இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

நன்னாரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நன்னாரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 மே, 2021

நன்னாரி

 

           மூலிகைப் பெயர்.......................................நன்னாரி

           மாற்றுப் பெயர்கள்....................கிருஷ்ணவல்லி

           ....................................................பாற்கொடிசாரியம்

           தாவரவியல் பெயர்......................................................

           ஆங்கிலப் பெயர்...............INDIAN SARASAPARILLA

 ===================================================

 

01.   நன்னாரி வேரைப் பச்சையாக எடுத்து ஊற வைத்து, வடிகட்டி, அந்த நீரை காலை மாலை அரைத் தம்ளர் வீதம் குடித்து வந்தால் பசி... பசி... என்று பறப்பவர்களின் மிகு பசி உணர்வு குணமாகும்.  (298)

 

02.   நன்னாரி வேரை இடித்துச் சாறு எடுத்து, பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்தக் கோளாறுகள் நீங்கும்.  (558)

 

03.   நன்னாரி வேர் சூரணம் ஒரு தேக்கரண்டி எடுத்து வெண்ணெயில் கலந்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் ஆரம்ப கட்ட குட்டம் குணமாகும்.   (622) (1462)

 

04.   நன்னாரி வேர் 20 கிராம் எடுத்து நீரில் இட்டுக் காய்ச்சி, கசாயம் செய்து வடிகட்டிச் சாப்பிட்டு வந்தால், பாரிச வாதம் குணமாகும்.  (1113)

 

05.   நன்னாரி வேர் ஐந்து  கிராம் எடுத்து அரைத்து பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு, நீர்ச் சுருக்கு ஆகியவை குணமாகும்.  (1366)

 

06.   நன்னாரி வேரை ஊற வைத்து வடிகட்டி குடித்து வந்தால்  நீரிழிவு தீரும்.   (1378)

 

07.   நன்னாரி வேரைச் சிதைத்து ஒரு நாள் ஊற வைத்து, அந்த நீரைக் குடித்து வந்தால் சொறி சிரங்கு, மேக நோய் தீரும்.  (1410)

 

08.   நன்னாரி வேரைக் கசாயம் செய்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் வாத நோய் கட்டுப்படும்.  (1421)  செரியாமை, தோல் நோய்கள் தீரும்.  (1436)

 

09.   நன்னாரி வேர்ப் பொடி தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை, பாண்டு ஆகியவை தீரும்.  (1481)

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )09]

{23-05-2021}

==================================================



நன்னாரி


நன்னாரி

நன்னாரி விதை

நன்னாரி வேர்