இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

விஷ்ணுகிராந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஷ்ணுகிராந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 ஜூன், 2021

விஷ்ணுகிராந்தி

             மூலிகைப் பெயர்............................விஷ்ணுகிராந்தி

             மாற்றுப் பெயர்................................................................

             தாவரவியல் பெயர்...................... Evolvulus alsinoides

             ஆங்கிலப் பெயர்............. Slender dwarf morning-glory

 

==================================================

 

01.   விஷ்ணுகிராந்தி சமூலம் எடுத்து அரைத்து ஒரு நெல்லிகாய் அளவு தினசரி ஒரு வேளை வீதம் 48 நாட்கள்  உட்கொண்டு வந்தால் கண்டமாலை குணமாகும். (038)

 

02.   விஷ்ணுகிராந்தி சமூலம், பற்பாடகம், கண்டங்கத்தரி வேர், தூதுவேளை இலை ஆகியவற்றை எடுத்து நீர் சேர்த்து கசாயம் செய்து 25 மி.லி. குடித்து வந்தால் விடாத சுரமும் குணமாகும்.  (1549)

 

03.   விஷ்ணுகிராந்திப் பொடியை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் இரைப்பு இருமல் குணமாகும்.  (182)

 

04.   விஷ்னுகிராந்தி, பற்படாகம், கண்டங்கத்தரி, தூதுவேளை ஆகியவை சம அளவு எடுத்து நீரிலிட்டுச் சுண்டக் காய்ச்சி ஒரு மணிக்கு ஒரு முறை 25 மி.லி கொடுத்து வந்தால் டைபாய்டு சுரம் குணமாகும்.  (197)


05. விஷ்ணுகிராந்தி இலை, ஓரிதழ் தாமரை, கீழாநெல்லி ஆகியவை சம அளவு எடுத்து அரைத்து கால் கிராம் இரவு உணவுக்கு முன் பாலில் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.  (1550)


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !


==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை,

[தி.பி:2052,விடை(வைகாசி )19]

{02-06-2021} 

==================================================


விஷ்ணுகிராந்தி

விஷ்ணுகிராந்தி

விஷ்ணுகிராந்தி

விஷ்ணுகிராந்தி


விஷ்ணுகிராந்தி