இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

தவசிமுருங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தவசிமுருங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 மே, 2021

தவசிமுருங்கை

 

          மூலிகைப் பெயர் :...................................தவசிமுருங்கை

          மாற்றுப் பெயர்கள்.................................................................

          தாவரவியல் பெய.ர்........JUSTICIA TRANQUEBARIENSIS

          சுவை..........................................................................துவர்ப்பு

          தன்மை......................................................................வெப்பம்

     

 

 ==================================================

 

1)    தவசி முருங்கை ஏறத்தாழ வட்ட வடிவமான சிறு காம்புடைய முழுமையான இலைகளை எதிரடுக்கில் கொண்ட சிறு செடி.

 

2)    தவசி முருங்கை கொத்தான மலர்களைப்பெற்றிருக்கும். செடி முழுமையும் மருத்துவப் பயன் உடையது.

 

3)    தவசி முருங்கை மூலிகை கோழை அகற்றியாகச் செயற்படும்.

 

4)    தவசி முருங்கை இலைச்சாற்றை 15 மி.லி காலை மாலை சாப்பிட்டு வர  பீனிசம் (ஒற்றைத் தலைவலி), சளி, இரைப்பிருமல், ஆகியவை தீரும்.

 

5)    தவசி முருங்கைச் செடியை முழுமையாக உலர்த்திப் பொடித்துச் சமனளவு சர்க்கரைப்பொடி கலந்து அரைத் தேக்கரண்டி தேனில் குழைத்து உண்ண்டு வர சளி, இருமல் ஆகியவை தீரும்.

 

6)    அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு தவசி முருங்கை இலையை வதக்கிக் கட்ட, உடன் வேதனை குறைந்து குணமாகும்.

 

7)    தவசி முருங்கை  இரசத்தை (சாறு) வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு, கொடுத்து வந்தால் மூக்கில் நீர் பாய்தல், உண்ணாக்கு நோய், ஐயம் (கபம்), இரைப்பு, பொடியிருமல் ஆகியவை தீரும்.

 

8)    தவசி முருங்கை இலைச்சாற்றைப் பிழிந்து 20 மி.லி. அளவு மூன்று நாட்கள் கொடுக்க, பிள்ளை பெற்ற அழுக்கு வெளிப்படும்.

 

9)    தவசி முருங்கை இலைச் சாற்றை 15 மில்லி லிட்டர் காலை மாலை சாப்பிட்டு வர ஆஸ்துமா தீரும்.

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி)08]

{22-05-2021}

===================================================


தவசிமுருங்கை

தவசிமுருங்கை

தவசிமுருங்கை

தவசிமுருங்கை