இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

பழம்பாசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பழம்பாசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 மே, 2021

பழம்பாசி (நிலத்துத்தி)

 

        மூலிகைப் பெயர்............................................பழம்பாசி

        மாற்றுப் பெயர்கள்......................................நிலத்துத்தி

        தாவரவியல் பெயர்..........................SIDA CARDIFOLIA

        தன்மை..................................................................வெப்பம்

        

===================================================

 

01.   பழம்பாசி  ஒருசிறிய செடியாகும்.  இதன் இலைகள் இதய வடிவமாக பச்சையாக இருக்கும்.  இதன் பூக்கள்  கரு மஞ்சளாகவும்  5  இதழ்களைக் கொண்டதாக  இருக்கும். இதன் மேல் பாகத்தில் மொசு மொசுப்பான  முடிகள் இருக்கும்.

 

02.   பழம்பாசி  50-200  செண்டி மீட்டர்  உயரம்  வளரக்கூடியது.  இதன்  தண்டு பசுமை கலந்த மஞ்சள்  நிறத்தில் இருக்கும்.

 

03.   பழம்பாசி  எல்லா வகை நிலங்களிலும் வளரக்கூடியது. தமிழகமெங்கும் தரிசு நிலங்களிலும்,  சாலையோரங்களிலும் தானே வளரக்கூடியது.

 

04.   பழம்பாசியை  நிலத்துத்தி என்றும் சொல்வார்கள்.  இது  விதைமூலம் இனப்பெருக்கம் செய்கிறது.

 

05.   பழம்பாசியின் இலை,  சதை நரம்புகளைச் சுருங்கச் செய்தல், உடலின்  எடையை குறையச்செய்தல், இரத்த அழுத்தம்  குறையச் செய்தல்   காய்ச்சல், நரம்புத்தளர்ச்சி,  ஆஸ்துமா, வலிப்புகளைப்  போக்கல், தாது  வெப்பகற்றுதல் போன்ற குணங்களையுடையது.

 

06.   பழம்பாசி வேர் எண்ணெய் காயத்தைக்  குணமடையச் செய்யும் தன்மையுடையது.

 

07.   பழம்பாசி   இலையுடன்  சிறிது  பச்சரிசி  சேர்த்து அரைத்துக்  குழப்பிக் களி போல் கிளறி கட்டிகளுக்கு  வைத்துக் கட்ட அவை  பழுத்து உடையும்.  (1031)

 

08.   பழம்பாசி இலைகள் 20  கிராம் எடுத்து பொடியாய் அரிந்து  அரை லிட்டர் பாலில் போட்டு வேக வைத்து  வடிகட்டிச் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து 3 வேளை சாப்பிட மூலச்சுடு தணியும்.  இதை 20 மி.லி. அளவாகக் குழந்தைகளுக்குக்  காலை  மாலை கொடுத்து வர  இரத்தக்  கழிச்சல், சீதக் கழிச்சல் ஆகியவை தீரும்.  ஆசனம் வெளித் தள்ளல் தீரும்.

 

09.   பழம்பாசி இலையைப் பொடித்து பாலில் வேக வைத்து சிறிதளவு உள்ளுக்குக் கொடுத்து வந்தால் ஆசனம் வெளித் தள்ளல் குணமாகும். (391)

 

10.   பழம்பாசி இலையைப் பொடித்து பாலில் வேக வைத்து வடிகட்டி, எலுமிச்சம் பழச் சாறு கலந்து கொடுத்து வந்தால் ஆசனம் வெளித் தள்ளல் தீரும்.(564)

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )11]

{25-05-2021} 

===================================================

பழம்பாசி


பழம்பாசி

பழம்பாசி

பழம்பாசி

பழம்பாசி