இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

சிற்றரத்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிற்றரத்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 21 மே, 2021

சிற்றரத்தை

 

           மூலிகைப்பெயர்.......................................சிற்றரத்தை

           மாற்றுப் பெயர்கள்..........................................................

           தாவரவியல் பெயர்...........................................................

           ஆங்கிலப் பெயர்..............................ALPINIA GALANGA

 

 =================================================

 

01.   சிற்றரத்தை, கடுக்காய்த் தோல் இரண்டையும் சிவக்க வறுத்து பொடி செய்து ஒரு சிட்டிகை எடுத்து வாயில் போட்டு அடக்கிக் கொண்டால் வறட்டு இருமல்  குணமாகும்.(118)

 

02.   சிற்றரத்தைப் பொடி ஒரு கிராம் எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வந்தால், சுரம், சளி, ஈளை, இருமல், தொண்டைப் புண், நீர்க்கோவை, வாயு நீங்கும்.(120)

 

03.   சிற்றரத்தை, அறுகம்புல், மிளகு, சீரகம், அதிமதுரம், மாதுளம்பூ ஆகியவற்றை எடுத்து நீரில் இட்டுக் கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் வெட்டை நோய் குணமாகும்.(943)

 

04.   சிற்றரத்தை மருதம் பட்டை, திப்பிலி, சுக்கு சேர்த்துக் கசாயம் வைத்து 48 நாட்கள் குடித்து வந்தால் இரைப்பிருமல் (ஆஸ்துமா) குணமாகும்.(1465)


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !


=================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )07]

{21-05-2021}

=================================================


சிற்றரத்தை

சிற்றரத்தை

சிற்றரத்தை