இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

கோவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 20 மே, 2021

கோவை

 

         மூலிகைப் பெயர்...............................கோவை

         மாற்றுப் பெயர்கள்..............................................

         தாவரவியல் பெயர்...........................COCCINIA

         ஆங்கிலப் பெயர்..................SCARLET GOURD

 

==================================================


01.   கோவையில் இனிப்புக் கோவை, கைப்புக் கோவை என இரு வகைகள் உள்ளன.

 

02.   கோவை இலையைக் கசக்கிச் சாறு எடுத்து தாய்ப் பாலுடன் கலந்து தினசரி 3 வேளைகள் கண்ணில் விட்டு வந்தால், சுண்ணாம்பு கண்ணில் விழுந்ததால் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும்.(020)

 

03.   கோவை இலைச் சாறினைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.(434)

 

04.   கோவை இலைச் சாறுடன் கருஞ்சீரகப் பொடி  5 கிராம் சேர்த்து அரைத்து, படை மீது தடவி ஒரு மணி நேரம் கழித்துக் குளித்து வந்தால் படை குணமாகும்.(437)

 

05.   கோவைக்காய் இரண்டினை தினசரி சாப்பிட்டு வந்தால் மதுமேகம் (நீரிழிவு நோய்) அருகில் கூட நெருங்காது.(619)

 

06.   கோவைப் பழம் சாப்பிட்டு பல் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.(242) (1139)

 

07.   கோவைப் பழம் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.(331)


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !


==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )06]

{20-05-2021}

==================================================



கோவைக்கொடி

கோவைக்கொடி

கோவைக்கொடி

கோவைக்காயும் கனியும்

கோவைக்காய்