இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

கிணற்றடிப்பூண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிணற்றடிப்பூண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 18 மே, 2021

கிணற்றடிப் பூண்டு

 

                  மூலிகையின்பெயர......................கிணற்றடிப்பூண்டு

                  மாற்றுப் பெயர்கள்..........................கிணற்றுப்பாசான்

                  ..........................மூக்குத்திப்பூண்டு,     காயப் பச்சிலை

                  ...................................................வெட்டுக்காயப் பச்சிலை 

                   .................................................................செருப்படித் தழை

                  தாவரவியல்பெயர் .....................TRIDAX PROCUMBENS.

                  தாவரவியல்குடும்பம் ..................................COMPOSITAE.

                  ஆங்கிலப்பெயர்கள்....COAT BUTTONS, TRIDAX DAISY.

         

 ====================================================

 

01.     கிணற்றடிப்பூண்டு எல்லாவித வளமான மண்ணிலும் வளரும் ஒரு சிறு செடி. பற்களுள்ள சற்று நீண்ட தடிப்பான சொரசொரப்பான பச்சை இலைகளையும்,  வெள்ளை கலந்த மஞ்சள் நிறப் பூக்களையும் உடைய சிறு செடி . ஈரமான    இடங்களில் தானே வளரும் தன்மைடையது . இலையின் நீளம் 3 - 6 செ.மீ. தண்டு குறுக்களவு 1-1/2 - 3 செ.மீ.

 

02.     தண்டின் நீளம் 5 முதல் 10 செ.மீ இருக்கும். பூவின் விட்டம் சுமார் 1-1/2 முதல் செ.மீ இருக்கும். ஒவ்வொரு பூவிலும் 5 இதழ்கள் இருக்கும். பூவின் நடுவில் மஞ்சளாக இருக்கும்.

 

03.     இச்செடியில் தன் மகரந்தச் சேர்க்கையால் விதைகள் உண்டாகும். ஒரு செடியில் 1500 விதைகள் இருக்கும் அவை காற்றில் பரவி ஒட்டிக் கொள்ளும்.

 

04.     இது சாலை யோரங்கள், தரிசு நிலங்கள், தோட்டங்கள், புல்வெளிகள் எங்கும்  பரவி வளரும்..லேசான பஞ்சுபோன்ற விதைகள் மூலம் இனவிருத்தி நடைபெறுகிறது.

 

05.     கிணற்றடிப் பூண்டின் மருந்தாகும் பாகங்கள் :- கிணற்றடிப் பூண்டின் .இலைகள், செடி முழுதும்.

 

06.     கிணற்றடிப்பூண்டின் மருத்துவப்பயன்கள்  இது புண்ணாற்றும்; குருதியடக்கி, கபநிவாரணி. மூச்சுக் குழாய்ச்சிரை,  மூக்கடைப்பு,  தடுமல்,  நீர்கோப்பு, வயிற்றுப் போக்கு,  பேதி முதலியவை குணமாகும்.

 

07.     கிணற்றடிப் பூண்டின் இலையை நீர்விடாது அரைத்து வெட்டுக்காயம், சிராய்ப்பு ஆகியவிற்றில் பற்றிட்டால் சீழ் பிடிக்காமல் விரைந்து ஆறும்.

 

08.     கிணற்றுப்பூண்டின் இலைச்சாறும்,   குப்பைமேனி இலைச்சாறும் மருத்துவரின் லோசனைப்படி கலந்து குடித்தால் நஞ்சு முறிவு ஏற்படும் .மேலும் வயிற்றுக் கோளாறுகள் தீரும்.


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

 ===================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )04]

{18-05-2021}

===================================================


கிணற்றடிப் பூண்டு

கிணற்றடிப் பூண்டு

கிணற்றடிப் பூண்டு

கிணற்றடிப் பூண்டு