இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

நெல்லி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நெல்லி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 மே, 2021

நெல்லி

     மூலிகைப் பெயர்...............................................நெல்லி

           மாற்றுப் பெயர்கள்.....................ஆமலகம், ஆலகம்

           .................................ஆமரிகம்தாத்தாரிகோரங்கம்,

           .................................................................. நெல்லி முள்ளி

           தாவரவியல் பெயர்..............PHYLLANTHUS EMBLICA

           ஆங்கிலப் பெயர்.......................INDIAN GOOSEBERRY

           சுவை................................புளிப்புதுவர்ப்பு, இனிப்பு

     தன்மை...................................................................குளிர்ச்சி         

 =============================================================

 

01. நெல்லி மிகவும் சிறிய இலைகளையும், இளம் மஞ்சள் நிறக் காய்களையும் உடைய மரம். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என வேறு இரு வகையும் உள்ளன.

 

02. நெல்லியின்  முற்றிய உலர்ந்த  காய்க்குநெல்லி முள்ளிஎன்று பெயர். நாட்டு மருந்துக் கடைகளில்  இது கிடைக்கும்.

 

03. நெல்லி மரத்தின் இலை, காய், வற்றல் ஆகியவை  மருத்துவப் பயன் உடையவை.

 

04. நெல்லிக் காய் வெப்பு அகற்றி, சிறுநீர் பெருக்கி, மலமிளக்கி, குடல் வாயு அகற்றும். நெல்லி வேர் சதை, நரம்புகளைச் சுருங்கச் செய்யும். நெல்லிவற்றல் குளிர்ச்சி உண்டாக்கி, உடல் தாதுக்களைப் பலப் படுத்தும்.

 

05. நெல்லிக் காய்ச் சாறு 15 மி.லி., தேன் 15 மி.லி, எலுமிச்சைச் சாறு 15 மி.லி. காலை மட்டும் சாப்பிட்டு வர மதுமேகம் என்னும் நீரிழிவு நோய் முற்றிலும் தீரும்.

 

06. நெல்லி இலையை நீரில் போடுக் காய்ச்சி பொறுக்கும் சூட்டில் வாய் கொப்பளித்தால், வாய்ப்புண் தீரும்.  (083) (1430)

 

07. நெல்லி முள்ளியை தூள் செய்து தேனில் உரைத்துத் தடவ, நாக்குப் புண் குணமாகும்.

 

08. நெல்லி வேர்ப் பட்டையைப் பொடி செய்து தேனில் கலந்து தடவி வந்தால் நாக்குப் புண் குணமாகும்.  (1431)

 

09. நெல்லி வற்றலும்  (உலர்ந்த காய்) பச்சைப் பயறும் வகைக்கு 20 கிராம் ஒரு லிட்டர்  நீரிலிட்டு 200 மி.லி யாகக் காய்ச்சி வடித்து வேளைக்கு 100 மி.லி யாக, காலை மாலை சாப்பிட்டு வர, தலைசுற்றல், கிறு கிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு தீரும்.

 

10. நெல்லிக் காயை இடித்து, 15 கிராம் எடுத்து அரை லிட்டர் நீரில் இட்டு 100 மி.லி யாகக் காய்ச்சி, 20 மி.லி தேன் கலந்து வேளைக்கு 40 மி.லி வீதம் 4 நாட்கள் சாப்பிட்டால் மிகு பித்தம் தணியும்.

 

11. நெல்லிக் காயைப் பகலில் உண்டு வந்தால் நெறி, ஐய நோய் (சிலேத்தும நோய்) பீநிசம், வாய்நீர்ச் சுரப்பு, வாந்தி, மயக்கம், தலைச் சுழலல், மலச்சிக்கல், பிரமேகம் ஆகியவை போகும். அழகுண்டாகும். அதன் புளிப்பால், துவர்ப்பால் ஐயமும் (கபநோய்) நீங்கும்.

 

நெல்லி முள்ளியின் குணம்

 

12. நாவுக்குச் சுவை தருகின்ற நெல்லி முள்ளியால், உட்சூடு, எலும்புருக்கி நோய், இரத்தக் கொதிப்பு, பெரும்பாடு, வெறி நோய், நீர் சுருக்கு, வாந்தி, வெள்ளை, ஆண்குறிக் கொப்பளம் ஆகிய இவைகள் நீங்கும். இதை அரைத்து தலை முழுகக் கண் குளிரும்

 

13. நெல்லி இலைக் கொழுந்தை அரைத்து மோரில் கலந்து சீதக் கழிச்சலுக்குக் கொடுக்கலாம். நெல்லிகாயைத் துவையல் செய்து சாப்பிட சுவையின்மை, வாந்தி இவைகளைப் போக்கும்

 

14. நெல்லிகாய்த் தைலம் கடைகளில் கிடைக்கும். இதை தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்பார்வை தெளிவடையும். பொடுகு கட்டுப் படும். முடி உதிர்வது குறையும்.

 

15. நெல்லிக்காயை வற்றலாக்கிச் சாப்பிட்டாலும், அதில் உள்ள உயிர்ச்சத்துசி குறைவதில்லை.

 

16. நெல்லிக் கனியை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பலமும், நோய் எதிர்ப்புச் சக்தியும் பெருகும். (736)

 

17. நெல்லி வற்றல், நெல்லிக் காய், நெல்லிக் காய் ஊறுகாய் சாப்பிட்டு வந்தால் இளநரை மறையும்.  (919)

 

18. நெல்லி வற்றல், பச்சைப் பயறு கசாயம் காலை மாலை சாப்பிட்டு வந்தால் தலை சுற்றல், இரத்தக் கொதிப்பு தீரும்.  (1432)

 

19. நெல்லிக் காயைச் சாறு பிழிந்து ஒரு தேக்கரண்டி வீதம் காலை மாலை இருவேளைகள் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் கண் சூடு தணியும்.  (010)

 

20. நெல்லிக் காய் சாறில், அதிமதுரத் தூள், அமுக்கராக் கிழங்குத் தூள் சம அளவு கலந்து கால் தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் குணமாகும்.  (022)

 

21. நெல்லிக் காயை ஊசியினால் குத்தினால் சிறு துளி நீர் வரும். இந்நீரை கண்ணில் விட்டு வந்தால் கண் நோய் குணமாகும்.  (023)

 

22. நெல்லிகாய்ப் பொடி, கடுக்காய்ப் பொடி  இரண்டையும் கலந்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு, சளி குணமாகும்.  (110)

 

23. நெல்லிகாய்ச் சாறில் சிறிது மிளகுத்தூள் சேர்த்து, தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு தீரும்.  (154)

 

24. நெல்லிகாய் இலேகியம் ஒரு சிறு உருண்டை காலை, மாலை சாப்பிட்டு வந்தால் எலும்புக் காய்ச்சல் தணியும்.  (195)

 

25. நெல்லிக் காயைப் பற்களினால் நன்கு மென்று தின்று வந்தால், பற்கள் உறுதி பெறும்.  (247)

 

26. நெல்லிக் காய்ச் சாறு ஒரு அவுன்ஸ் (30 மி.லி ) குடித்தால் எப்படிப்பட்ட தலை சுற்றல், கிறு கிறுப்பும் குணமாகும்.  (277) (1943)

 

27. பயணம் செல்கையில் சிலருக்கு வாந்தி வரலாம். இவர்கள் குறைந்த்து 41 நாட்களுக்கு தினசரி ஒரு நெல்லிக் காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இப்படி பயண வாந்தி வருதல் நிற்கும்.  (285) (1118)

 

28. நெல்லிகாயும், நீர்மோரும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் தாகத்திற்கு நல்ல தீர்வாக அமையும்.  (340)

 

29. நெல்லிகாய் காய்ந்த நிலையில் (நெல்லி முள்ளி) உள்ளதை எடுத்து இளவறுப்பாக வறுத்து பொடி செய்து, முட்டையின் வெள்ளைக் கருவைச்  சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு தீரும்.  (697)

 

30. நெல்லிக் காய் இலேகியத்தை காலை மாலை சிறிதளவு எடுத்து சுவைத்து, அத்துடன் ஒரு தம்ளர் பாலும் சாப்பிட்டால் ஏப்பம், வயிற்றுப் பொருமல் ஆகியவை தீரும்.  (729)

 

31. நெல்லி முள்ளியை அரைத்து நன்கு பொடியாக்கி, தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி, தலைக்குக் தேய்த்து வந்தால், முடி நன்றாக வளரும்.  (910)

 

32. நெல்லிகாய்த் தூள் அரைத் தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடம்பில் சதை போடும்எடை கூடும்.  (1053)

 

33. நெல்லிகாயை இடித்து சாறு பிழிந்து தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் தீரும்.  (1135) (1302)

 

34. நெல்லிக் காயினை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் இராது.  (1311)

 

35. நெல்லிகாய் சாற்றில் மஞ்சள் பொடியைத் தூவி, காய்ச்சி காலை மாலை அருந்தி வந்தால் மதுமேகம் (நீரிழிவுகுணமாகும்.  (1489)

 

36. நெல்லி முள்ளி, கடுக்காய், தான்றிக் காய் மூன்றையும் சேர்த்து குடிநீரில் போட்டு ஊறவைத்து, அந்த நீரைக் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால், வாய் நாற்றம் இருக்காது.  (251)

 

37. நெல்லி முள்ளி, வேப்பிலை இரண்டையும் மை போல அரைத்து வெண்ணெயுடன் கலந்து தடவி வந்தால் அக்கிப் புண்கள் குணமாகும்.  (1008)

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

 

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )11]

25-05-2021} 

==========================================================


நெல்லி


நெல்லி

நெல்லி


நெல்லி