் இலைகளைப் போட்டு  அவித்து, நிழலில் உலர்த்திப் பொடி செய்து, காலை உணவுக்குப் பின்னும், இரவு உணவுக்குப் பின்னும் ஒரு கிராம் எடுத்து உண்டு வந்தால் நீரிழிவு நோய் தணியும்.(Asan)

 

35.   சிறுகுறிஞ்சான் இலைகளை நன்றாகச் சுத்தம் செய்து, அதனுடன் தேவையான அளவு நீர் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து அவித்து, வாரம் இருமுறை உட்கொண்டாலும் சர்க்கரை நோய் குறையும்.(Asan)

 

36.   சிறு குறிஞ்சான் இலைகளை நிழலில் காய வைத்து இடித்து தூள் செய்து சலித்து வைத்துக் கொண்டுஅரை தேக்கரண்டி அளவுக்கு  எடுத்து நெய்யில் குழைத்துச் சாப்பிட்டாலும் சிறு நீரில் சர்க்கரையின் அளவு குறையும்.(Asan)

 

37.   தலா அரைத் தேக்கரண்டி அளவு, சிறு குறிஞ்சான் இலைப் பொடி, சிறியாநங்கை இலைப் பொடி, நாவல் கொட்டைப் பொடி, நெல்லி முள்ளிப் பொடி, வெந்தயப் பொடி, இவைகளை ஒரு தம்ளர் நீரில் கலந்து கொதிக்க வைத்து காலை மாலை குடித்து வரலாம். சர்க்கரை நோய்த் தாக்கம் குறையும்.(Asan)

 

38.   தேவையான அளவு சிறு குறிஞ்சான் இலை மற்றும் நாவல் கொட்டையை எடுத்து நிழலில் உலர்த்தி, பொடித்து வைத்துக் கொண்டு, தினமும் காலை ஒரு குவளை தண்ணீருக்கு ஒரு தேக்கரண்டி பொடி வீதம் போட்டுக் காய்ச்சி, கசாயமாக்கி அருந்தி வந்தாலும், நீரிழிவு கட்டுக்குள் வரும். (Asan)

 

39.   தலா ஒரு சிட்டிகை திரிகடுகு சூரணம், சிறு குறிஞ்சான் வேர்ச் சூரணம் , இவற்றை வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் சளி, ஆஸ்துமா மறையும்.(Asan)

 

40.   சிறு குறிஞ்சான் இலையை நிழலில் உலர்த்திப் பொடி செய்து அரை தேக்கரண்டி எடுத்து காலையில் கசாயம் வைத்து குடியுங்கள். உடல் வலு அடையும். (Asan)

 

41.   நமது உடலில் இருக்கும் கணையத்தின் நுண்ணறைகள் இன்சுலினை உற்பத்தி செய்கின்றன. இந்த நுண்ணறைகளின் செயல்பாட்டில் ஏற்படும் குறைபாடே இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இந்த நுண்ணறைகளின் செயல் பாட்டினைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்வதில் சிறு குறிஞ்சான் பெரும் பங்கு வகிக்கிறது. (Asan)

 

42.   நீரிழிவு நோயாளிகள் சிறு குறிஞ்சான் இலையைப் பறித்து  தினசரி ஒன்று வீதம் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுக்குள் இருக்கும்.(Asan)

 

43.   (ஆதாரம்:- நாகர்கோயில், எஸ்.மகாலிங்கம் ஆசான், 23-10-2016 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கட்டுரை.)


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

 

===================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )07]

{21-05-2021}

===================================================


சிறுகுறிஞ்சா

சிறுகுறிஞ்சா

=