இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 18 மே, 2021

கேழ்வரகு

 

 

              மூலிகையின் பெயர்......................................கேழ்வரகு

              மாற்றுப் பெயர்கள்...........இராகி, கேப்பை, ஆரியம்

              தாவரவியல் பெயர்....................ELEUSINE CORACANA

              ஆங்கிலப் பெயர்.........................RAGI, FINGER MILLET

 

 =================================================

 

01.   கேழ்வரகு 170 செ.மீ உயரம் வரை வளரும். சல்லி வேர், பக்க வேர் அமைப்பைப் பெற்றிருக்கும். நேரான, மென்மையான, நீள்வட்டமான குறுக்கு வெட்டுத் தோற்றம் உடைய தண்டுகளைப் பெற்றிருக்கும். (Asan)

 

02.   பச்சை நிறத்தில் தண்டுகள், கிளைகள், இலைகளைக் கொண்டிருக்கும். அடிக் கணுக்கள் சிறியதாக் காணப்படும். நீளமான நுனிக்கணு பூங்கொத்தைத் தாங்கியிருக்கும். இலைப் பரப்பு நடு நரம்புடன், நுனியில் முடிக் கற்றைகளுடன் அமைந்திருக்கும். விதைகள் உருண்டை வடிவத்தில் இருக்கும். (Asan)

 

03.   கேழ்வரகு மாவில் இரும்புச் சத்தும் சுண்ணாம்புத் சத்தும் நார்ச் சத்தும் மிகுதியாக உள்ளன. இவையன்றி புரதம், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், பொட்டாசியம், கார்போஹைடிரேட், தயாமின், கரோடின், ரிபோபிளேவின், நைசின், போலிக் அமிலம் போன்ற சத்துகளும் உள்ளன. (Asan)

 

04.   கேழ்வரகில், அரிசி, கோதுமைகளை விட அதிகமான ஊட்டச் சத்துக்கள் உள்ளன (Asan)

 

05.   குறைந்த கொழுப்பு, நிறைந்த மாவுச் சத்து மற்றும் தாதுக்கள் காணப்படுகின்றன. பாலை விட மூன்று மடங்கும் (Asan)

 

06.   இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை (L.D.L) குறைத்து நல்ல கொழுப்பை (H.D.L) மிகுதியாக்கும் குணம் கேழ்வரகுக்கு உள்ளது. (Asan)

 

07.   குழந்தைகளின் உணவில் கேழ்வரகு சேர்த்து வந்தால் அவர்களது எலும்பை உறுதியாக்கும். மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கும். (Asan)

 

08.   கேழ்வரகு மாவினை எடுத்து சிறிது நீர் விட்டுக் கரைத்து அடுப்பில் ஏற்றிக் கொதிக்க வைத்துக் களியாக்கி, அத்துடன் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்துப் பிசைந்து பசை போல் ஆக்கி இளஞ் சூட்டில் கட்டிகளின் மேல் பற்றுப் போட்டால், கட்டி உடைந்து சீழ் வெளியேறி புண் குணமாகும். வலி தணியும். வீக்கம் குணமகும். (Asan)

 

09.   கேழ்வரகுப் புல் (தாள்) எடுத்து அரிந்து, அத்துடன் சிறிது நீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். அத்துடன் சிறிது சீரகப் பொடி, சிறிது மிளகுப் பொடி சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி 3 வேளைகள் அருந்தினால் சுரம் நீங்கும். வயிற்று வலி, வயிற்றுக் கடுப்பு, வயிற்று உப்புசம் ஆகியவை விலகும். (Asan)

 

10.   கேழ்வரகினை மாவாக அரைத்து கஞ்சி வைத்தோ அல்லது களியாகக் கிண்டியோ அருந்தி வந்தால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குத் தீங்கு விளைவிக்காத சிறந்த உணவாக அமையும். (Asan)

 

11.   கேழ்வரகு, பனைவெல்லம், சிறிது சுக்கு சேர்த்து நன்றாக அரைத்து, மாவாக வைக்கவும். தினமும் ஒரு தம்ளர் பால் அல்லது  தண்ணீரைக் கொதிக்க வைத்து ,தேவையன அளவு மாவைச் சேர்த்து, பிள்ளைகளுக்குக் கொடுங்கள். எலும்பு வளர்ச்சி பெறும்; உறுதியாகும். (Asan)

 

12.   கேழ்வரகை ஊற வைத்து, முளைக் கட்டி, உலர்த்தி, மாவாக அரைத்து, கஞ்சி காய்ச்சி, கர்ப்பிணிகள் குடித்து வரலாம். குழந்தை சரியான எடையில் வளர்ச்சி பெறும். (Asan)

 

13.   (ஆதாரம்: நாகர்கோயில் எஸ். மகாலிங்கம் ஆசான் 11-09-2016 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கட்டுரை.)

 

14.   கேழ்வரகுக் கூழ் செய்து சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும் .(1221)

 

15.   கேழ்வரகு மாவு, எள்ளு, சிறிது வெல்லம் ஆகியவை சேர்த்து இடித்து அடை செய்து சாப்பிட்டு வந்தால்  உடல் நலம் பெறும் .(1945)

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )04]

{18-05-2021}

==================================================


கேழ்வரகு

கேழ்வரகு

கேழ்வரகு

குன்றிமணி

 

                  மூலிகைப் பெயர்...................................குன்றிமணி
                  மாற்றுப்பெயர்கள்................................குண்டுமணி
                  ....................................................................குன்றி வித்து
                  தாவரவியல் பெயர்................ABRUS PRECATORIUS

                  ஆங்கிலப் பெயர்........................................JEQUIRITY
                  சுவை.........................................சிறு கசப்பு, இனிப்பு
                  தன்மை(இலை).............................................குளிர்ச்சி
                  தன்மை(வேர் & விதை)................................வெப்பம்

 =================================================


01.     குன்றிமணியில் வெண்மை, கருமை, செம்மை, மஞ்சள், நீலம் என ஐந்து வகைகள் இருக்கின்றன. இவற்றுள் வெண்மை, கருமை, செம்மை கிய மூன்று மட்டுமே முக்கியமானவை.

 

02.     பூக்கள் வெண்மையாயிருப்பின் விதையும் வெண்மையாயிருக்கும்.

 

03.     குன்றிமணி கொடி வகையைச் சேர்ந்தது. குன்றிமணி இலையை மென்று சாற்றை விழுங்குவதால் குரல் கம்மல் நீங்கும்.

 

04.     எள் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன்  குன்றிமணி இலைச் சாற்றைக் கலந்து வலியுள்ள வீக்கங்களுக்குப் பூசிவர வீக்கம் நீங்கும்.

 

05.     குன்றிமணி விதையைத் தனியாகவோ, மற்ற மருந்துகளுடனோ சேர்த்து அரைத்து, அடிபட்ட வீக்கம், வலி, கீல்வாயு, பக்க வலி, முடியுதிரல் முதலியவைகளுக்குத் தரலாம்.

 

06.     வெள்ளைக் குன்றிமணி வேரை வெள்ளாட்டு மூத்திரத்தில் ஊற வைத்து உலர்த்தி பாம்பு, தேள் முதலியவற்றின் நஞ்சுக்குக் கொடுக்க அது உடனே தீரும். இதற்கு விடதாரி என்று பெயர்.

 

07.     சிவந்த குன்றிமணிப் பருப்பினால் கணணோய், அழல் நோய், மாறு நிறம், காமாலை, வியர்வையோடு கூடிய மூர்ச்சை சுரம் ஐய (கபம்) நோய் ஆகியவை தீரும்.

 

08.     மலை வெண் குன்றி வேரையே அதிமதுரம் என்று சிலர் கூறுகிறார்கள். இது தவறு.

 

09.     குன்றிமணி இலையைக் கொண்டுவந்து இடித்துப் பிழிந்து சாறு எடுத்து வாய்ப் புண்களுக்குத் தடவினால் புண்கள் குணமாகும்.

 

10.     வயதாகியும் ஒரு சில பெண்கள் பூப்பு அடையாமலிருப்பது உண்டு. குன்றிமணி இலையை எடுத்து சமனளவு எள்ளும் அதே அளவு வெல்லமும் சேர்த்து இடித்து எலுமிச்சம் பழ அளவுக்கு உள்ளுக்குக் கொடுத்துவிட்டால், 24 மணி நேரத்திற்குள் பூப்பு அடைவார்கள். இரத்தப் போக்கு அதிகமாக இருந்தால், வாழைக்காயைத் தோலைச் சீவிவிட்டுக் காயை மட்டும் தின்னக் கொடுக்க வேண்டும். குன்றி மணி இலை மருந்தை ஒரு முறை தான் கொடுக்க வேண்டும்.

 

11.     குன்றிமணி இலைச் சாறுடன் வெண்கொடி வேலி வேரும் சேர்த்து அரைத்து வெண்புள்ளிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் வெண்புள்ளிகள் மறையும். (774) (1010)

 

12.     குன்றிமணியும் வெந்தயமும் எடுத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, 7 நாட்களுக்குப் பின் எண்ணெயைத் தலைக்குத் தடவி வந்தால் முடி உதிர்வது நிற்கும்.(927)

 

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

 

=================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )04]

{18-05-2021} 

=================================================


குன்றிமணி

குன்றிமணி

குன்றிமணி

குன்றிமணி