இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 24 மே, 2021

நெருஞ்சி

 

          மூலிகைப் பெயர்.........................................நெருஞ்சில்

          மாற்றுப்பெயர்கள்......................காமரசி, திரிகண்டம்,

          ................................கோகண்டம், அசுவசட்டிரம், சுதம்,

          .................................................... சுவதட்டம்,திரிதண்டம் 

          ...............................................................,யானை வணங்கி

          தாவரவியல் பெயர்......................TRIBUTUSTERRESTRIS

          ஆங்கிலப்பெயர்........................SMALL CALTROP, BINDII.

          சுவைi..........................................................................துவர்ப்பு

          தன்மை....................................................................குளிர்ச்சி

 

 ===================================================

 

01.  தரையோடு படரும் சிறு கொடிகள். மஞ்சள் நிற மலர்களை உடையது. மலர்கள் சூரியத் திசையோடு திரும்பும் தன்மை உடையன. முள் உள்ள காய்களை உடையது

 

02.  முட்கள் மாட்டின் கொம்பைப் போன்று பிரிவுடையன. இதில் சிறு நெருஞ்சில், பெருநெருஞ்சில் அல்லது யானை நெருஞ்சில் என்னும் பிரிவுகளுமுண்டு. இவை குணத்தில் மிகுதியாய் மாறுபடுவதில்லை

 

03.  செடி முழுமையும் மருத்துவப் பயன் உடையது.

 

04.  சீறு நீர், தாது பலம், காமம் ஆகியவற்றைப் பெருக்கவும், தாது அழுகல், குருதிக் கசிவு ஆகியவற்றை நிறுத்தவும் மருந்தாகப் பயன்படுகிறது.

 

05.  நெருஞ்சில் செடி இரண்டு, ஒரு கைப்பிடி அருகம்புல் ஆகியவற்றை நசுக்கி ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வைத்துக் கொண்டு காலை மாலை 50 மி.லி. வீதம் 3 நாள் குடித்து வந்தால் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் ஆகியவை தீரும்.

 

நல்ல நெருஞ்சில்

06.  இதனால் சொட்டு நீர், சுர வெதும்பல், கல்லடைப்பு, நீரடைப்பு, முடவாயு, வெள்ளை, சிறுநீர் எரிச்சல், நீர்வேட்கை, வெப்பம் ஆகியவை நீங்கும்.


நெருஞ்சில் வித்து:

07.  இதனால், சிறுநீர்க்கட்டு, சிறுநீர் எரிச்சல், சதை அடைப்பு, கல்லடைப்பு நீங்கும்.

 

08.  நெருஞ்சில் வித்தினைப் பாலில் அவித்து உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை 1-1/2 தேக்கரண்டி அளவு பாலில் கலந்து கொடுத்து வர,ஆண்மை பெருகும்.. இளநீரில் சாப்பிட்டு வரச் சிறுநீர்க் கட்டு, சதையடைப்பு, கல்லடைப்பு ஆகியவை தீரும்

 

யானை நெருஞ்சில்:

09.  இதனால், மேகம், வெண்புள்ளி, கல்லடைப்பு, எலும்புருக்கி நோய் முதலியன நீங்கும். உடம்பெரிச்சல், நீர்வேட்கை, அழல் இவையும் நீங்கும்.

 

செப்பு நெருஞ்சில்:

10.  இதனால் முப்பிணி, வெப்பம், வெண்ணீர் நோய் ஆகியவை போகும்

 

சிறுநெருஞ்சில்:

11.  சிறுநெருஞ்சில் காயையும் வேரையும் பச்சரிசியோடு வேகவைத்து கஞ்சியை வடித்துச் சர்க்கரை கூட்டி, வெள்ளை, நீர்க்கடுப்பு ஆகியவைகளுக்குக் கொடுப்பதுண்டு

 

பொதுவான தகவல்கள்

 

12.  நெருஞ்சில் சமூலத்தை எடுத்து சுத்தம் செய்து  கசாயம் செய்து அருந்தி வந்தால் இரத்தக் கொதிப்பு தீரும்.  (547) (1978)

 

13.  நெருஞ்சில் (சிறு நெருஞ்சில்)  சிறு பீளை இரண்டையும் சமனளவு சேர்த்து அரைத்து சிறு உருண்டை எடுத்து தயிரில் கலக்கி அருந்தி வந்தால் சிறு நீர்க்கல் கரையும்.  (989)

 

14.  நெருஞ்சில் இலைச் சாறை எடுத்துக் காய்ச்சி, வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப் புண்கள் ஆறும்.  (1159) (1897)

 

15.  நெருஞ்சில் விதைகளை எடுத்து உலர்த்தி பொடி செய்து, அரைத் தேக்கரண்டி பொடி எடுத்து தேனில் சாப்பிட்டு வந்தால், சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் சதையடைப்பு நீங்கும்.  சிறுநீரக உபாதைகளை நீக்கும்.  (1201)

 

16.  நெருஞ்சில் விதையைப் பாலில் அவித்து உலர்த்தி பொடி செய்து தினசரி இரு வேளைகள் இளநீரில் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகப் பாதையில் உள்ள சதையடைப்பு நீங்கும்.  (1387)  கல்லடைப்பு நீங்கும்.  (1463)

 

17.  நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை, நீர்முள்ளி விதை ஆகியவற்றை சம அளவு எடுத்து சிதைத்து பனங்கற்கண்டு சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடலில் உள்ள துர்நீர் நீங்கும்.  (1370)  தாது பலம் உண்டாகும்.  (1411)

 

18.  நெருஞ்சில் சமூலச் சாறு ஒரு அவுன்ஸ் (30 மி.லி.) எடுத்து சிலநாட்களுக்கு மட்டும் குடித்து வந்தால்  சிறு நீருடன் இரத்தம் போவது குணமாகும்.  (1427)

 

19.  நெருஞ்சில் செடி, அறுகம் புல் இரண்டையும் சேர்த்து கசாயம் செய்து குடித்து வந்தால், கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் குணமாகும்.  (1428)

 

20.  நெருஞ்சில் சமூலம் (வேருடன் கூடிய செடி) , கீழாநெல்லி சமூலம் இரண்டையும் எடுத்து கசாயம் செய்து சாப்பிட்டால்  சிறுநீர்த் தாரை எரிச்சல் நீங்கும்.  (1429)

 

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

 

===================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )10]

{24-05-2021} 

===================================================


நெருஞ்சி

நெருஞ்சி

நெருஞ்சி

நெருஞ்சி

நெருஞ்சி