இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

சுண்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுண்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 21 மே, 2021

சுண்டை

          மூலிகைப் பெயர்...........................................சுண்டை

       மாற்றுப் பெயர்................:கடுகி, மலைச்சுண்டை

       தாவரவியல் பெயர்....................SOLANUM TORVUM

       ஆங்கிலப் பெயர்...................................... Turkey Berry

       சுவை........................................................................கைப்பு

       தன்மை.................................................................வெப்பம்

 

===================================================

 

1)    அகன்ற சிறகாக உடைந்த இலைகளையும் வெண்மை நிறப் பூங்கொத்துக்களையும், கொத்தான உருண்டை வடிவக் காய்களையும் உடைய முள் உள்ள செடி.

 

2)    மலைக் காடுகளில் தானே வளரும் செடி மலைச் சுண்டை ஆகும். இது தவிர நாட்டுச் சுண்டை, ஆனைச் சுண்டை (பால் சுண்டை) ஆகியவையும் உள்ளன, நாட்டுச் சுண்டைக் காய்  சற்றே கசப்புடையது. காயும் வேரும் மருத்துவப் பயன் உடையவை.

 

3)    சுண்டைக் காயில் இரும்புச் சத்து, கால்சியம் சத்து, புரதச் சத்து, வைட்டமின்”, “பி”, “சி”, “ஆகியவைஉள்ளன.(Asan)

 

4)    கோழை அகற்றியாகவும், வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும் செயற்படும். (Asan)

 

5)    சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக் கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக் கடுப்பு, திமிர்ப் பூச்சி முதலியன தீரும்.(Asan)

 

6)    உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊற வைத்து, காய வைத்து, எண்ணெயில் வறுத்து, இரவு உணவில் பயன்படுத்தி வர, மார்புச்சளி, ஆஸ்துமா, வயிற்றுப் போக்கு நின்று விடும்.(Asan)

 

 

7)    சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளைஓடு, மாம்பருப்பு, கறிவேம்பு, சீரகம் வறுத்து இடித்த சூரணம் காலை மாலை 2 சிட்டிகை மோரில் சாப்பிட்டு வந்தால் பேதி, மூலம், பசியின்மை, மார்புச்சளி தீரும்.(Asan)

 

8)    சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை இள வறுப்பாய் வறுத்து, உப்பு சேர்த்துச் சூரணித்து (பொடியாக்கி) உணவில் கலந்து சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் ஆகியவை தீரும்.(Asan)

 

9)    சுண்டை வற்றல் உண்டு வரின், பித்த ஏப்பம், வயிறூதல், வயிற்று வலி ஆகியவை போகும்(Asan)

 

10)   சுண்டைக்காயை உணவில் சேர்த்து வந்தால் நீரிழிவு நீங்கும்.(Asan)

 

11)   சுண்டைக்காய் வேர்ப்பட்டையைப் பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க  வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கில் இழுக்க தலைநோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர் பாய்தல் ஆகியவை போகும். (Asan)

 

12)   சுண்டைக் காயில் சிறிதளவு உப்பு சேர்த்து புளித்த மோரில் போட்டுக் காய வைத்து உலர்த்தி, உணவுடன் உண்டு வந்தால் சர்க்கரை நோய் தணியும்.(Asan)

 

13)   தினமும் 15 சுண்டை வற்றலை சிறிதளவு நல்லெண்ணையில் வறுத்து சாப்பிட்டு வந்தால், காச நோய், மார்புச் சளி, வறட்டு இருமல்  ஆகியவை கட்டுப்படும்.(Asan)

 

14)   சிறிதளவு சுண்டைக் காய், கறிவேப்பிலை, மிளகு போட்டு, கசாயம் வைத்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்தால் வயிற்றுப் பூச்சிகள் குறையும்.(Asan)

 

15)   சுண்டைகாயை சிற்றாமணக்கு எண்ணெயில் வறுத்து, சிறிதளவு உப்பு, கறிவேப்பிலை, சீரகம், மிளகு சேர்த்து பொடித்து உணவுடன் உண்டு வந்தால் மந்தம், செரியாமை தீரும்.(Asan)

 

16)   சுண்டைக் காய் வற்றல், ஓமம் இரண்டையும் சம அளவு எடுத்து, பொடித்து, இரண்டு கிராம் வீதம் காலை வேளை தினமும் சாப்பிட்டால் குடல் பூச்சிகள் அழியும்.(Assan)

 

17)   சுண்டைக்காய் வற்றலைப் பொடித்து தினமும் காலையில் ஐந்து கிராம் வீதம் உட்கொண்டால் உடல் பருமன் குறையும்.(Asan)

 

18)   சுண்டை வற்றல், கறிவேப்பிலை, சீரகம், மிளகு, வெந்தயம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து பொன்னிறமாக வறுத்து, சிறிதளவு உப்பு சேர்த்து உணவுடன் மூன்று வேளை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் சுவையின்மை, பசிமந்தம், மூலம் ஆகியவை சீரடையும்.(Asan)

 

19)   ஒரு தேக்கரண்டி சுண்டை வற்றல் சூரணத்தை சிறிதளவு மோரில் கலந்து காலை மாலையாக 30 நாள் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பிரச்சினைகள் தீரும்.(Asan)

 

20)   சுண்டை வற்றல், சீரகம், சோம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து,பொடித்து தினமும் காலை மாலையில் இரண்டு கிராம் சாப்பிடலாம். தைராய்டு பிரச்சினை கட்டுப்படும்.(Asan)

 

21)   சுண்டைக்காய் வற்றல், ஓமம், கசகசா, சுக்கு, காய்ந்த கறிவேப்பிலை ஆகியவற்றை சம அளவில் எடுத்து தனித் தனியே நெய்யில் வறுத்து, ஒன்றாகச் சேர்த்து, பொடித்து, வேளைக்கு அரைத் தேக்கரண்டி வீதம் காலை மாலையில் வெந்நீரில் அருந்தி வந்தால் வயிற்றுப் போக்கு கட்டுப்படும்.(Asan)

 

22)   சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து, பொடித்து, உணவுடன் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயால் ஏற்படும் கைகால் நடுக்கம், மயக்கம், உடல் சோர்வு, வயிற்றுப் பொருமல், மூலக் கடுப்பு, மூல நோயால் உண்டாகும் இரத்தக் கசிவு ஆகியவை சீராகும்.(Asan)

 

23)   சுண்டை வேர், இலுப்பைப் பிண்ணாக்கு, தும்பை வேர் ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து, காய வைத்து, பொடித்து நுகர்ந்து வந்தால், இழுப்பு, வாத நோய் தணியும்.(Asan)

 

24)   ஒரு கைப்பிடி அளவு சுண்டை வேரை எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 150 மி.லி அளவுக்குச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் காய்ச்சல் கட்டுப்படும்.(Asan)

 

25)   சுண்டைக் காய் 30 எண்ணிக்கை எடுத்து இரண்டாக நறுக்கி வைக்கவும். சின்ன வெங்காயம் 2 எடுத்து நேர்த்தியாக நறுக்கவும். தலா அரைத் தேக்கரண்டி வீதம் மிளகு, சீரகம் இரண்டையும் எடுத்து ஒன்றிரண்டாக உடைக்கவும். பூண்டுப் பல் 2 எடுத்து நசுக்கவும். அனைத்தையும் ஒன்றாகப் போட்டு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும், சற்று வெந்ததும் கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை, சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கவும்.  சுண்டைக்காய் சூப் தயார். இருமல், ஈளை, மூலநோய் ஆகியவற்றுக்கு இந்த சூப் மிகவும் நல்லது.(Asan)

 

26)   (ஆதாரம் :- நாகர்கோயில் எஸ்.மகாலிங்க ஆசான் 05-02-2017 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கட்டுரை.)

 

27)   சுண்டைக் காயைச் சமைத்து உண்டு வந்தால் மூலக் கடுப்பு குணமாகும்.(1315) கபம் நீங்கும் (1318)

 

28)   சுண்டைக்காயைக் கழுவி பாதி அரிந்து உப்புப் போட்டுப் பிசறி ஊற விடவும். ஒரு வாரம் கழித்து தயிருடன் சுண்டைக்காய், போதிய உப்பு சேர்த்து பிசறி அமுக்கவும். மறு நாள் வெயிலில் நன்கு காயவிட்டு வைக்கவும். சுண்டைக்காய் வற்றல் தயார். இந்த வற்றலை எண்ணெ யில் வறுத்து பொடித்து, இரவு மட்டும் உணவுடன் உண்டு வந்தால், மார்புச் சளி, ஆஸ்துமா, குணமாகும். வயிற்றுப் போக்கு நீங்கும்.(128)

 

29)   சுண்டை வற்றல், அகத்திக்கீரை போன்ற கசப்பு உணவுகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். (548)

 

30)   சுண்டை வற்றலை நல்லெண்ணெயில் வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி வற்றல் பொடியை எடுத்து சிறிது சுடு சோற்றில் இட்டு பிசைந்து சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.(658)

 

31)   சுண்டை வற்றல், சுக்கு, மிளகு ஏலக்காய், நித்தியகல்யாணிப் பூ (உலரவைத்த பூ) ஆகியவற்றை எடுத்து இடித்து பொடியாக்கி அவித்து ஒரு வருடம் உண்டு வந்தால் புற்று நோய் குணமாகும்.(818)

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

=================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )07]

{21-05-2021} 

=================================================


சுண்டைக் காய்

சுண்டைக் காய்

சுண்டை வற்றல்

சுண்டைச் செடி


சுண்டைக் காய்