இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

வெந்தயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெந்தயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 ஜூன், 2021

வெந்தயம்

    மூலிகைப் பெயர்.........................................................வெந்தயம்

    மாற்றுப் பெயர்கள்......................................மெந்தியம், மேதி

    ................................................................................................வெந்தை

    தாவரவியல் பெயர்...........TRIGONELLA FOENUM GRAECUM. 

    ஆங்கிலப்பெயர்........................................................FENU GREEK

===================================================

 

01.   வெந்தயம் நேராக, உயரமாக 50 செ.மீ அளவுக்கு வளரும் சிறு செடி வகையே. இலைகள் எதிரெதிர் அடுக்கில் மூவிலைகளயும், வெண்மை நிறப் பூக்களையும் இரண்டு செ.மீ நீளமான காய்களையும் உடையவை. காய்களில் மஞ்சள் நிற விதைகள் இருக்கும்.

 

02.   இந்தக் காய்ந்த விதைகளையே வெந்தயம் என்று அழைக்கிறோம். கைப்புச்  சுவையும் குளிச்சித் தன்மையும் கொண்டது வெந்தயம்.

 

03.   வெந்தயச் செடியின் இலை, விதை ஆகியவை மருத்துவக் குணம் உடையவை.

 

04.   இதில் வைட்டமின் B-3, B-6, C, A ஆகியவையும், இரும்புச் சத்து, கால்சியம், சுண்ணாம்புச் சத்து, சோடியம், தையாமின், நிக்கோடினிக் அமிலம், பாஸ்பரஸ், புரதச் சத்து, பொட்டாசியம், ரிபோபிளேவின்,  மெக்னீஷியம், தாமிரச் சத்து, நார்ச் சத்து, ஆகியவையும் உள்ளன.(Harish)

 

05.   வெந்தயத்தின் பொது நன்மைகள்:- கொலஸ்ட்ராலைக் குறைக்கும்; இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் ஒழுங்கு படுத்தும்;  பெண்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கும்; செரிமானத்தை ஒழுங்குபடுத்தும்; எடை குறைய உதவும்; மாதவிடாய்  காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்யும்; முடி வளர்ச்சிக்கு உதவும்.(Harish)

 

06.   வெந்தயம் இரண்டு தேக்கரண்டி எடுத்து இரவில் ஊற வைத்து காலையில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். இந்தத் தண்ணீரில் பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி வந்தால் முகப் பரு குணமாகும்.(Harish)

 

07.   வெந்தயத்தில் வழவழப்புத் தன்மை உள்ளதால், சருமத்தில் உள்ள ஈரப் பதத்தைக் காக்கும்.  அதற்கு வெந்தயப் பொடியைத் தண்ணீர் சேர்த்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவி வர வேண்டும்.(Harish)

 

08.   வெந்தயம் ஒரு தேக்கரண்டி எடுத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து ஒரு ஜாடியில் அடைத்து மூன்று வாரங்கள் வெயிலில் வைத்து, பின்பு தலைக்குத் தேய்த்துத் தலை வாரி வந்தால், முடி வளர்ச்சி மிகுதியாகும்.(Harish)

 

09.   வெந்தய விதையில் லெசித்தின் என்ற வேதிப் பொருள் இருப்பதால், தலை முடி பள பளப்பாக இருக்க உதவும்.(Harish)

 

10.   வெந்தயப் பொடி சேர்த்த தேநீரை அருந்தினால் பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பு மிகுதியாகும். வெந்தய விதையில் இருக்கும் பைபோ ஈஸ்ட்ரோஜன் இதற்கு உதவும்.(Harish)

 

11.   வெந்தயப் பொடியை வெயில் காலத்தில் ஏற்படும் கொப்புளங்களுக்கு, தண்ணீர் சேர்த்து, தூய்மையான துணியில் தடவி, கொப்புளங்கள் மீது போட்டு வந்தால் கொப்புளங்கள் குணமாகும். (Harish)

 

12.   வெந்தயப்பொடி 2 – 3 கிராம் எடுத்து ஒரு நாளைக்கு இருவேளை வீதம் தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.(Harish)

 

13.   வெந்தயம் ஒரு தேக்கரண்டி எடுத்து தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்து, வடிகட்டிய பின் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் எலுமிச்சம் பழச் சாறு கலந்து அருந்தி வந்தால் சுரம் குறையும்.(Harish)

 

14.   வெந்தய விதை, கொழுப்பு மற்றும் சர்க்கரையின் வளர் சிதை மாற்றத்தை ஊக்குவிப்பதால் உடலின் எடை கூடாமல் இருக்கும்.(Harish)

 

15.   வெந்தய இலை மற்றும் விதை மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் சேதத்தைச் சீர்படுத்த  பெரிதும் உதவும்.(Harish)

 

16.   வெந்தய இலையை உணவாகச் செய்து சாப்பிட்டு வந்தால், ஆண்களுக்கு ஏற்படும் விந்து முந்துதல் என்னும் பிரச்சினை சரியாகும்.(Harish)

 

17.   வெந்தய விதையில் டைசோசீன் மற்றும் ஐசோஃப்ளவன்ஸ் இருப்பதால் மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளைச் சீர் செய்யும்.(Harish)

 

18.   வெந்தய இலையுடன் பாதாம் பருப்பு, கசகசா, கோதுமைப்பால், நெய், கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டால் உடல் வலிமை பெறும்.(Harish)

 

19.   வெந்தய இலைகளை அரைத்து வீக்கங்களின் மீது பற்றுப் போட்டு வந்தால், வீக்கம் குணமாகும்.(Harrish)

 

20.   வெந்தய  இலையுடன் தேங்காய்ப் பால், முட்டை, நெய் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும்.(Harish)

 

21.   வெந்தய விதையை மோருடன் அரைத்து, தழும்புகளின் மீது பற்றுப் போட்டு வந்தால், அவை மறைந்து விடும். (Harish)

 

22.   வெந்தய விதை, பிள்ளைப் பேறு வலியைக் குறைக்கும் தன்மை கொண்டது.(Harish)

 

23.   (ஆதாரம்: டாக்டர். வெ. ஹரிஷ் அன்புச் செல்வன் M.D (s), முதன்மை மருத்துவ அதிகாரி, ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், வேலூர், அவர்களின் கட்டுரை, தினமலர், பெண்கள் மலர், நாள் 27-05-2017)

 

24.   வெந்தயத்தை நன்றாக அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு குறையும். .(Asan)

 

25.   வெந்தயத்தை அரைத்து தீப்புண்கள் மீது தடவினால் எரிச்சல் குறைந்து புண்கள் ஆறும். .(Asan)

 

26.   வாரம் ஒரு முறை வெந்தயத் தண்ணீர் குடித்தால் மலச் சிக்கல் தீரும். .(Asan)

 

27.   வெந்தயத்துடன் சிறிது இஞ்சி சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் பித்தம் விலகும். .(Asan)

 

28.   வெந்தயத்தை செவ்வாழைப் பழத்துடன் சாப்பிட்டால் சீதபேதி சீராகும். .(Asan)

 

29.   வெந்தயம், கோதுமை ஆகியவற்றை வறுத்து கஞ்சியாக வைத்துச் சாப்பிடுங்கள். உடல் வெப்பம் தணியும். .(Asan)

 

30.   இட்லி, தோசை மாவுடன் வெந்தயத்தை சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் பலம் பெறும். .(Asan)

 

31.   வெந்தயம் 5 கிராம் எடுத்து தண்ணீரில் ஊறவைத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும். .(Asan)

 

32.   வெந்தயத்தை சிறிதளவு எலுமிச்சம் பழச் சாற்றுடன் சேர்த்து அரைத்து காலை மாலை அருந்தி வந்தால் கல்லீரல் பிரச்சினைகள் கட்டுப்படும். .(Asan)

 

33.   வெந்தயம், பூண்டு, பெருங்காயம், முருங்கை ஈர்க்கு ஆகியவை தலா 5 கிராம் எடுத்து, நீர் விட்டு  அரைத்து வடிகட்டி நீரை மட்டும்  மூன்று வேளைகள் ஒரு அவுன்ஸ் வீதம் குடித்து வந்தால் வயிற்றுக் கடுப்பு குறையும். .(Asan)

 

34.   வெந்தயம் 10 கிராம் எடுத்து சிறிது நெய் விட்டு வறுத்து, அரைத் தேக்கரண்டி சோம்பு, சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து மோரில் கலந்து அருந்தினால் வயிற்றுப் போக்கு கட்டுப்படும். .(Asan)

 

35.   பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரையை வதக்கி, 2 தம்ளர் நீர் விட்டு சுண்டக் காய்ச்சி, அரைத் தம்ளர் வீதம் காலை, மாலை இரு வேளை குடித்தால் நெஞ்சு வலி தணியும். .(Asan)

 

36.   ஒரு பிடி வெந்தயக் கீரையில் சிறிதளவு புளி, காய்ந்த அத்திப் பழம் 2 (நறுக்கியது), உலர் திராட்சை 10, ஒரு தம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, சிறிதளவு தேன் கலந்து பருகினால், மார்பு வலி, மூச்சடைப்பு சரியாகும். .(Asan)

 

37.   வெந்தயத்தை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிடுங்கள். இதயம் மேம்படும். புற்று நோய், கல்லீரல் பாதிப்புகளை நீக்கும். மூட்டு வலியைக் குறைக்கும். உடல் குளிர்ச்சி அடைந்து, சூடு தடுக்கப்படும். எடை குறையும். செரிமானக் கோளாறுகள், வாயுத் தொல்லை நீங்கும். மலச்சிக்கல், குடல் புண் (அல்சர்) வராமல் தடுக்கும். .(Asan)

 

38.   ஒரு தேக்கரண்டி அளவு வெந்தயப் பொடியை ஒரு வாரம் காலை மாலையில் வெந்நீருடன் உட்கொள்ளும் பெண்களுக்கு வெள்ளைப் படுதல் சரியாகும். .(Asan)

 

39.   சிறிதளவு வெந்தயம் , சீரகம் இரண்டையும் எடுத்து பொடித்து ஒரு தம்ளர் மோரில் கலந்து குடித்தால் வாயுத் தொல்லை குறையும். .(Asan)

 

40.   வெந்தயக் கீரையைக் கூட்டு வைத்து பகலில் சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை தீரும். .(Asan)

 

41.   பாலில் ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் பேன் தொல்லை, பொடுகுத் தொல்லை நீங்கும், .(Asan)

 

42.   தேங்காய் எண்ணெயில் சிறிதளவு வெந்தயப் பொடி, கற்பூரம் சேர்த்து ஊற வைத்து குளித்து வந்தாலும் பேன், பொடுகு மறையும். .(Asan)

 

43.   குழந்தை பெற்ற தாய்மார்கள் அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்துக் கஞ்சி வைத்துச் சாப்பிட்டு வந்தால் பால் சுரப்பு அதிகமாகும். .(Asan)

 

44.   முளைகட்டிய வெந்தயத்தை உட்கொண்டாலும் பால் சுரப்பு மிகுதியாகும். .(Asan)

 

45.   வெந்தயமும் கருப்பட்டியும்  சேர்த்து உளுந்துக் களி செய்து சாப்பிட்டாலும் பால் சுரப்பு மிகுதியாகும். .(Asan)

 

46.   வெந்தயத்தை தேங்காயெண்ணெயில் ஊறவைத்து தலைக்குத் தடவி வந்தால் முடி நீளமகவும் கருமையாகவும் வளரும். .(Asan)

 

47.   வெந்தயத்தை வறுத்துப் பொடியாக்கி மோரில் கலந்து குடித்தால் வயிற்று வலி தீரும். .(Asan)

 

48.   வெந்தயம் 100 கிராம் எடுத்து வறுத்து, பொடித்து 200 கிராம் வெல்லம் சேர்த்து உண்டால் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி, இடுப்பு வலி குறையும். .(Asan)

 

49.   வெந்தயக் கீரையுடன் கோழிமுட்டை, தேங்காய்ப் பால், நெய் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் இடுப்பு வலி கட்டுப்படும்.(Asan)

 

50.   (தொ. எண் 25 முதல் 49 வரை, ஆதாரம்:- நாகர்கோயில், எஸ். மகாலிங்கம் ஆசான் 29-01-2017 இராணி வார இதழில் எழுதிய கட்டுரை.

 

51.   வெந்தயத்தை வறுத்து இடித்து வெல்லம் சேர்த்துப் பிசைந்து நான்கு முறை ( 4 வேளை அல்ல ) சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.  (096)  (689)

 

52.   வெந்தயப் பொடியை வேளைக்கு ஒருதேக்கரண்டி வீதம் தினசரி காலை, மாலை சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும்.   (614)

 

53.   வெந்தயப் பொடி ஒரு தேக்கரண்டி, பனங்கற்கண்டு இரண்டு தேக்கரண்டி எடுத்து வடித்த கஞ்சியுடன் கலந்து குடித்தால் வயிற்று வலி உடனே குணமாகும்.  (656)

 

54.   வெந்தயத்தை காலையில் எழுந்ததும் வாயில் போட்டு தயிர் குடித்தால் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.  (717)

 

55.   வெந்தயத்தை வேக வைத்து, தேன்விட்டுப் பிசைந்து கூழாக்கி உட்கொண்டால் மார்பு வலி  குணமாகும்.  (977) (1169)

 

56.   வெந்தயத்தை இரவில்படுக்கப் போகும் முன் தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்ததும் உட்கொண்டால் உடல் பருக்கும். எடை கூடும்.  (1251)

 

57.   வெந்தயக் கஞ்சி சாப்பிட்டு வந்தால் பெண்களுக்குத் தாய்ப் பால் பெருகும்.  (1280) (2024)

 

58.   வெந்தயத்தை அடிக்கடி உணவில் பயன்படுத்தி வந்தால் மூத்திர உறுப்புகளைச் சுத்தப் படுத்தும்.   (1290)

 

59.   வெந்தயக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டால் இருமல் உடனே குணமாகும்.  (161)


======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

=============================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை,

[தி.பி:2052,விடை(வைகாசி )19]

{02-06-2021} 

=============================================


வெந்தயம்


வெந்தயம்

வெந்தயம்

வெந்தயம்


வெந்தயம்