இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

கருஞ்சீரகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருஞ்சீரகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

கருஞ்சீரகம்

 

                  மூலிகைப் பெயர்................................கருஞ்சீரகம்

                  மாற்றுப் பெயர்...........................................................

                  தாவரவியல் பெயர்....................................................

                  ஆங்கிலப் பெயர்............................NIGRLIA SEEDS

                  ...............................................................SMALL FENNEL

 

      ===================================================

   

01.  கருஞ்சீரகம், சதகுப்பை, மரமஞ்சள் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து அரைத்து வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் கருப்பை பலப்படும். உதிரச் சிக்கல் தீரும். (219)

 

02.  கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்துத் தடவி வந்தால் ஆண்குறி வீக்கம் குணமாகும்.(497)

 

03.  கருஞ்சீரகம், சதகுப்பை, மரமஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து பனைவெல்லம் கலந்து சோம்பு நீருடன் பருகி வந்தால் உதிரச் சிக்கல் நீங்கி கருப்பை பலப்படும்,(607)

 

04.  கருஞ்சீரகம், அன்னாசிப் பழம் வெல்லம் கலந்த கலவை  கருத் தடைக்கு உதவும்.(598)

 

05.  கருஞ்சீரகத்தை தும்மட்டிக்காய் சாறு விட்டு அரைத்து விலாவில் பூசினால் குடல் புழுக்கள் வெளியேறி விடும்.(675)

 

06.  கருஞ்சீரகம், சீரகம் இரண்டையும் பொடி செய்து கறிவேப்பிலை, வெங்காயம், வெள்ளைப் பூண்டு, கிராம்பு சேர்த்து தயிருடன் கலந்து பருகி வந்தால் வயிற்று உப்பிசம் தீரும்.(700)

 

07.  கருஞ்சீரக எண்ணெயை வெற்றிலையில் தடவி மென்று தின்று வந்தால் ஆண்மை பெருகும்.(515)

 

08.  கருஞ்சீரக எண்ணெயை ஆண்குறியில் தடவி வந்தால், ஆண்குறி பருமனாகும்.(1887)

===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]

{30-04-2021} 

===================================================

கருஞ்சீரகம் செடி

கருஞ்சீரகம் பூ

கருஞ்சீரகம் செடி

கருஞ்சீரகம் விதை