மூலிகையின் பெயர்............... அரிவாள்மனைப் பூண்டு
மாற்றுப்பெயர்கள்................அரிவாள்மூக்குப் பச்சிலை
தாவரக்குடும்பம .....MALVACEAE SIDA CAPRINIFOLOLIA
1. அரிவாள் மனைப் பூண்டில் பயன்தரும் பாகங்கள் -: இலை, விதை,
வேர் முதலியன.
2. அரிவாள்மனைப் பூண்டு எல்லாவித மண்ணிலும் வளரும். ஆனால் செம்மண் நிலத்தில்
நன்கு வளமுடன் வளரும். கூர்
நுனிப் பற்கள் கொண்ட ஆப்பு வடிவ இலைகளை உடைய மிகக்குறுஞ் செடியினம்.
மாரிக் காலத்தில் தமிழகமெங்கும் சாலையோரத்தில் தானே வளரும்.
3. குருதிக் கசிவைத் தடுக்கும் மருந்தாகச் செயற்படும். இது விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப் படுகிறது.
4. அரிவாள்மனைப் பூண்டின் வேர்ப் பொடி நரம்புத் தளர்ச்சியை
போக்க வல்லது. ஞாபகச்
சக்தியை கூட்ட வல்லது. ஆண்,பெண் சிறு நீர் கழிக்கும்
பாதையை சுத்தப் படுத்த வல்லது. தகாத
உடல் உறவால் ஏற்படும் தொற்று வியாதிகளைக் குணப்படுத்தும்.
5. அரிவாள்மனைப் பூண்டின் வேர்ப் பொடியை ஒரு தேக்கரண்டிப் எடுத்து தினமும் உணவிற்குப் பின் 2
வேளை பெண்கள் உட்கொண்டால் உடல் பலஹீனம் ஆவதைக் கட்டுப்படுத்தும்.
6. அரிவாள்மனைப் பூண்டின் வேர்ப் பொடியையை அரைத் தேக்கரண்டி எடுத்து தேன் சேர்த்து
உட்கொண்டால் உரத்த குரலில் பேசுவதாலும், உரத்த குரலில் பாடுவதாலும் தொண்டையில் ஏற்படும் வறட்சி,
தொண்டைக் கம்மல் ஆகியவற்றைக் குணமாக்கும்.
7. அரிவாள்மனைப் பூண்டின் வேர், விதை இவைகளை இரண்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் கலந்து பொடி
செய்து சர்க்கரையுடன் சேர்த்துத் தினம் 3 வேளை சாப்பிட்டால் ஒரு வாரத்தில் உடலில் ஏற்படும் எரிச்சல்
குணமாகும்.
8. அரிவாள்மனைப் பூண்டின் வேரை எடுத்துத் துண்டுகளாக வெட்டி ஒரு லிட்டர்
தண்ணீரில் போட்டுக் காய்ச்சி சுண்ட வைத்து கால் லிட்டர் ஆனவுடன் அந்தக் கசாயத்தை, சாராயம் அருந்தித் தொண்டையில் எரிச்சல் உள்ளவர்கள் தினம்
இரு வேளை 2 அவுன்ஸ்
வீதம் ஒரு வாரம் குடித்தால் குணமடைவர்.
9. அரிவாள்மனைப் பூண்டின் இலையைக் கசக்கி வெட்டுக் காயத்தில்
பிழிய இரத்தப் பெருக்கு நிற்கும்.
10. அரிவாள்மனைப் பூண்டின் இலையுடன் சம அளவு குப்பை மேனி இலை,
பூண்டுப் பல் 2, மிளகு 3 சேர்த்து அரைத்து புன்னைக் காய் அளவு உள்ளுக்குக் கொடுத்து
காயத்திலும் கட்ட நஞ்சு முறியும். அப்போது
உப்பு, புளி நீக்க வேண்டும்.
12. அரிவாள் மூக்குப் பச்சிலையானது ஆயுதங்களால் உண்டாகின்ற காயத்தைச்
சீக்கிரத்தில் ஆற்றிடும்.
13. அரிவாள் மூக்குப் பச்சிலையை அம்மிக் கல்லில் வைத்து
வெண்ணெய் போல் அரைத்து வெட்டுப் பட்ட காயங்களுக்குத் தடவி, துணிச் சீலைக் கொண்டு அழுத்திக் கட்டவேண்டும்.
இதனல் இரத்தம் சொரிதல் நீங்கி விரைவில் ஆறும்.
===========================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !
---------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]
{30-04-2021}
---------------------------------------------------------------------------
![]() |
அரிவாள்மனைப் பூண்டு |