இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

நுணா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நுணா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 மே, 2021

நுணா

 

      மூலிகைப் பெயர்...........................................................நுணா

      மாற்றுப் பெயர்கள்........மஞ்சணத்தி,  நீர்மேல் நெருப்பு

      ....................................தணக்கு, மஞ்சள் பாவட்டை, நுணவு

       ............................................................................மஞ்சள் கடம்பு

      தாவரவியல் பெயர்...................................MORINDA COREIA

      ஆங்கிலப் பெயர்.....................................INDIAN MULBERRY

 

===================================================

 

01.      மஞ்சணத்தி, தணக்கு, மஞ்சள் பாவட்டை, நுணவு, மஞ்சள் கடம்பு  போன்ற மாற்றுப் பெயர்களும் நுணாவுக்கு உண்டு.

 

02.      பத்து மீட்டர் உயரம்வரை வளரக் கூடிய மரவகையைச் சேர்ந்த நுணா, எதிரடுக்கில் அமைந்துள்ள இலைகளை உடையது.

 

03.      மரப்பட்டை வெளிர் மஞ்சள் நிறத்துடன் , உரித்த வடுக்களுடன் காணப்படும்.

 

04.      காய்கள் முண்டுகளாகவும், சிறு கண்களுடன் கூடியதாகவும் இருக்கும். பழங்கள் கருநீல நிறத்துடன் காணப்படும்.

 

05.      இம்மரத்தின் பட்டை கரப்பான், புண்கள், கழலை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்.

 

06.      வேர் கழிச்சல் உண்டாக்கும்.

 

07.      குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம், கழிச்சல் ஆகியவை தீர, பசுமையான நுணா இலைகள் ஐந்தினை எடுத்து நசுக்கி அரை லிட்டர் நீரில் இட்டு காய்ச்சி தினமும் காலை மாலை 20 மி.லி வீதம்  உள்ளுக்குக் கொடுக்க வேண்டும்.

 

08.      புண்கள், சிரங்கு ஆகியவை குணமாக நுணா இலையை அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும்.(1423) (1819)

 

09.      முதிர்ந்த நுணாக் காய்களைச் சேகரித்து, உப்பு நீரில் ஊறவைத்து, பின்னர் வெயிலில் காயவைத்து சுட்டுக் கரியாக்கி சலித்து வைத்துக்கொண்டு பற்பொடி போல் பல் துலக்கி வந்தால் பல் சொத்தை குணமாகும்.

 

10.      நுணா இலைகள் ஐந்து, ஒரு கொத்து வேப்பங் கொழுந்து, 2 கிராம் சுக்கு, ஒரு தேக்கரண்டி ஓமம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் நுணா இலை, வேப்பங் கொழுந்து ஆகியவற்றை வதக்கி, அதனுடன் சுக்கு, மிளகு, ஓமம் ஆகியவற்றை நசுக்கிச் சேர்த்து அரை லிட்டர் தண்ணீர் விட்டு ஒரு தம்ளராக வரும் வரை சுண்டக்  காய்ச்சி, ஆறவைத்து வடிகட்டி 2 தேக்கரண்டி உள்ளுக்குக் கொடுத்தால் குழந்தைகளுக்கு அஜீரணத்தால் ஏற்படும் காய்ச்சல் சரியாகும்.

 

11.      ஐந்து நுணா இலைகள் ஒரு கொத்து வேப்பங் கொழுந்து ஆகியவற்றை வதக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி ஓமம், ஒரு சிட்டிகை பொரித்த பெருங்காயம் சேர்த்து அரை லிட்டர் நீரில் இட்டு ஒரு தம்ளராக சுண்டக் காய்ச்சி காலை மாலை 2 வேளைகள்  2 தேக்கரண்டி வீதம் உள்ளுக்குக் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு உப்புசம் குணமாகும்.

 

12.      நுணா இலையை நல்லெண்ணெயில் வதக்கி ஒற்றடம் கொடுப்பதுடன், வீக்கத்தின் மேல் வைத்துக் கட்டி வந்தால், அடிபட்ட காயம் குணமாகும்.  வலியும்தீரும். (1425)

 

13.      நுணா மர வேரைக் கசாயம் வைத்துக் குடித்து வந்தால் மலச் சிக்கல் குணமாகும்.  (1283)  சுக பேதியாகும்   (1426)

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

 

==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )10]

{24-05-2021}

===================================================


நுணா


நுணாக் காய்

நுணா மரம்

நுணாக்காயும் பூவும்

நுணாக் காய்