இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

பொன்னாங்கண்ணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொன்னாங்கண்ணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 மே, 2021

பொன்னாங்கண்ணி

 

     மூலிகைப் பெயர்.............................பொன்னாங்கண்ணி

     மாற்றுப் பெயர்கள்...................அகத்தியர் கீரை, சீதை,

     ....................................................................................கொடுப்பை,

     ..................................................சீமைப் பொன்னாங்கண்ணி

     தாவரவியல் பெயர்................ALTERNANTHERA SESSILIS

     ஆங்கிலப் பெயர்...........................................SESSILE PLANT


===================================================

                                       

 01.   பொன்னாங்கண்ணி செடி முக்கால் அடி உயரம் வரை வளரும் குத்துச் செடி ஆகும். செடி முழுவதும் மருத்துவப் பயன் உடையது. .(Asan)

 

02.   பொன்னாங் கண்ணியில் நாட்டுப் பொன்னாங் கண்ணி, சிவப்புப் பொன்னாங் கண்ணி  எனப் பல வகைகள் உள்ளன. எனினும் இவை இரண்டு மட்டுமே உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன. .(Asan)


03.   பொன்னாங் கண்ணிக் கீரையில் நீச்சத்து, கொழுப்புச்சத்து, இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், புரதம், சுண்ணாம்பு, வைட்டமின்”, “பி”, “சிஆகியவை உள்ளன. தங்கச்சத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. .(Asan)

 

04.   சிறிதளவு பொன்னாங் கண்ணி இலைச் சாறு, நல்லெண்ணெய் ஒரு லிட்டர், அதிமதுரம், கருஞ்சீரகம், கோஷ்டம், செங்கழுநீர்க் கிழங்கு வகைக்கு 20 கிராம் எடுத்து பாலில் அரைத்து, இளந்தீயில் பதமாகக் காய்ச்சி, வடிகட்டி, நான்கு நாட்களுக்கு ஒரு முறை தலைக்குத் தேய்த்துக் குளித்தால் காய்ச்சல், உடல் சூடு, வலி, உடல் எரிச்சல், கண் எரிச்சல், உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்று வலி ஆகியவை குணமாகும். .(Asan)

 

05.   பொன்னாங் கண்ணிக் கீரையைக் காய வைத்து நன்றாகப் பொடித்து, காலை 6-00 மணிக்கும், மாலை 4-00 மணிக்கும் ஒரு தேக்கரண்டி பாலுடன் சேர்த்துக் குடித்து வந்தால், கண்கள் குளிர்ச்சி அடைந்து, பார்வைக் கோளாறுகள் நீங்கும். .(Asan)

 

06.   தினமும் பொன்னாங் கண்ணிக் கீரையை சமைத்து உட்கொண்டு வந்தால் மூலநோய், மண்ணீரல் பாதிப்பு, கண் எரிச்சல், வாய் துர்நாற்றம், முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை நீங்கும்.(Asan)

 

07.   மாதவிடாய் நின்ற பெண்கள் தினமும் பொன்னாங்கண்ணிக் கீரையை உணவுடன் சேர்த்து வந்தால் எலும்புகள் பலப்படும்.(Asan)

 

08.   பொன்னாங்கண்ணிக் கீரையுடன் துவரம் பருப்பு, நெய்  சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடல் எடை அதிகரிக்கும் .(Asan)

 

09.   பொன்னாங்கண்ணிக் கீரை, பூண்டு, மிளகு, சின்ன வெங்காயம்  சேர்த்து சூப் செய்து உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும் .(Asan)

 

10.   உப்பு சேர்க்காமல் பொன்னாங் கண்ணிக் கீரையை வேக வைத்து இளஞ் சூட்டில் வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால், கண் பார்வை தெளிவு பெறும். .(Asan)

 

11.   பொன்னாங் கண்ணிக் கீரையை சிறிதாக நறுக்கி, சின்ன வெங்காயம், சீரகம், பாசிப்பருப்பு, பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேக வைத்துச் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும் .(Asan)

 

12.   பொன்னாங்கண்ணிக் கீரைச் சாறுடன் சம அளவு கரிசலாங்கண்ணிச் சாறு, நல்லெண்ணெய், நெல்லிக்காய்ச் சாறு, பசும்பால், எடுத்து பாலில் அரைத்த அதிமதுரத்தை சிறிதளவு சேர்த்துக் காய்ச்சி, மெழுகு பதத்தில் வந்ததும் வடிகட்டி, தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் கண் நோய் சரியாகும். .(Asan)

 

13.   அரை கிலோ பொன்னாங்கண்ணிக் கீரை, 50 கிராம் வெங்காயம், 3 பூண்டுப்பல் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் மூலநோய் தாக்கம் குறையும். .(Asan)

 

14.   பொன்னாங்கண்ணிக் கீரையைப் பகலில் சாப்பிடுவது நலம். அதிக நேரம் கீரை வெந்தால் கசப்புச் சுவை ஏற்படும்.(Asan)

 

15.   (ஆதாரம்:- நாகர்கோயில், எஸ்.மகாலிங்கம் ஆசான், 18-12-2016 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கட்டுரை.)

 

16.   பொன்னாங்கண்ணி இலையை காலையில் மென்று தின்று பால் பருகி வந்தால் கண் பார்வை தெளிவு பெறும்.  (006)

 

17.   பொன்னாங்கண்ணி இலை, மூக்கிரட்டை இலை, கீழாநெல்லி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து பச்சையாகவோ, அல்லது வேறு வகையிலோ சாப்பிட்டு வந்தால் மாலைக் கண் நோய் குணமாகும்.  (018)

 

18.   பொன்னாங்கண்ணி இலையை சித்திரை வைகாசி மாதங்களில் தொடர்ந்து 60 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும்.  (025)

 

19.   பொன்னாங்கண்ணிக் கீரையை உணவுடன் சேர்த்து வந்தால், இரத்தம் விருத்தியாகும்.  (1236)

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !


===================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )13]

{27-05-2021} 

===================================================

பொன்னாங்கண்ணி

பொன்னாங்கண்ணி


பொன்னாங்கண்ணி

பொன்னாங்கண்ணி

பொன்னாங்கண்ணி

பொன்னாங்கண்ணி