இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

சுக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 21 மே, 2021

சுக்கு

         மூலிகைப் பெயர்................................................சுக்கு

         மாற்றுப் பெயர்கள்.......அருக்கன், அர்த்தரகம்

          ...............................உலர்ந்த இஞ்சி, ஏகநிவாரண்

          ..................................கடுபத்திரம்சுண்டி, நாகரம்

         ..................மகாஔஷதா, விடமூடிய அமிர்தம்

         ..................................................................வேர்க்கொம்பு.

         தாவரவியல்  பெயர்............ZINGIBER OFFICINALE

         ஆங்கிலப் பெயர்.....................................DRY GINGER

 ==================================================

 

 

01.   உலர்ந்த இஞ்சிக்குப் பெயர் தான் சுக்கு. 100 கிலோ இஞ்சியிலிருந்து 25 கிலோ சுக்கு கிடைக்கும். .(Asan)

 

02.   சுக்கு காரச்சுவை உடையது. சுக்கில் வைட்டமின்”, ”பி-2”, “சி”, இரும்பு, கால்சியம், கொழுப்பு, சோடியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், புரதம், நியாசின் ஆகிய சத்துக்கள் உள்ளன. .(Asan)

 

03.   சுக்கில் ஜிஞ்சரால் என்னும் வேதிப் பொருள் உள்ளது. செரியாமை, இருமல், காதுவலி, சளி, பசியின்மை, மூட்டுவலி, இரத்தசோகை ஆகியவற்றுக்கு நிவாரணியாக சிபாரிசு செய்கிறது இந்திய ஆயுர்வேத மருத்துவம். .(Asan)

 

04.   சுக்குடன் சேர்த்து சிறிது துளசி இலையைச் சாப்பிட்டால் வாந்தி, குமட்டல் ஆகியவை நிற்கும்.(Asan)

 

05.   சுக்கை அரைத்து வீக்கம் உள்ள இடத்தில் பற்றுப் போட்டு வந்தால், வீக்கம் குணமாகும். (Asan)

 

06.   சுக்குடன் கொத்துமல்லி விதை சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் மூல நோய் தீரும்.(Asan)

 

07.   சுக்குப் பொடியுடன் எலுமிச்சம் பழச் சாறு கலந்து குடித்து வந்தால் பித்தம் தீரும். .(Asan)

 

08.   தயிர் சாதத்துடன் சிறிது சுக்குப் பொடி கலந்து சாப்பிட்டு வாருங்கள். வயிற்றுப் புண் குணமாகும். .(Asan)

 

09.   சுக்குப் பொடியுடன் சிறிது உப்பு பொடித்து, கலந்து பல்துலக்கி வாருங்கள். பல் வலி தீரும். .(Asan)

 

10.   ஒரு துண்டு சுக்கை மென்று சாப்பிடுங்கள். பல் வலி, தொண்டைக் கட்டு நீங்கும். .(Asan)

 

11.   சுக்குடன் சின்ன வெங்காயத்தை அரைத்துச் சாப்பிட்டல், வயிற்றில் உள்ள கெட்ட கிருமிகள் அழியும். .(Asan)

 

12.   சுக்கினை உணவுடன் சேர்த்து வந்தால், வாயுக் கோளாறுகள் வராவே வராது. வாயுக் கோளாறு இருந்தால் நீங்கும். .(Asan)

 

13.   சுக்குடன் சிறிதளவு வெற்றிலை சேர்த்துச் சாப்பிட்டாலும் வாயுத் தொல்லைகள் நீங்கும். .(Asan)

 

14.   சுக்கினை நீரில் அரைத்து, அதிக நீர் கலந்து அந்த நீரை அருந்தினால், மது போதை நீங்கும். .(Asan)

 

15.   சுக்குடன் வேப்பம் பட்டை சேர்த்து நசுக்கி, கசாயம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் வாதம் கட்டுப்படும். .(Asan)

 

16.   சுக்குத் தூளோடு சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டால் வயிற்று வலி நீங்கும். .(Asan)

 

17.   சுக்கை சிறிதளவு நீர் தெளித்து, விழுதாக அரைத்து நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும். .(Asan)

 

18.   சுக்குடன் அதிமதுரம் சேர்த்து, பொடித்து, உட்கொண்டு வந்தால், இருமல் சரியாகும். .(Asan)

 

19.   சுக்குடன் வெந்தயம் சேர்த்து, பொடித்து, தேனில் குழைத்து மூன்று வேளை சாப்பிட்டால் ஒவ்வாமை (அலர்ஜி) நீங்கும். .(Asan)

 

20.   சுக்குடன், மிளகு, கருப்பட்டி சேர்த்து, சுக்கு நீர் காய்ச்சிக் குடிக்கலாம். அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு  ஏற்படும். .(Asan)

 

21.   சுக்குப் பொடியை சிறிது தேலில் குழைத்து உள்ளுக்குக் கொடுத்தால், மயக்கம் தெளியும். .(Asan)

 

22.   சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவை சேர்த்து கசாயம் போட்டு காலை, மாலை குடித்தால்,  மாந்தம் போகும். .(Asan)

 

23.   சுக்கு, மிளகு, கொத்துமல்லி, திப்பிலி, சிற்றரத்தை ஆகியவை சேர்த்துக் கசாயம் வைத்து மூன்று வேளை அருந்தினால், நெஞ்சுச் சளி கரையும். .(Asan)

 

24.   சுக்கு, பெருங்காயத்துடன், பால் சேர்த்து அரைத்து இடுப்பு வலி, தலைவலி, மூட்டு வலிகளுக்குப் பற்றுப் போடலாம். .(Asan)

 

25.   சுக்கு, மிளகு, சீரகம் சேர்த்து எண்ணெயில் காய்ச்சி, தலையில் தேய்த்துக் குளித்து வந்தால், நீர்க்கோவை விலகும். .(Asan)

 

26.   சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை சேர்த்துக் கசாயம் வைத்து தினமும் மூன்று வேளை வீதம் இரண்டு நாள் சாப்பிட்டால், விஷக் காய்ச்சல் குறையும். .(Asan)

 

27.   அரைத் தேக்கரண்டி சுக்குப் பொடியுடன் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து, ஒரு தம்ளர் பாலில் கலந்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் சோர்வு நீங்கும்; உடல் வலுப்பெறும். .(Asan)

 

28.   சிறிதளவு சுக்குப் பொடியுடன் ஐந்து துளசி இலைகளைச் சேர்த்து, கொதிக்க வைத்து, தேன் கலந்து குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகும். .(Asan)

 

29.   அரைத் தேக்கரண்டி சுக்குப் பொடியுடன் சம அளவு புதினாச் சாறும், சிறிதளவு உப்பும் சேர்த்து உட்கொண்டால் இருமல் நீங்கும். .(Asan)

 

30.   சுக்குத் தூள் 5 கிராம், விளக்கெண்னெய் 5 மி.லி கலந்து கொதிக்க வைத்து தொடர்ந்து 48 நாட்கள் இரவில் உட்கொண்டு வந்தால், மூட்டு வலி, மூட்டு வீக்கம் விலகும். .(Asan)

 

31.   பத்து கிராம் சுக்கை அரைத்து, புளித்த மோரில் கலந்து, மூன்று நாட்கள் மூன்று வேளை வீதம் உட்கொண்டு வந்தால் வயிற்றுப் போக்கு கட்டுப்படும். .(Asan)

 

32.   சுக்கு, அமுக்கராங் கிழங்கு, பாதாம் பருப்பு, உலர்ந்த பேரீச்சம் பழம், கற்கண்டு ஆகியவற்றை எடுத்து, அரைத்து, காய்ச்சிய பசும்பாலில் கலந்து தேன்நெய் சேர்த்து, மீண்டும் சூடாக்கி இறக்கவும். இதைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். .(Asan)

 

33.   சுக்குப் பொடி 200 கிராம், திப்பிலிவறுத்த மிளகுஅதிமதுரப் பொடிசிறியா நங்கைப்பொடி தலா 25 கிராம், இந்துப்பு 5 கிராம் எடுத்து கலந்து வைத்துக் கொண்டு, காலை மற்றும் இரவு, உணவுக்கு முன் 2 கிராம் அளவு எடுத்து தேன்கலந்து உட்கொண்டு, வெந்நீர் குடித்தால் உடல் பருமன் குறையும். .(Asan)

 

34.   சுக்கு தயார் பக்குவம்: இஞ்சியை ஒரு நாள் முழுதும் நீரில் ஊற வைத்து, மூங்கில் குச்சிகளைக் கொண்டு தோலை நீக்கி, ஏழு நாட்கள் சூரிய ஒளியில் நன்கு காய வைத்தால் கிடைப்பதே சுக்கு. .(Asan)

 

35.   காலையில் சுக்கு, கடும் பகல் இஞ்சி, மாலையில் கடுக்காய் ஒரு மண்டலம் தின்றால், கோலை ஊன்றிக் குறுகி நடப்பவன் கோலை வீசிக் குலுக்கி நடப்பனேஎன்கிறது சித்தர் பாடல். .(Asan)

 

36.   இஞ்சியைப் போலவே சுக்கிலும் தோலை அகற்றுவது நல்லது. .(Asan)

 

37.   (ஆதாரம்: நாகர்கோயில், எஸ். மகாலிங்கம் ஆசான், 28-08-2016 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கட்டுரை.)

 

38.   சுக்கு, வால்மிளகு, ஏலரிசி, திப்பிலி  இவைகளை வறுத்து, தூளாக்கி ஒரு சிட்டிகை பால் அல்லது தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப் புண் குணமாகும்.(069)

 

39.   சுக்கு, மிளகு, திப்பிலி, கடுகு, கடுகு ரோகிணி, சீரகம், வேப்பங் கொழுந்து ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து நிழலில் காய வைத்து சிறு மாத்திரைகளாக்கி, காலை மாலை ஒன்று சாப்பிட்டு வந்தால் கடுமையான ஜலதாஷமும் தீரும் (164)

 

40.   சுக்கு, சோம்பு, கொத்துமல்லி விதை, பனை வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்துக் கசாயம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் மார்பு எரிச்சல், சளி ஆகியவை குணமாகும். (169)

 

41.   சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றின் பொடி சம அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குணமாகும்.(175)

 

42.   சுக்கு 10 கிராம், நிலவேம்பு. கண்டங்கத்தரி வேர் வகைக்கு ஒரு கைப்பிடி   எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக்  காய்ச்சி மூன்று வேளை கொடுத்தால் மலேரியாக் காய்ச்சல் குணமாகும்.(200)

 

43.   சுக்கு, காசுக்கட்டி, கடுக்காய்த் தோல், இந்துப்பு சம அளவு எடுத்து பொடி செய்து பற்பொடியாக்கி பல் துலக்கி வந்தால் பல் ஆட்டம், பல் சொத்தை, இரத்தக் கசிவு ஆகியவை தீரும். (228)

 

44.   சுக்கு, கடுக்காய், அரப்புப் பொடி சமமாகக் கலந்து பிராயன் மரப் பட்டையில் தைலம் செய்து, அந்தத் தைலத்தை மேற்கண்ட பொடியில் சேர்த்து  மெழுகு போல் அரைத்து பற்பொடி ஆக்கி, பல் தேய்த்து வந்தால், அனைத்து விதமான பல் நோய்களும் தீரும்  (232)

 

45.   சுக்கு ஒரு துண்டு எடுத்து வாயில் போட்டு அடக்கிக் கொண்டால்  பல் வலி குணமாகும்.(233)

 

46.   சுக்கு, மிளகு, திப்பிலி, விளாமிச்சை வேர், சீரகம் இவைகளை ஐந்து கிராம் வீதம் எடுத்து அரைத்து, பொடியாக்கி, காலை மாலை அரை தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் தலை கிறுகிறுப்பு, தலைச் சுற்றல் மறையும்.(275)

 

47.   சுக்கை நீர் விட்டு நன்றாக அரைத்து, கொதிக்க வைத்து, சூட்டுடன் மூட்டுகளில் பூசி வந்தால் மூட்டு வீக்கம் குறையும். (318)

 

48.   சுக்கு, திப்பிலி, எள் மூன்றையும் சம அளவு எடுத்து மைய இடித்துத் தூள் செய்து அரை  தேக்கரண்டி எடுத்து ஒரு நாளைக்கு மூன்று முறை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும்.(375)

 

49.   சுக்கை சிறிது நீர்விட்டுக் கல்லில் உரைத்து, அந்த விழுதை எடுத்து நெற்றியிலும், உச்சந் தலையிலும் பற்றிட்டால் தலைவலி குணமாகும்.(395) (1767)

 

50.   சுக்கு ஒரு துண்டு எடுத்து தோல் நீக்கி நீரில் போட்டு, சுண்டக் காய்ச்சி காலை மாலை சாப்பிட்டு வந்தால், தலையில் நீர் கோப்பு [கோத்திருந்தால்] ,குணமாகும்.(413)

 

51.   சுக்கு, நித்திய கல்யாணிப் பூ, மிளகு, ஏலம், சுண்டை வற்றல், இவற்றில் பூவை உலர்த்தி, இடித்துப் பொடியாக்கி மற்ற சரக்குப் பொடிகளுடன் கலந்து அவித்து ஒரு வருடம் உண்டு வந்தால் புற்று நோய் குணமாகும்.(818)


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )07]

{21-05-2021}

===================================================


சுக்கு

சுக்கு