மூலிகைப் பெயர்.........................அதிமதுரம்
மாற்றுப் பெயர்கள்.............................................
தாவரவியல் பெயர்..............
ஆங்கிலப் பெயர்.... JEQUITITY ,
LIQUORICE
==========================================================
01.
அதிமதுரம், நேத்திர மூலி இரண்டையும் தூள் செய்து வெந்நீர் கலந்து உட்கொண்டு வந்தால் கண்கள் ஒளி பெறும். (002)
02.
அதிமதுரம், திப்பிலி, கடுக்காய் ஆகியவை தலா 10 கிராம் எடுத்து 5 மிளகையும் அத்துடன் சேர்த்து பொடி செய்து தேன்கலந்து உள்ளுக்குச் சாப்பிட்டு வெந்நீர் அருந்தி வந்தால் கண் எரிச்சல் குணமாகு.((016)
03.
அதிமதுரம், அமுக்கரா கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து கால் தேக்கரண்டி எடுத்து நெல்லிக்காய் சாற்றில் கலந்து தினமும் உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் கண் நோய் குணமாகும்.(022)
04.
அதிமதுரப் பொடி ஒன்று அல்லது இரண்டு கிராம் எடுத்து தேனில் குழைத்து தினமும் உட்கொண்டு வந்தால் தொண்டை கர கரப்பு, இருமல், மூலம், நரம்புத் தளர்ச்சி ஆகியவை குணமாகும்.(088)
05.
அதிமதுரப் பொடி ஒரு கிராம் எடுத்து சர்க்கரை சேர்த்து காலை மாலை உட்கொண்டு வந்தால் சளி, இருமல், தொண்டை வலி ஆகியவை தீரும் (133)
06.
அதிமதுரம் ஒரு துண்டும் தாளிசபத்திரி சிறிதளவும் எடுத்து வாயில் இட்டு அடக்கிக் கொண்டால் வறட்டு இருமல் குணமாகும்(210)
07.
அதிமதுரம் ஒரு சிறு துண்டு எடுத்து வாயில் போட்டு அதக்கிக் கொண்டால், நெஞ்சுக் கமறல் நீங்கும்.(323)
08.
அதிமதுரம் பொடியுடன் சந்தனத் தூள் சமமாகக் கலந்து ஒரு கிராம் எடுத்து பாலில் கலந்து உள்ளுக்குக் கொடுத்தால் இரத்த வாந்தி தீரும்.(560)
09.
அதிமதுரம் 35 கிராம், சோம்பு 35 கிராம், சர்க்கரை வேர் 17 கிராம், கொடிவேலிப் பட்டை 17 கிராம் எடுத்து அனைத்தையும் பொடியாக்கி கால் தேக்கரண்டி எடுத்து காலை மாலை வெந்நீரில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாகும்.(754)
10.
அதிமதுரம், சிற்றரத்தை, மாதுளம் பூ, அறுகம்புல், மிளகு, சீரகம் அனைத்தையும் அளவோடு போட்டு கசாயம் வைத்துச் சாப்பிட்டு வந்தால், வெட்டை நோய் குணமாகும்.(943)
11.
அதிமதுரம், பற்பாடகம், நிலவேம்பு, சுக்கு, சீரகம் அனைத்தையும் அளவோடு சேர்த்து கசாயம் வைத்துக் குடித்து வந்தால் நச்சுக் காய்ச்சல் குணமாகும்.(1470) (1687)
12.
அதிமதுரம் ஒரு துண்டு எடுத்து நசுக்கி, தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் கசாயம் செய்து அருந்தி வந்தால் வயிற்றுப் புண் ஆறும்.(1671)
===========================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.
[தி.பி:2052,மேழம் (சித்திரை)17]
{30-04-2021}
![]() |
அதிமதுரம் |
![]() |
அதிமதுரம் |
![]() |
அதிமதுரம் |