இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

கானவாழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கானவாழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 18 மே, 2021

கானவாழை

 

                மூலிகைப் பெயர்...................................கானவாழை

                மாற்றுப் பெயர்கள்.............................கானாவாழை

                .................................................................கானாம்வாழை

                தாவரவியல் பெயர்.......CAMMELINA BENGALENSIS

                சுவை...................................................................இனிப்பு

                தன்மை.............................................................குளிர்ச்சி

 

===================================================


1)    முட்டை ஈட்டி வடிவ இலைகளை உடைய, அடிப்புறம் தரையோடு படர்ந்துள்ள சிறு செடி. மலர்கள் நீல நிறமானவை. சிறியவை.

 

2)    செடி முழுமையும் மருத்துவப் பயன் உடையது. கீரையாகப் பருப்புக் கலந்து கூட்டுக் கறியாகச் சமைத்துண்ணலாம்.

 

3)    கானவாழை சமூலதை (வேருடன் கூடிய முழுச் செடி) குடிநீராக்கிக் குடிக்க எளிய சுரம் போகும்.

 

4)    கானவாழை சமூலத்துடன் ( வேர் முதல் பூ வரையுள்ள முழுச்செடி) மிளகு, சீரகம் சேர்த்து, குடிநீராக்கிக் கொடுக்கத் தாகம் மிகுதியாக உள்ள சுரத்தில் தாகமும் சுரமும் நீங்கும்.(192) (1683)

 

5)    கானவாழை சமூலத்துடன் அருகம்புல் சமனாய் சேர்த்து மைய அரைத்துக் கொட்டைப் பாக்களவு காலை மாலை பாலில் கொடுக்க இரத்தபேதி நிற்கும்.(092)

 

6)    கானவாழை சமூலம், அசோகுப் பட்டை, அருகம்புல் சமனாக எடுத்து அரைத்துக் காலை மாலை நெல்லிக்காயளவு கொடுத்துவரப் பெரும்பாடு தீரும்.

 

7)    கானவாழை சமூலம், தூதுவேளைப் பூ, முருங்கைப் பூ ஒரு குவளை நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சிப் பாலும் கற்கண்டும் கலந்து ஒரு மண்டலம் ( 48 நாள் ) சாப்பிட்டு வரத் தாது பலப்படும்.

 

8)    கானவாழை இலையுடன் சம அளவு கீழாநெல்லி மையாய் அரைத்துத் தயிரில் நெல்லிக்காயளவு காலை, மதியம், மாலை கொடுக்க வெள்ளைப் போக்கு தீரும்

 

9)    கானவாழை இலையை அரைத்துக் கட்டப் படுக்கைப்புண், மார்புக் காம்பைச் சுற்றி வரும் புண்கள் தீரும்.

 

10)   கானவாழை இலையைக் கசக்கி முகப் பருவிற்கு வைக்க விரைவில் குணமடையும்.

 

11)   கானவாழையைச் சமைத்து உண்டால் காமம் பெருகும். அரைத்துக் கட்டினால் மூலத்தில் உண்டாகும் குழிப் புண்கள் மாறும்.


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !


==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )04]

{18-05-2021}

===================================================

கானவாழை

கானவாழை

கானவாழை