இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

மூக்கிரட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மூக்கிரட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 ஜூன், 2021

மூக்கிரட்டை

       மூலிகைப் பெயர்..........................................மூக்கிரட்டை

       மாற்றுப் பெயர்கள்................புட்பகம், இரத்தபுட்பிகா 

       ................................மூக்குறட்டை, மூக்கரைச்சாரணை

       ...............................................................................சாட்டரணை

       தாவரவியல் பெயர்.................... BOERHAAVIA DIFFUSA.

       ஆங்கிலப் பெயர்.................................................HOG WEED

       சுவை...............................................................................கைப்பு

       தன்மை........................................................................வெப்பம்

 

===================================================

 

 

01.  மூக்கிரட்டையானது ஒரு புறம் வெளுத்த நீள் வட்ட இலைகளையும் செந்நிறப் பூக்களையும் சிறு கிழங்கு போன்ற வேர்களையும் உடைய தரையோடு படர்ந்து வளரும் சிறு  செடி

 

02.  மூக்கிரட்டை இலை, வேர் ஆகியவை மருத்துவப் பயன் உடையவை.. வேர் மலமிளக்கும். சிறுநீர் பெருக்கும்.

 

03.  மூக்கிரட்டை இலையை உணவு முறையாகவேனும், மருத்துவ முறையாகவேனும், புசித்து வர உடலில் உள்ள கபநோய்கள் ஒன்றுந் தலைகாட்டாது. அவை பெட்டியிற் பாம்பு போல அடங்கிவிடும்.

 

04.  மூக்கிரட்டை வேர் ஒரு பிடி, 4 மிளகும் 100 மி.லி விளக்கெண்ணெயில் வாசனை வரக் காய்ச்சி, ஆறவிட்டு, வடிகட்டி வைத்துக் கொண்டு 6 மாதக் குழந்தைக்கு 15 மி.லி வீதமும், அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 30 மி.லி வீதமும் வாரம் 1 அல்லது 2 முறை கொடுத்துவர மலச்சிக்கல், மூலச்சூடு, நமைச்சல், சொறி சிரங்கு, மலக்கழிச்சல், வாந்தி, செரியாமை ஆகியவை தீரும். மாலையில் வசம்பு சுட்ட கரியைப் பொடி செய்து தேனில் குழைத்துக் கொடுக்க வேண்டும் 

 

05.  மூக்கிரட்டை வேர் ஒரு பிடி, மிளகு 4 , உத்தாமணிச்சாறு 50 மி.லி ஆகியவற்றை 100 மி. லி விளக்கெண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி வாரம் 2 முறை மேற்கண்ட முறையில் கொடுத்துவரக் குழந்தைகளுக்குக் காணும் காமாலை, கப இருமல், சளி, மாந்த இழுப்பு, அடிக்கடி சளி காய்ச்சல் வருதல் குணமாகும்.

 

06.  மூக்கிரட்டை வேர் ஒரு பிடி, அருகம்புல் ஒரு பிடி, மிளகு 10 எண்ணிக்கை இவற்றைச் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி, வடிகட்டி 3 வேளையாகத் தினமும் குடித்துவர கீல் வாதம், ஆஸ்துமா, கப இருமல், மூச்சுத் திணறல் தீரும்.

 

07.  மூக்கிரட்டை வேர் ஒரு பிடி, அருகம் புல் ஒரு பிடி, கீழாநெல்லி ஒரு பிடி, மிளகு 10 எண்ணிக்கை இவற்றைச் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு, கால் லிட்டராகக் காய்ச்சி தினம் 2 வேளை சாப்பிட்டு வரக் காமாலை, நீரேற்றம், சோகை, வீக்கம், நீர்க்கட்டு, மகோதரம் தீரும்.

 

08.  மூக்கிரட்டை இலையைப் பொறியல், துவையலாக வாரம் 2 முறை சாப்பிட்டு வரக் காமாலை, சோகை, வாயுநோய்கள் வராமல் தடுக்கலாம்.

 

09.  மூக்கிரட்டை வேரை உலர்த்திப் பொடித்துக் காலை மாலை ஒரு சிட்டிகை தேனில் குழைத்து உண்ண, மாலைக்கண், கண்படலம், பார்வை மங்கல் ஆகியவை குணமாகும்.

 

10.  மூக்கிரட்டை  இலையைத் தொடர்ந்து பயன்படுத்தி வரப் பொலிவும் இளமையும் வசீகரமும் உண்டாகும்.

 

11.  மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, கீழாநெல்லி இலை ஆகியவற்றை உலர்த்திப் பொடி செய்து சம அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும்

 

12.  மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, கீழாநெல்லி இலை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து காலை மாலை 30 மி.லி வீதம் சாப்பிட்டு வந்தால் மாலைக் கண் நோய் தீரும்.  (018)

 

13.  மூக்கிரட்டை இலையைப் பொரியல் அல்லது துவையலாகச் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை தீரும்.  (557) (633)

 

14.  மூக்கிரட்டை இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முகப் பொலிவும் வசீகரமும் உண்டாகும்.  (824) (1575)

 

15.  மூக்கிரட்டை வேர், அறுகம்புல். மிளகு, கீழாநெல்லி ஆகியவற்றைச் சம அளவு எடுத்து கசாயம் செய்து காலை மாலை சாப்பிட்டு வந்தால்  வீக்கம், நீர்க்கட்டு குணமாகும்.   (1611) மஞ்சள் காமாலை தீரும்.  (1599)

 

16.  மூக்கிரட்டைத் துவையல் வாரம் இரு முறை சாப்பிட்டு வந்தால் வாயு நோய்கள் வராமல் தடுக்கலாம்.  (1612)

 

17.  மூக்கிரட்டை மூலிகையை பாலில் அரைத்துச் சாப்பிட்டு வந்தால் நரை, திரை  அணுகாது.  (1749)

 

18.  மூக்கிரட்டை வேர், அறுகம்புல், மிளகு  ஆகியவற்றை 3 : 3 : 1 என்ற  அளவில் எடுத்து நீர் சேர்த்து சுண்டக் காய்ச்சிப் பருகி வந்தால் கீல் வாதம் குணமாகும். (1117)

 

19.  மூக்கிரட்டை வேர், காக்கிரட்டை வேர், நொச்சி இலை ஆகியவற்றைச் சிதைத்து, சுக்கு, மிளகு சேர்த்து கசாயம் வைத்து தினசரி 30 மி.லி கொடுத்து வந்தால் இளம்பிள்ளை வாதம் குணமாகும்.  (1439)

 

20.  மூக்கிரட்டை வேர்ப் பொடி காலை மாலை ஒரு சிட்டிகை தேனில் சாப்பிட்டு வந்தால் பார்வை மங்கல் குணமாகும்.  (1547)  கண் படலம் குணமாகும்.  (1574)

 

21.  மூக்கிரட்டை வேர், மிளகு, உத்தாமணிச் சாறு ஆகியவற்றை எடுத்து விளக்கெண்ணெயில் இட்டுக் காய்ச்சி குழந்தைகளுக்கு 10 மி.லி கொடுத்தால் மாந்த இழுப்பு குணமாகும்.   (1598)


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

 

 

==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை,

[தி.பி:2052,விடை(வைகாசி )18]

{01-06-2021} 

==================================================


மூக்கிரட்டை

மூக்கிரட்டைப் பூ


மூக்கிரட்டைs செடி



மூக்கிரட்டை



மூக்கிரட்டை