மூலிகைப்
பெயர்:...............................................களா
மாற்றுப் பெயர்கள்.............................................கிளா
தாவரவியல் பெயர் .............CARRISSA
CARANDAS
தாவரக் குடும்பம் ...........................APRCYANACEAE
ஆங்கிலப் பெயர்......................BENGAL CURRANTS
==================================================
01. வளரும் தன்மை --செம்மண்ணில்
நன்கு வளரும். மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். ஐந்து முதல் ஆறு அடி
உயரம் வரை வளரும். முட்கள் உள்ள செடி, தடிப்பான பச்சை இலைகளையுடையது. காரைச்செடிபோன்று இருக்கும்.
வெண்மையான பூக்களையும், சிவப்பு நிறக்காய்களையும், கறுப்புப்
பழங்களையும் கொண்டது. பூவும் காயும் புளிப்புச் சுவையுடையவை. விதைமூலம்
இனப்பெருக்கம் செய்யும்
02. பயன்தரும் பாகங்கள் --பூ, காய், பழம், வேர்ஆகியவை மருத்துவப் பயனுடையவை. இச்செடியின் வேர் தாதுக்களின் வெப்பு தணிக்கும், சளியகற்றும், மாத விலக்கைத் தூண்டும்.
03. காயுடன் இஞ்சி சேர்த்து ஊறுகாயாக்கி உணவுடன் உட்கொண்டால் , பசியின்மை, சுவையின்மை, நீங்கும். இரத்தபித்தம், தணியாத
தாகம், பித்தக்குமட்டல் ஆகியவை தீரும்.
04. வேரை உலர்த்திப் பொடித்துச் சமன் சர்க்கரைக் கலந்து
3 கிராம்
காலை மாலை சாப்பிட்டு வந்தால் பித்தம், சுவையின்மை, தாகம், அதிகவியர்வை, சில்விஷங்கள்
தீரும்.
05. களாப்பழத்தை உணவு உண்டபின் சாப்பிட்டால், உண்ட உணவு
விரைவில் செரிக்கும்.
06. தூய்மையான களாப்பூவை நல்லெண்ணையில் இட்டு பூ மிதக்கும் வரை
வெய்யிலில் வைத்திருந்து வடிகட்டி இரண்டொரு துளிகள் நாள் தோறும் கண்களில் விட்டு
வரக் கண்களில் ஏற்படும் வெண்படலம், கரும்படலம், இரத்தப்
படலம், சதைப்படலம் ஆகியவை தீரும்.(005) (048)
07. களாச் செடியின் வேர் ஐம்பது கிராம் எடுத்து நசுக்கி
அரை லிட்டர் நீரிலிட்டு 100 மி.லி. ஆகக் காய்ச்சி வடிகட்டி காலை மாலை 50 மி.லி
ஆகக்கொடுக்க மகப் பேற்றின் போது ஏற்படும் கருப்பை அழுக்குகள் வெளிப்படும்.
08. களாக்காய் ஊறுகாய் சாப்பிட்டு வந்தால் செரிமான ஆற்றல் மேம்படும்.(291)
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,விடை(வைகாசி
)01]
{15-05-2021}
களாக்காய் |
களாக்காய் |
களா மரம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக