இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

நல்ல வேளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நல்ல வேளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 மே, 2021

நல்ல வேளை

 

               மூலிகைப் பெயர்....................................நல்ல வேளை

               மாற்றுப் பெயர்கள்..............................வேளைக்கீரை

               தாவரவியல் பெயர்............................................................

               ஆங்கிலப் பெயர்..................Gynandropsis pentaphy//a. DC

 

===============================================

 

01.    நல்ல வேளைச் செடியின் பூவினைச் சேகரித்து, கசக்கி சாறு பிழிந்து ஒரு தேக்கரண்டி அளவு உள்ளுக்குக் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், மார்புச் சளி ஆகியவை குணமாகும்.

 

02.    நல்ல வேளைச் செடியின் விதைகளை நெய் சேர்த்து வறுத்து அரைத்து தூளாக்கி, சிறுவர்களுக்கு அரை கிராம், பெரியவர்களுக்கு நான்கு கிராம் என்ற அளவில் காலை மாலை 3 நாட்கள் உள்ளுக்குக் கொடுத்து சிறிது வெந்நீர் குடிக்கச் செய்ய வேண்டும். நான்காவது நாளில் அரைத் தேக்கரண்டி விளக்கெண்ணெய் உள்ளுக்கு கொடுத்தால் பேதியாகும். குடலில் உள்ள தட்டைப் புழுக்கள் வெளியாகும்.

 

03.    நாய்வேளைச் செடியில் ஒட்டும் உரோமங்கள் இருக்கும். நல்ல வேளைச் செடியில் உரோமங்கள் இருக்காது.

 

04.    வேளை (நல்ல வேளை) இலைச் சாறு ஓரிரு துளிகள் காதில்விட்டு வந்தால், காதில் சீழ் வடிதல் குணமாகும்.  (074) (1817)

 

05.    வேளை (நல்ல வேளை) இலை, தும்பை வேர், வெங்காயம் சேர்த்து அரைத்துக் கட்டி வந்தால் மூலம், பௌத்திரம் குணமாகும்.  (372)

 

06.    வேளை (நல்ல வேளை) இலை, சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவை சேர்த்துக் கசாயம் வைத்து குடித்து வந்தால் சளிக் காய்ச்சல் குணமாகும்.  (1697)

 

07.    வேளை (நல்ல வேளை) ( சாறு வேளை ) இலையை வதக்கிக் கட்டி வந்தால் வீக்கங்கள் குணமாகும்.  வலி குறையும். (1707)

 

08.    வேளை (நல்ல வேளை) இலையை கீரை போல் சமைத்து உண்டு வந்தால் இதயம், சிறுநீரகம், மண்ணீரல் நன்கு செயல்பட வைக்கும்.  (1708) நீர்க்கோவை, பெருவயிறு நோய்களைக் குணப்படுத்தும்.  (1726)

 

09.    வேளை (நல்லவேளை)ச் செடியை உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு அதில் அரைத் தேக்கரண்டி எடுத்து கால்  தேக்கரண்டி சுக்குப் பொடியை அத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேங்கியுள்ள மலத்தை வெளிப்படுத்தும்.   (1706)

 

10.    வேளை (நல்லவேளை)ப் பூச் சாறு 10 துளி எடுத்து தாய்ப் பாலில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் காய்ச்சல் தீரும்.  (193)  (1691)

 

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

 ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை முகநூல்.

[தி.பி,2052,விடை(வைகாசி )04]

{18-05-2021}

================================================


நல்லவேளை

நல்லவேளை

நல்லவேளை