இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

உளுந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உளுந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

உளுந்து

 

 

                       மூலிகைப் பெயர்.........................................:உளுந்து

                 மாற்றுப் பெயர்கள்.......................................................

                 தாவரவியல் பெயர்...................................Vigna mungo

                 ஆங்கிலப் பெயர்...................................:BLACK GRAM

 

 =================================================

 01.  உளுந்தால் செய்த உணவு வகைகள் (ஆவியில் வேக வைத்தவை) சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.(338)

 

02.  உளுத்தம் பருப்பை சர்க்கரை கலந்த பசும் பாலில் ஊற வைத்து, நன்கு ஊறிய பின்பு எடுத்து உலர்த்தி, மாவாக்கி, அந்த மாவுடன் வெண்ணெய் சேர்த்து கேக் செய்து சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைவு நீங்கும்.(508)

 

03.  உளுந்து சேர்ந்த உணவுகளைப் பயன்படுத்தி வந்தால் இடுப்புப் பகுதி நரம்புகள் பலப்படும். ஒரு பெண் பருவமடைந்துவிட்டால், அவளுக்கு உளுந்துக் களி செய்து  தருவது  ஊரகங்களில் (கிராமங்களில்) இப்போதும்  வழக்கில் உள்ளது. (797)

 

04.  உளுந்து மாவுடன் எலுமிச்சம் பழச் சாறு கலந்து பிசைந்து பூசி வந்தால் சேற்றுப் புண்கள் ஆறும்.(1961)


===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க ! 

===============================================

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]

{30-04-2021}

 

===============================================


உளுந்து

உளுந்து



.