இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

மஞ்சள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மஞ்சள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 மே, 2021

மஞ்சள்

 

             மூலிகைப் பெயர்.............................................மஞ்சள்

             மாற்றுப் பெயர்கள்................அரிசனம், கான்சனி,

             ...........................................................................நிசி, பீதம்

             தாவரவியல் பெயர்........................CURCUMA LONGA

             ஆங்கிலப் பெயர்..........................................TURMERIC

 

===================================================

 

01.   மஞ்சள் புல் வகையைச் சார்ந்த ஒரு செடி. 60 முதல் 90 செ.மீ உயரம் வரை வளரும். இதன் ஈட்டி வடிவ இலைகள் பச்சைப் பசேலென்று நீண்டு கொத்தாகக் காணப்படும். பூக்கள் நீள வாக்கில் அடுக்கடுக்காக இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். தண்டின் கீழ் முனையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள்  செல்லும் நீண்ட வேர் தான் மஞ்சள் கிழங்கு. (Asan)

 

02.   கிழங்கு மஞ்சள் நிறத்தில் இருக்கும். உலர்ந்த கிழங்குகள்  மருத்துவப் பயன் உடையவை. (Asan)

 

03.   மஞ்சளில் இரும்புச் சத்து, மாங்கனீஸ், பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம், தாமிரம், மெக்னீஷியம், நார்ச்சத்து, வைட்டமின்பி-6”, “சி”, ஆகியவை உள்ளன. (Asan)

 

04.   மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை விரல் (விரலி) மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், பூசு மஞ்சள் (பலகை மஞ்சள்) ஆகியவை. (Asan)

 

05.   மஞ்சளின் பொதுவான குணங்கள் :- நோய் எதிர்ப்பு ஆற்றல் கொண்டது, இருமல் தணிக்கும், இதயத் துடிப்பு சீரகும், உடல் சுத்தமாகும், எடை குறையும், கல்லீரலில் சேரும் நஞ்சை அகற்றும், காய்ச்சல் தணிக்கும், குடல் பூச்சி அழிக்கும், பாக்டீரியாக்களை அழிக்கும், செரிமானம் தூண்டும், சுவை தரும், (Asan)

 

06.   தலைவலி அகலும், தொழுநோய் கட்டுப்படும், தூக்கம் மேம்படும், நீரிழிவைக் கட்டுப்படுத்தும், பசியைத் தூண்டும், பல்நோய் குறையும், புற்று நோயை எதிர்க்கும், மலச்சிக்கல் தீரும், முதுமையைத் தள்ளிப் போடும், மூட்டு வீக்கம் குறையும், வாயுவை அகற்றும், இரத்த அழுத்தம் சீராகும் (Asan)

 

07.   கருப்பை நீர்க் கட்டிகளைக் கரைக்கும், மாதவிடாய்ப் பிடிப்புகளைத் தளர்த்தும், இரத்தம் தூய்மைப்படும். (Asan)

 

08.   மஞ்சள் தூளுடன் நெய் சேர்த்து உட்கொண்டால் இருமல் கட்டுப் படும். மஞ்சள் சூரணம் தின்றால் குடல் பிரச்சினை சீராகும். (Asan)

 

09.   மஞ்சள் பொடியுடன் சிறிதளவு கடுக்காய்ப் பொடி சேர்த்து அரைத்துப் பூசினால் சேற்றுப் புண் குணமாகும். (Asan)

 

10.   மஞ்சளைச் சுட்டு, புகையை நுகர்ந்தால் தலை நீரேற்றம், மூக்கடைப்பு குணமாகும். (Asan)

 

11.   மஞ்சளை (பச்சை மஞ்சளை) அரைத்து வண்டு, சிலந்திக் கடிக்குப் பூசினால் விஷம் முறியும். (Asan)

 

12.   மஞ்சள் பொடியுடன் சிறிது இலுப்பை எண்ணெய் கலந்து பூசினால் பித்த வெடிப்புகள் சரியாகும். (Asan)

 

13.   மஞ்சள் பொடியை வறுத்து பாலில் கலந்து பருகி வந்தால் மேக நோய் குணமாகும். (Asan)

 

14.   மஞ்சள் தூளுடன் பனங்கற்கண்டு, ஏலப்பொடி சேர்த்துப் பாலில் கலந்து பருகி வந்தால் மார்புச் சளி குணமாகும். (Asan)

 

15.   மஞ்சள் தூளுடன் சிறிது உப்பும் எலுமிச்சம் பழச் சாறும் கலந்து பூசினால் சுளுக்கு, புண்கள், மூட்டு உளைச்சல் ஆகியவை குணமாகும். (Asan)

 

16.   மஞ்சள் தூள் சிறிது எடுத்து சூடான நீரில் கலந்து தினமும் வெறும் வயிற்றில் குடித்தால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். செரிமான பிரச்சினைகளும் சீராகும். முதுமையைத் தள்ளிப்போடலாம். (Asan)

 

17.   மஞ்சள் தூளுடன் சிறிது தேன் கலந்து குழைத்து காலை மாலை அருந்தினால் சளி, தொண்டை அடைப்பு சீராகும். (Asan)

 

18.   மஞ்சள் தூளுடன் சிறிதளவு நல்லெண்ணெய், கற்பூரம் சேர்த்துக் காய்ச்சி புண்களின் மீது தடவி வந்தால் அவை விரைவில் ஆறும். (Asan)

 

19.   மஞ்சள் பொடியுடன் சிறிதளவு வெண்ணெய் கலந்து மூலத்திற்குத் தடவி வரலாம். (Asan)

 

20.   மஞ்சள்துண்டு ஒன்று, வசம்புத் துண்டு ஒன்று, மருதாணி இலை 5 கிராம், சிறிதளவு கற்பூரம் ஆகியவற்றை எடுத்து ஒன்றாக அரைத்து, கால் ஆணி உள்ள இடத்தில் வைத்துக் கட்டலாம். நிவாரணம் கிடைக்கும். (Asan)

 

21.   மஞ்சளைக் கசாயமாக்கி, பிரசவமான பெண்களுக்குக் கொடுத்தால், வயிற்றில் தங்கியுள்ள நச்சு நீர் வெளியேறிவிடும். வயிற்று வலி, சூதகச் சிக்கல் குறையும். (Asan)

 

22.   மஞ்சள் தூள் (தூய்மையானது) 4 சிட்டிகை எடுத்து 30 மி.லி தண்ணீரில் கலந்து குழந்தை இல்லாத பெண்கள், மாதவிலக்கு ஏற்பட்ட மூன்று நாட்கள் வெறும் வயிற்றில், மூன்று வேளை குடித்தால், மலட்டுத் தன்மை நீங்கி, குழந்தைப் பேறு கிடைக்கும். (Asan)

 

23.   குடமஞ்சள் (பலகை மஞ்சள்) பொடியைப் பெண்கள் உடலில் பூசிக் குளித்து வந்தால் தோல் பள பளப்பாகும். (Asan)

 

24.   குடமஞ்சளை அரைத்து இரவில் முகத்தில் பூசி, காலையில் கழுவினால் பெண்களுக்கு முகத்தில் வளரும் தேவையற்ற முடி பிரச்சினைக்கு, முற்றுப் புள்ளி வைக்கலாம்..(Asan)

 

25.   கஸ்தூரி மஞ்சளுக்கு ஆங்கிலத்தில் Wild Turmeric  என்று பெயர். இதன் தாவரவியல் பெயர் Curcuma aromatic .(Asan)

 

26.   குறிப்பு: பொதுவாக மஞ்சளை  உட்பிரயோகமாக உபயோகப் படுத்தினால் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாகப் பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.(Asan)

 

27.   (ஆதாரம்:- நாகர்கோயில், எஸ். மகாலிங்க ஆசான், 22-01-2017 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கட்டுரை.)

 

28.   மஞ்சள் கலக்கிய நீரில் ஒரு சுத்தமான வெள்ளைத் துணியை நனைத்து நிழலில் உலர்த்தி, கண்களைத் துடைத்து வந்தால் கிருமித் தாக்கு தடுக்கப்படும்.  (015)

 

29.   மஞ்சள் கிழங்கைக் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் கண் நோய்கள் குணமாகும்.  (033) (1920)

 

30.   மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி, தேன் ஒரு தேக்கரண்டி எடுத்து இரண்டையும் கலந்து தினமும் மூன்று வேளை உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் ஈஸ்னோபீலியா தொல்லை குறையும்.  (148)

 

31.   மஞ்சள் தூள், சிறிது மிளகுத் தூள் இரண்டையும் சேர்த்து பாலில் போட்டுக் காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.  (155)

 

32.   மஞ்சள் ஒரு துண்டை எடுத்து நல்ல விளக்கில் சுட்டுக் கரியாக்கி தேனில் குழைத்து உள்ளுக்குச் சாப்பிட்டால் விக்கல் நிற்கும்.  (255)

 

33.   மஞ்சள், அறுகம்புல், சுண்ணாம்பு  ஆகியவற்றை எடுத்து அரைத்து, நகச் சுற்றுக்குப் போட்டு வந்தால் நகச் சுற்று குணமாகும்.   (572)

 

34.   மஞ்சளை சிறு சிறு துண்டுகளாக்கி வறுத்துக் கரியாக்கிப் பொடி செய்து  அந்தப் பொடியில்  ஒரு தேக்கரண்டி எடுத்து தேனில் குழைத்து அருந்தி வந்தால்  குடல் புண் குணமாகும். (685)

 

35.   மஞ்சள் தூளும் பனங் கற்கண்டும் சிறிது எடுத்து சோறு வடித்த நீரில் போட்டுக் கலக்கி சற்று சூட்டோடு சாப்பிட்டால், வயிற்று உப்பிசம் தீரும்.  (716)

 

36.   மஞ்சளுடன் மருதாணி சேர்த்து அரைத்து இரவில் கால் ஆணி மீது வைத்துக் கட்டி வந்தால்  கால் ஆணி அற்றுப் போகும். (1044)

 

37.   மஞ்சளை அரைத்து தேவை இல்லாத முடி உள்ள இடங்களில் இரவில் தடவி காலையில் கழுவி வந்தால்  அந்த முடிகள் நாளடைவில் உதிர்ந்து விடும். (1278)

 

38.   மஞ்சளை சுட்டு புகையை மூக்கில்  நுகர்ந்தால் நீர்க்கோவை விலகும். (1282)

 

39.   மஞ்சளை வறுத்து  கரியானவுடன் பொடி செய்து, அந்தப் பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் குடற்புண் (அல்சர்) குணமாகும்.  (1309)

 

40.   மஞ்சள் பொடி கலந்த சுடு நீரில் ஆசனவாய் படும் படி அமர்ந்திருந்து  வந்தால் மூலப் புண் ஆறும்; மூல வலி குறையும். (394) (2018)

 

41.   மஞ்சளில் (விரலி மஞ்சளில்) விளக்கெண்ணெய் தடவி திரி விளக்கில் காட்டினால் புகை வரும். இந்தப் புகையைச் சுவாசிப்பதனால் தலை பாரம் குறையும்.(400)

 

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

 ==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )13]

{27-05-2021}

==================================================


மஞ்சள் வயல்


மஞ்சள் பூ


மஞ்சள் கிழங்கு


மஞ்சள் தோட்டம்


மஞ்சள் செடி