மூலிகையின்.பெயர்:.........................அருவதா
வேறு பெயர்கள் -: .............................சதாபலை
.......................................................சதாப்பு இலை
தாவரப்பெயர் -:.............. RUTA GRAVEOLENS
தாவரக்குடும்பம் -:............................RUTACEAE
ஆங்கிலப் பெயர்.........................................RUE
01.
இப்பயிர் மலைப் பிரதேசங்களில், செழிப்பான காடுகளில் இயற்கையாக இது வரட்சியைத் தாங்கக் கூடியது. அருவதா செடிகளை
எல்லா வகையான மண்ணிலும் வளர்க்கலாம்
02.
அருவதா செடிகள் 2 - 3 அடி உயரம் வரை
வளரும். இலைகள் சாம்பல் நிறத்தில் இருக்கும்.
இலைகள் 3 - 5 அங்குல நீழமுள்ளவை இலை நீலம் கலந்த பச்சையாக இருக்கும். இதன் பூக்கள் மஞ்சள்
நிறத்தில் அரை அங்குலம் நீளத்தில் நான்கு இதழ்களைக்
கொண்டிருக்கும்.
03.
அருவதாவை நட்ட 2 முதல் 3 மாதங்களில் இலைகளை
அறுவடை செய்து நேரடியாகவோ அல்லது பதப்படுத்தியோ பயன் படுத்தலாம்.
04.
அருவதாவை வீட்டு அலங்காரச்
செடியாகவும் வளர்க்கிறார்கள். இந்தச்செடிஅருகே நாய், பூனை, பாம்பு, ஈ, முதலியன வராது.
05.
அருவதாவில் பயன்படும் பாகம் -: சதாப்பு இலை (அருவதா இலை) மற்றும்
வேர்.
06.
அருவதா இலைகள் வாதம்
மற்றும் மூட்டு வலியைப் போக்கவும், குடல் புழுக்களை அகற்றவும், பயன் படுகின்றன.
07.
நரம்புக் கோளாறுகளை நிவர்த்தி செய்வதற்கும், இரத்தப் போக்கைக்
குணப்படுத்தவும் அருவதா இலைகளைப் பயன் படுத்தலாம்.
08.
அருவதா இலையிலிருந்து
கிடைக்கும் எண்ணெய் கர்பப்பை கோளாறுகளைக் குணப் படுத்த உதவுகிறது.
09.
சதாபலை என்னும் சதாப்பு இலையினால் பால் மந்தம் முதலிய
வற்றால் விளைகின்ற சுரம், கரைபேதி, கபவனம், பிரசவ மாதர்களின் வேதனை இவை நீங்கும்.
10.
அருவதா இலைகள் கண் வலியைப் போக்கும், வாந்தியைக் குணமாக்கும், வயிற்று வலியைப் போக்கும்.
11.
அருவதா இலைகள் காதில் சீழ் வடிதல் காதுப் புண் ஆகியவற்றைக் குணமாக்கும், மூத்திரக் குழாயில்
ஏற்படும் அடைப்புக்களை நீக்கும்.
12.
அருவதா இருதயத்தில்
ஏற்படும் மூச்சுத் திணறலைப் போக்கும், முதுகு வலி, முதுகு வடத்தில் ஏற்படும் வலியைப் போக்கும்.
13.
அருவதா கை கால் வலிகள், இவைகளைப் போக்கும்.
14.
விபத்தில் ஏற்படும் எலும்பு
முறிவுகளை அருவதா சரி செய்யும்,
15.
அருவதா ஞாபகசத்தியைத்
தூண்டும், மன அழுத்தம் குறைக்கும், பல் வலியைப் போக்கும்,
16.
பல் துலக்கும் போது ஈறில் இரத்தம் வருவதை அருவதா குணமாக்கும்,
17.
நாக்கிற்கு உணவின் சுவை அறிய உதவும், தொண்டையில் ஏற்படும்
வலியை அருவதா போக்கும், முகத்தில் ஏற்படும்
வீக்கம், உதட்டு வலி, உதடு பிளவு இவைகளைப் போக்கும்,
18.
அருவதாவினால் பெண்களுக்கான
மாதவிடாய் விட்டு விட்டு வரும் உதிரப் போக்கு, வலி இவைகள்
குணமாகும், வெள்ளை படுதல், மூத்திர எரிச்சலைப் போக்கும், எலும்பு வலி, உடலில் ஏற்படும்
தினவு, இவைகளைப் போக்கும்,
19.
அருவதா இலை மூலத்தைப் போக்கும், ஆஸ்த்துமாவைப் போக்கும், வாய், தொண்டையில் ஏற்படும் புற்று நோயைக் குணப் படுத்தும்.
20.
அருவதா இலையுடன் சிறிது
மிளகு சேர்த்து வெண்ணெய் போல் அரைத்து வேளைக்கு 2 - 3 குன்றிமணி எடை தாய்ப் பாலில் கலக்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்க மார்பில் உள்ள கோழையைக் கரைக்கும். சுரம், வலி (இசிவு) இவற்றைப்
போக்கும்.
21.
அல்லது அருவதா இலைச்சாற்றில் 10 - 15 துளி தாய்ப் பாலுடன்
கலந்து கொடுக்க முற் கூறப் பட்ட பிணிகளைக் குண்ப்படுத்தும்.
22.
அருவதா (சதாப்பு) இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து
குழந்தைகளுக்குத் தேகத்தில் பூசி குளிப்பாட்டினால் சீதள சம்பந்தமான பல பிணிகளையும் வர வொட்டாமல் தடுக்கும்.
===========================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]
{30-04-2021}
![]() |
அருவதா |
![]() |
அருவதாச் செடி |
![]() |
அருவதாப் பூ |
![]() |
அருவதா இலை |