இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

புங்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புங்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 மே, 2021

புங்கு

 

       மூலிகைப் பெயர்.........................................................புங்கு

       மாற்றுப் பெயர்கள்.................................................................

       தாவரவியல் பெயர்........................ MILLETTIA PINNATA

       ஆங்கிலப் பெயர்...........................................INDIAN BEECH

 

===================================================

 

01.   புங்கம் பூவினை நிழலில் உலர்த்தி, நெய்யில் வறுத்துப் பொடி செய்து ஒரு சிட்டிகை காலை மாலை தேனில் குழைத்து 2 அல்லது 3 மண்டலம் சாப்பிட்டு வந்தால் நீரிழிவுப் புண்கள்( மதுமேக ரணங்கள் ) தீரும். புகை, போகம், மீன், கருவாடு நீங்கலாக உணவு கொள்க. (1477)

 

02.   புங்க இலையை மைய அரைத்து வெட்டுக் காயத்தின் மீது வைத்துக் கட்டினால், காயம் விரைவில் ஆறும்.  (527)

 

03.   புங்க இலையை அரைத்து விழுதாக்கி சிற்றாமணக்கு எண்ணெயில் இட்டுக் காய்ச்சி, இறக்குகையில் அரைத்த தேங்காய்த் துருவலைச் சிறிது போட்டு, பொறுக்கும் சூட்டில் நன்கு பிசைந்து காயத்தின் மீது பூசி வந்தால் அல்லது வைத்துக் கட்டினால் விரைவில் காயம் குணமாகும்.  (528)

 

04.   புங்க இலையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி, வீக்கத்தின் மீது வைத்துக் கட்டினால், வீக்கம் கரைந்து குணமாகும்.  (574)

 

05.   புங்க மர வேர், சிற்றாமணக்கு வேர் இரண்டையும் சம அளவு எடுத்து நீரில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி ஒரு தேக்கரண்டி உள்ளுக்குக் கொடுத்து வந்தால் கரப்பான் தீரும்.  (825)

 

06.   புங்கை மர வேரை எடுத்து, துண்டு துண்டாக்கி, சிதைத்து, நீரில் இட்டுக் கசாயமாகி, காலை மலை அரை தம்ளர் குடித்து வந்தால் ஆண் குறியில் உள்ள புண்கள் குணமாகும்.  (490)

 

07.   புங்கம் பட்டையை எடுத்து நீர் சேர்த்துக் கொதிக்க வைத்துக் கசாயமாக்கி, தினசரி 30 மி.லி. குடித்து வந்தால் மூல நோய் குணமாகும்.  (1269)

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )12]

{26-05-2021}

===================================================


புங்கு


புங்கம்பூ

புங்க மரம்

புங்க விதை

புங்கங்காய்