இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 14 மே, 2021

கழற்சிக்காய்.

 

             மூலிகைப் பெயர்.........................................கழற்சிக்காய்

             மாற்றுப் பெயர்கள்..........கழற்சிக் கொடி, கழற்காய்

             .............................கச்சக்காய், குபேராட்சி, வஜ்ஜிரபீஜம்

             .தாவரவியல் பெயர்.....................CAESALPINIA BONDUC

             ஆங்கிலப் பெயர்..........MOLUCCA BEAN, BONDUC  NUT

 

 ==================================================

 

01.   கழற்சி என்பது வேலிகளிலும் தோட்டங்களிலும் காணப்படும் ஒரு கொடி வகை.  (Asan)

 

02.   கழற்சி இலைகள் எதிரெதிர் அடுக்கில் தடிமனாகக் காணப்படும்.  பூக்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். (Asan)

 

03.   கழற்சிக் காய்களின் மேல் ஓட்டில் முட்கள் இருக்கும். ஓடு கடினமானது.  ஓட்டுக்குள்  உருண்டை வடிவில் எண்ணெய்ப் பசையுடன் விதைகள் இருக்கும். (Asan)

 

04.   கழற்சி விதைகளே மருத்துவத்தில் பயன் படுத்தப் படுகிறது.. இலை, கொட்டை, பட்டை, வேர் ஆகியவை பயன் தரும் பாகங்கள். (Asan)

 

05.   இதன் சுவை கைப்பு மற்றும் கார்ப்பு, இரண்டும் கலந்தவை. கழற்சிகாயினால் விரை வாதம் சரியாகும்; மேக நோய், உஷ்ணம் தணிக்கும்; தோலில் உண்டாகும் அழற்சி, கரப்பான் நீக்கும்; குன்மம் போக்கும்; இலையானது சூலை ( வாதம் ) போக்கும். (Asan)

 

06.   கால் தேக்கரண்டி கழற்சிக்காய்ப் பொடி, அரைத் தம்ளர் மோர், சிறிதளவு பெருங்காயம், தேவைக்கு ஏற்ப உப்பு கலந்து வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்து வந்தால் கல்லீரல். மண்ணீரல் வீக்கம் குறைந்து ஈரல் ( கல்லீரல், மண்ணீரல் ) பலப்படும். (Asan)

 

07.   கால் தேக்கரண்டி கழற்சிக்காய்ப் பொடி, சிறிதளவு மிளகுப் பொடி இரண்டையும் மோரில் கலந்து  வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்து வர்வும். பெண்களுக்கு மாத விலக்குப் பிரச்சினை கட்டுப்படும்; அதிக இரத்தப் போக்கு, வெள்ளைப் போக்கு, நீர்க்கட்டி அகலும். (Asan)

 

08.   கழற்சிக்காய்ப் பருப்புடன் சிறிதளவு பெருங்காயம் சேர்த்து அரைத்து மோருடன் கலந்து குடிக்கலாம். வயிற்று வலி, வயிற்றுப் புண் அகலும். (Asan)

 

09.   கழற்சி இலைகளைப் போட்டுக் காய்ச்சி வடித்த நீரை வாய் கொப்பளிக்கவும். தொண்டைக் கட்டு அகலும். (Asan)

 

10.   கழற்சிக் காய்ப் பொடியுடன் சிறிதளவு பெருங்காயம் சேர்த்து மோரில் கலந்து குடித்து வந்தால் குன்ம நோய் ( இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், மண்ணீரல், கால்லீரல் சார்ந்தது ) நீங்கி உடல் வலிமை அடையும். (Asan)

 

11.   சிறிதளவு கழற்சிகாய்ப் பருப்பைச் சுட்டு, பொடித்து, அதனுடன் சம அளவு வறுத்த பாக்குத் தூள், வெங்காரம் ஆகியவற்றைச் சேர்த்து  பல் துலக்கி வருபவர்களுக்கு, ஈறு நோய், பல் சொத்தை அகன்றுவிடும். ஈறுகள் பலமடையும். (Asan)

 

12.   சிறிதளவு கழற்சிக்காய்ப் பொடி, வெள்ளை உள்ளி (வெங்காயம்), முருங்கைப் பட்டை, சுக்கு, வசம்பு ஆகியவற்றைத் தண்ணீரில் இட்டு, எட்டில் ஒன்றாக சுண்டக் காய்ச்சி, குடித்து வந்தால், குடல் வாதம், சூலை, குன்மம், முதலிய நோய்கள் போகும். (Asan)

 

13.   கழற்சி இலைகளைத் தேங்காய்ப் பூ சேர்த்து, விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கங்ளில் வைத்துக் கட்டினால் வீக்கம், ஆண்களின் விரை வாதம் கட்டுக்குள் வரும்(Asan)

 

14.   கருச்சிதைவு ஏற்படும் என்பதால் கர்ப்பிணிகள் கழற்சிகாயைப் பயன் படுத்தக் கூடாது. (Asan)

 

15.   (ஆதாரம்:- நாகர்கோயில், எஸ். மகாலிங்கம் ஆசான், 03-12-2017 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கட்டுரை.)

 

16.   கழற்சிக் காய் விதைகளை அரைத்து பொடியாக்கி கால் தேக்கரண்டி அளவுக்கு எடுத்து தேன் கலந்து உண்டு வந்தால் தாது கெட்டிப்படும். (472) (1803)

===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,மேழம்(சித்திரை)31]

{14-05-2021}

===================================================


கழற்சிக்காய்

கழற்சிப் பூ

கழற்சிக்கொடி

கழற்சிக்கொடி


கழற்சிக்காய்


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக