இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

பொடுதலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொடுதலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 மே, 2021

பொடுதலை

 

          மூலிகைப்பெயர்.....................................பொடுதலை

          மாற்றுப் பெயர்...............................................................

          தாவரவியல் பெயர்...............................Phyla nodiflora

          ஆங்கிலப் பெயர்............................................Frog Fruit 

 

===================================================

01.      பொடுதலை     இலையுடன் மிளகு, சீரகம், உப்பு சேர்த்து நெய்யில் வதக்கி உண்டு வந்தால் வயிற்றுப் புண் ஓரிரு நாளில் குணமாகும். (726)

 

02.      பொடுதலைச் சாற்றில் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து அடுப்பில் ஏற்றிக் காய்ச்சி வடித்து வாரம் இரு முறை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் பொடுகுப் புண்கள் குணமாகும். (935)   

 

03.      பொடுதலைச் சமூலச் சாறும் நல்லெண்ணெயும் சம அளவு எடுத்து காய்ச்சி வாரம் இரு முறை தலை முழுகி வந்தால் தோல் நோய், பொடுகு ஆகியவை தீரும். (1506)

 

04.      பொடுதலையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்து, ஒரு கிராம் அளவுக்கு எடுத்து தயிரில் கலக்கிக் உள்ளுக்குக் கொடுத்து வந்தால் வெள்ளை படுதல், வெட்டைச் சூடு ஆகியவை தீரும். (1503)       

 

05.      பொடுதலைக் கீரையுடன் இஞ்சி, புதினா, கொத்துமல்லித் தழை, கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து துவையல் செய்து சுடு சோற்றில் போட்டு நெய் ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டு வந்தால் மார்புச் சளி தீரும். (1504)

 

06.      பொடுதலையுடன் உளுத்தம் பருப்பும் சேர்த்து நெய்யில் வதக்கி, துவையல் செய்து பகல் உணவாகச் சாப்பிட்டு வந்தால் உள்மூலம், பௌத்திரம் ஆகியவை தீரும். (1505)


07. அக்கி கொப்புளங்கள் வந்தால் எரிச்சல் உண்டாகும். அதற்கு இந்த பொடுதலை கீரையின் இலைகளை பறித்து அதை மைபோல் அரைத்து அதன் மீது தடவினால் கொப்புளங்கள் உடைந்துவிடும். மேலும் அதன் புண்களும் விரைவில் ஆறிவிடும்.

o8. ஒற்றை தலைவலிக்கு இந்த பொடுதலை கீரையை அரைத்து பற்று போட்டால் விரைவில் ஒற்றை தலைவலி சரியாகும். மேலும் அடிக்கடி இந்த கீரையை நம் உணவில் சேர்த்து வந்தால் கருப்பை வலுப்பெறும்.


09. இந்த கீரையில் கஷாயம் செய்து இரண்டு நாட்களுக்கு காலை, மாலை என இருவேளை குடித்து வந்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும்.


10. மேலும் விரைவீக்கம் சரியாக இந்த கீரையை அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பற்று போட்டால் விரைவில் சரியாகிவிடும்.

 

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )13]

{27-05-2021}

===================================================


பொடுதலை

பொடுதலை

பொடுதலை

பொடுதலை