இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

கொய்யா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொய்யா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 மே, 2021

கொய்யா

 

                 மூலிகைப் பெயர்....................................கொய்யா

                 மாற்றுப்பெயர்கள்.....................................................

                 தாவரவியல் பெயர்..................PSIDIUM GUAJAVA

                 ஆங்கிலப் பெயர்..................................GUAVA TREE

 ==================================================

 

01.     கொய்யா சிறு மர வகையைச் சார்ந்தது. 15 அடி உயரம் வரை வளரக் கூடியது. எதிரெதிர் அடுக்குகளில் அமைந்துள்ள கொய்யா இலை அகலத்தைவிட நீளம் சற்று அதிகமானது.(Asan)

 

02.     கொய்யாப் பூ வெள்ளை நிறத்தில் இருக்கும். காய்கள் உருண்டையாக இருக்கும். பழத்தின் சதைப் பகுதி வெள்ளையாக இருந்தால் அதை பசுங் கொய்யா என்றும், சிவப்பாக இருந்தால் அதை எருமைக் கொய்யா என்றும் கூறுவார்கள். பழம் மணம் மிக்கது. (Asan)

 

03.     வெள்ளைக் கொய்யா, சிவப்புக் கொய்யா இரண்டுமே ஒரே மருத்துவக் குணங்களைக் கொண்டது.(Asan)

 

04.     கொய்யா மரத்தின் இலை, பட்டை, வேர், பழம் ஆகியவை பயன்  தரும் பாகங்கள் ஆகும்.(Asan)

 

05.     கொய்யாப் பழத்தில் வைட்டமின்பி”, “சி”, சுண்ணாம்புச் சத்து, புரதச் சத்து, நார்ச் சத்து, இரும்புச் சத்து, தாது உப்புகள், பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.(Asan)

 

06.     சிவப்புக் கொய்யாவில்  கரோட்டினாய்டுஎன்னும் நிறமி இருப்பதால் பழத்தின் சதைப் பகுதி சிவப்பாக இருக்கிறது.(Asan)

 

07.     கொய்யாப்பழத்தில் உள்ளகரோட்டினாய்டுமற்றும்லைகோபைன்என்னும் வேதிப் பொருள்கள் புற்று நோய்க் கட்டிகளைக் குணப்படுத்தும் தன்மை கொண்டவை. மேலும் கொய்யாவில் கொழுப்பு இல்லையாதலால் பெருங்குடலை  நச்சுத் தன்மையில் இருந்து காக்கிறது.(Asan)

 

08.     ஆப்பிளை விடக் கொய்யாவில் அதிகமான சத்துக்கள் உள்ளன. ஆரஞ்சுப் பழத்தோடு ஒப்பிட்டால் வைட்டமின்சிகொய்யாவில் நான்கு மடங்கு அதிகம். கடித்துச் சாப்பிடுவதால் பலன் அதிகம். பற்களும் ஈறுகளும் பலம் பெறும்.(Asan)

 

09.     கொய்யாப் பழத்தைத் தினமும் சாப்பிட்டு வந்தால் கண் குறைபாடுகளைத் தடுக்கலாம்.(Asan)

 

10.     கொய்யா இரத்தக் குழாய் அடைப்பு, இரத்த ஓட்டம் போன்றவற்றை  சீர் படுத்துகிறது.(Asan)

 

11.     கொய்யா இலைகளை ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால், தண்ணீரில் போட்டுக் காய்ச்சிக் கொப்பளிக்கலாம்.(Asan)

 

12.     கொய்யாப் பழத்தை சாலட் போல் சாப்பிட்டால்  உடல் குளிர்ச்சி அடையும். இரத்த சோகை நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.(Asan)

 

13.     கொய்யா இலைகளை அரைத்து, புண், காயங்களின் மீது தடவினால், விரைவில் ஆறிவிடும்.(Asan)

 

14.     நன்றாகப் பழுத்த கொய்யாப் பழத்துடன், மிளகுத் தூள், எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள பித்தம், சோர்வு நீங்கும்.(Asan)

 

15.     கொய்யா இலைகளைச் சந்தனத்துடன் அரைத்துப் பற்றுப் போடுங்கள். கடுமையான தலைவலி நீங்கும்.(Asan)

 

16.     கொய்யா இலைத் தேனீரை தொடர்ந்து 12 வாரங்கள் பருகி வந்தால், இரத்தத்தில் சர்க்கரை அளவு வெகுவாகக் குறையும்..(Asan)

 

17.     கொய்யா, சப்போட்டா, தேன் ஆகியவற்றைக் கலந்து சாப்பிட்டு வந்தால், உடல் வலுப் பெறுவதோடு, இரத்தமும் சுத்தமாகும்.(Asan)

 

18.     கொய்யாப் பழத்தை  புகைமதுப் பழக்கம் உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் நன்மை பெறலாம்.(Asan)

 

19.     கொய்யா இலையைக் கொதிக்க வைத்து, குளிர்ந்த  பிறகு தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால் கூந்தல் உதிர்வது நின்று, பலம் பெறும்.(Asan)

 

20.     கொய்யா இலையில் வைட்டமின்சிஇருப்பதால், முகப்பரு உண்டாவதைத் தடுக்கிறது.(Asan)

 

21.     கொய்யாப் பழத்தை இரத்த சோகையால் பாதிக்கப் பட்டவர்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், பலன் கிடைக்கும்.(Asan)

 

22.     கொய்யா இலைக் கசாயத்தை தினமும் வெறும் வயிற்றில் தொடர்ந்து குடித்து வந்தால் தைராய்டு சுரப்பு சம நிலைக்கு வரும்.(Asan)

 

23.     கொய்யாப் பழத்தைக் கழுவி, தோலுடன் சாப்பிடுங்கள். முகத்துக்குப் பொலிவையும், அழகையும் தருவதுடன், தோல் வறட்சியையும், முதுமைத் தோற்றத்தையும் போக்கி, இளமையைத் தருகிறது.(Asan)

 

24.     கொய்யாக் காய்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.(Asan)

 

25.     கொய்யாவின் இளம் தளிர் இலைகளைக் கழுவி, மூன்று தம்ளர் தண்ணீர் சேர்த்து, பத்து நிமிடம் பாத்திரத்தில் கொதிக்க விடவும். பின்னர் குளிர வைத்து வாய் கொப்பளித்து வந்தால் பல், ஈறு ஆகியவை பலப்படும். வாய் துர்நாற்றம் நீங்கும்.(Asan)

 

26.     கொய்யா இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் கசாயம், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். இருமல், தொண்டை மற்றும் இதயம் சம்பந்தமான பாதிப்புகளுக்கும், காக்காய் வலிப்பு, குழந்தைகளுக்கு மாந்தம், இழுப்பு போன்ற நோய்களுக்கும் நிவாரணியாகக் கொடுக்கப்படுகிறது.(Asan)

 

27.     கொய்யா இலையில் சட்னி செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. கண்களுக்கும், பல், ஈறு ஆகியவைகளுக்கும் நல்லது.(Asan)

 

28.     ஜப்பானில் நடத்திய ஆய்வில், கொய்யா இலைத் தேனீரானது இன்சுலின் உற்பத்தியைப் பெருக்குவதும், உடல் எடையைக் குறைப்பதும் உறுதியானது. ஆனால் கர்ப்பினிகள் இதைச் சாப்பிடக் கூடாது. (Asan)

 

29.     கொய்யாப் பழத்தை இரவில் சாப்பிட்டால் சிலருக்கு வயிற்று வலி உண்டாகலாம். எனவே பகலில் சாப்பிடுவது நல்லது.(Asan)

 

30.     கொய்யாப் பழத்தில் அமிலத் தன்மை இருப்பதால், வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள். வாதம், ஆஸ்துமா உள்ளவர்களும் கொய்யாப் பழத்தைத் தவிர்ப்பது நல்லது.(Asan)

 

31.     கொய்யாப்பழத்தை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி, மயக்கம் ஏற்படலாம். எனவே ஒரு நாளைக்கு இரண்டு பழத்திற்கு மேல் சாப்பிட வேண்டாம்.(Asan)

 

32.     கொய்யாப் பழத்தை இருமல் இருக்கும் போது சாப்பிட்டால், மேலும் அதிகரிக்கும். எனவே தவிர்த்திடுக. தோல் நோய் உள்ளவர்களும் தவிர்க்க வேண்டும்.(Asan)

 

33.     கொய்யாப்பழம் நாட்டு மருந்து சாப்பிடும் போது வேண்டாம். மருந்து முறிவு ஏற்படும்.(Asan)

 

34.     (ஆதாரம்: நாகர்கோயில், எஸ்.மகாலிங்கம் ஆசான், 31-07-2016 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கட்டுரை.)

 

35.     கொய்யாப் பழம் தினசரி ஒன்று வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை குணமாகும்.(533) (1256) (1881)

 

36.     கொய்யாப் பழம் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம். எந்தத் தீங்கும் நேராது.(1211)

 

37.     கொய்யாப் பழம் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படும். (1261)(1868). கொய்யாப் பழம் வயிற்றுப் புண்களை ஆற்றும் .(1294)

 

38.     கொய்யா மரத்தின் கொழுந்து இலைகளைப் பறித்து மென்று தின்றால் குடல் வாயு தீரும் (1316)

 

39.     கொய்யா வேரை எடுத்து நசுக்கி இரவில் நீரில் ஊற வைத்து, அந்த நீரைக் கொண்டு கழுவி வந்தால் வெளி மூலம் குணமாகும். (1288)

 

40.     கொய்யா வேரை எடுத்து சிதைத்து நீரில்  போட்டுக் கொதிக்க வைத்து  காலையில் அந்த நீரை எடுத்து அருந்தினால் பேதி நிற்கும். (1317)

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )05]

{19-05-2021}

==================================================


கொய்யா



கொய்யா

கொய்யா