இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

நந்தியாவட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நந்தியாவட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 மே, 2021

நந்தியாவட்டை

      மூலிகைப் பெயர்....................................நந்தியாவட்டை

      மாற்றுப் பெயர்கள்...................நந்திபத்திரி, பட்டிடை

      ......................................வலம்புரிசுயோதனன் மாலை

      தாவரவியல் பெயர்........Tabernaemontana divaricata

      ஆங்கிலப் பெயர்......................................CREPE JASMINE

 

=========================================================

 

 

01.    நந்தியாவட்டைச்செடியின் இலைகள் பளபளப்பானவை. நுனியில் தொகுப்பான வெண்ணிற மலர்கள் காணப்படும். .(Harish)

 

02.    நந்தியாவட்டைச் செடியின் பூ, பால், வேர், இலை ஆகியவை மருத்துவக் குணம் உள்ளவை. .(Harish)

 

03.    நந்தியாவட்டைச் செடியிலிருந்து கிடைக்கும்பால் வெட்டுக் காயங்களைக் குணமாக்கும். .(Harish)

 

04.    நந்தியாவட்டைச் செடியின் வேர் குடற்புழுக்களை அழிக்கும். .(Harish)

 

05.    கண் சிவப்பு குணமாக நந்தியாவட்டைப் பூவின் இதழ்களிலிருந்து சாறு எடுத்து சம அளவு தாய்ப்பால் சேர்த்து 2 துளிகள் கண்ணில் விடவேண்டும். .(Harish)

 

06.    கண் எரிச்சல் குணமாக நந்தியாவட்டைப் பூவால் ஒற்றடம் கொடுக்க வேண்டும். பூச்சாறு 2 துளி கண்ணிலும் விடலாம். (008) (1320). (1816) (Harish)

 

07.    நந்தியாவட்டை வேரினை எடுத்து வாயில் இட்டு 10 நிமிடங்கள் மென்று துப்பினால் பல் வலி சரியாகும். (1321) .(Harish)

 

08.    ஒரு துண்டு நந்தியாவட்டை வேரினை ஒரு தம்ளர் நீரில் இட்டு அரை தம்ளராக சுண்டக் காய்ச்சி இரவில் மட்டும் குடித்தால் வயிற்றுப் புழுக்கள்வெளியேறும். .(Harish)

 

09.    நந்தியாவட்டையின் தண்டு பட்டையில் “ Conolidine “ என்னும் வேதிப் பொருள் இருப்பதால், உடல் வலியைக் குறைக்கும். .(Harish)

 

10.    நந்தியாவட்டைப் பூ கண் நோய்களைச் சரிசெய்யும்; வேர் பல் வலியை நீக்கும்; இலை இரத்த அழுத்தத்தைச் சீர் செய்யும்; சுரத்தைத் தணிக்கும் கழிச்சலைப் போக்கும். .(Harish)

 

11.    நந்தியாவட்டை இலைக் கசாயத்தை 50-60 மி.லி வீதம்குடித்து வந்தால் சுரம் தணியும். .(Harish)

 

12.    நந்தியாவட்டைப் பூக்களைக் கண்களின் மீது வைத்துக் கட்டி வந்தால், கண் எரிச்சல் நீங்கும். .(Harish)

 

13.    கண் படலத்திற்கு, நந்தியாவட்டைப்  பூவின் சாற்றையும் சிறுகளாப்பூவின் சாற்றையும் மூன்று துளிகள் கண்ணில் விட, கண் படலம் நீங்கும். .(Harish)

 

14.    நந்தியாவட்டைச் செடியில் வரும் பாலை புண்களின் மீது வைத்து வர, அவை ஆறும். .(Harish)

 

15.    நல்லெண்ணெயில் நந்தியாவட்டைப் பூக்களைப் போட்டு 30 நாட்கள் வெயிலில் வைத்து, கண்களில் 5 துளிகள் விட, கண்ணெரிச்சல், கண் சிவப்பு தீரும். .(Harish)

 

16.    நந்தியாவட்டை வேர் மிகுந்த கசப்பு உடையது. வேரினை வாயிலிட்டு மென்று தாடையில் அடக்கிக் கொண்டால் பல் வலி தீரும். .(Harish)

 

17.    நந்தியாவட்டைப் பூக்களைத் தேங்காய் எண்ணெயில் இட்டுக் காய்ச்சித் தோல் நோய்களுக்குத் தடவலாம். .(Harish)

 

18.    நந்தியாவட்டைத் தண்டுப் பட்டையைக் காய வைத்துத் தூள் செய்து 500 மி.கி முதல் ஒரு கிராம் வரை தேனில் குழைத்து உள்ளுக்குச் சாப்பிட்டால் பல் வலி குறையும். .(Harish)

 

19.    நந்தியாவட்டைப் பூக்களை இரவு முழுதும் தண்ணீரில் இட்டு ஊறவைத்து, அந்த தண்ணீரைக் கொண்டு கண்களைக் கழுவினால் கண் நோய்கள் குணமாகும். .(Harish)

 

20.    நந்தியாவட்டைப்  பூக்களையும் ரோஜாப் பூக்களையும் நன்கு காய வைத்து சம அளவு சேர்த்து ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும். .(Harish)

21.    அதிமதுரம் தூளுடன் நந்தியாவட்டைத் தண்டுப்பட்டைத் தூளும் கலந்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி தீரும்.(Harish)

 

22.    (தொ.எண் .10 முதல் 22 வரை ஆதாரம் :- வேலூர், ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ் மருத்துவ மனை, முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர். வெ. ஹரிஷ் அன்புச் செல்வன் M.D.(s) அவர்கள் 25-11-1017 நாளிட்ட தினமலர் நாளிதழின் இணைப்பான பெண்கள் மலரில் எழுதியுள்ள கட்டுரை.)

   ======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !    

=============================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை முகநூல்.

[தி.பி,2052,விடை(வைகாசி )04]

{18-05-2021}

=============================================================