இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

நித்யகல்யாணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நித்யகல்யாணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 மே, 2021

நித்யகல்யாணி

 

        மூலிகைப் பெயர்....................................நித்யகல்யாணி

        மாற்றுப்பெயர்கள்.....................பட்டிப்பூ, கல்லறைப்பூ,

        ...............................................................................சுடுகாட்டுப்பூ

        தாவரவியல் பெயர்.................CATHARANTHES ROSEUS

        ஆங்கிலப் பெயர்...................................................Periwinkle

        சுவை...............................................................................கைப்பு

        ன்மை........................................................................வெப்பம்

  

===================================================

 

01.  நித்திய கல்யாணியானது மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும், ஐந்து இதழ்களையும், வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிற மலர்களையும் உடைய குறுஞ்செடி..

 

02.  நித்திய கல்யாணியின்  வேர், பூ ஆகியவை மருத்துவப் பயன்கள் உடையவை ஆகும்.

 

03.  உடலில் வெள்ளை அணுக்களின் அதிகரிப்பில் ஏற்படும் இரத்தப் புற்று நோயை எதிர்க்கும் மருத்துவ குணம் நித்திய கல்யாணிக்கு உள்ளதாக மருத்துவ ஆய்வு கூறுகிறது.

 

04.  நாடி நடையைச் சமப்படுத்தவும், சிறுநீர்ச் சர்க்கரையைக் குறைக்கவும் நித்திய கல்யாணியின்  வேர் பயன்படுகிறது.

 

05.  நித்திய கல்யாணிப்  பூ ஐந்து அல்லது ஆறு எடுத்து  அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி, கால் லிட்டராக்கி ஒரு நாளைக்கு நான்கு வேளை கொடுக்க , (அதி மூத்திரம்) அடிக்கடி சிறுநீர் போதல், (அதி தாகம்) அடிக்கடி தாகம் எடுத்தல், உடல் பலவீனம், மிகு பசி (எப்போதும் பசி உணர்வு), பசியின்மை ஆகியவை  தீரும்.

 

06.  நிழலில் உலர்த்திய நித்திய கல்யாணி வேரை, நன்கு உலர்ந்த பின் இடித்து,  பொடித்து, வெள்ளைத் துணியிலிட்டுச் சலித்து எடுத்த சூரணம் ஒரு சிட்டிகையை வெந்நீரில் தினமும்  2 அல்லது 3 முறை கொடுத்து வந்தால், சிறு நீரில் சர்க்கரையின் அளவு குறையும்.. சர்க்கரை நோய் கட்டுப்படும்.

 

07.  நித்திய கல்யாணியில்  உள்ள 100 ஆல்கலாய்டுகளும் ஏறக்குறைய மருந்துகள் தான். அவற்றில் வின்க்ரிஸ்டின், வின்பிளாஸ்டின் ஆகியவை புற்று நோய்க்கு மருந்தாகும்.

 

08.  நித்திய கல்யாணி மூலிகை  இரத்த அழுத்தம், மனரீதியான நோய்களைக் குணப்படுத்தும்.

 

09.  நித்திய கல்யாணி மூலிகையால் மாதவிடாயின் போது ஏற்படும் நோய்கள் குணமடையும்.

 

10.  அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பில் நித்திய கல்யாணி பெருமளவில் பயன்படுத்தப் படுகிறது.

 

11.  நித்திய கல்யாணியானது குறைந்த இரத்த அழுத்தம் இரத்த அணுக்கள் குறைபாடு போன்ற நோய்களையும் குணப்படுத்தும். பக்க விளைவை ஏற்படுத்தாத மருந்துத் தாவரமாகும்.

 

12.  நித்திய கல்யாணியின்  மலரைக் கஷாயம் போட்டுக் காலை மாலை 25 மி.லி வீதம் இரண்டொரு நாள் குடிக்க பசியின்மை, அதிக பசி, அதிக தாகம், அதி மூத்திரம் போன்றவை குணமாகும்.

 

13.  நித்தியகல்யாணிப் பூ, சுக்கு, மிளகு, ஏலம், சுண்டை வற்றல், இவற்றில் பூவை உலர்த்தி இடித்து, பொடியாக்கி, மற்ற சரக்குகளையும் பொடியாக்கி, அனைத்தையும் ஒன்றாக கலந்து, அவித்து, தினசரி ஒரு தேக்கரண்டி வீதம் ஒரு வருடம் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் குணமாகும்.  (818)

 

14.  நித்தியகல்யாணி வேர் சூரணம் ஒரு சிட்டிகை வெந்நீரில் 2 அல்லது 3 முறை கொடுத்தால் சிறுநீர்ச் சர்க்கரை குறையும்;  சர்க்கரை நோய் கட்டுப்படும்.  (330) (1323)

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )10]

{24-05-2021}

==================================================


நித்யகல்யாணி


நித்யகல்யாணி

நித்யகல்யாணி


நித்யகல்யாணி

நித்யகல்யாணி

நித்யகல்யாணி

நித்யகல்யாணி