இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

கிரந்திநாயகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிரந்திநாயகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 18 மே, 2021

கிரந்திநாயகம்

 

         மூலிகைப் பெயர்.........................கிரந்திநாயகம்

         மாற்றுப் பெயர்கள்................... சிலந்திநாயகம்

         தாவரவியல் பெயர்.................RUELLIA PATULA /

          ..................................................... RUELLIATUBEROSA

         சுவை................................................................கைப்பு

         தன்மை.........................................................வெப்பம்

   ========================================================

  

1)     வெளிர் நிறமான முட்டை வடிவ வெகுட்டல் மணமுள்ள இலைகளையும், வெண்ணிறப் பூக்களையும் உடைய மிகச் சிறு செடி (RUELLIA PATULA).

 

2)     தோட்டம். நந்தவனம், வேலி ஓரம் போன்ற இடங்களில் பச்சைப் பசேலென்ற இலைகளுடன் வளரும் சிறு செடிவகை, இதன் இலை சுடுகாட்டுப்பூ இலைபோல் இருக்கும். ஊதா நிறமான சிறிய பூக்களை புஷ்பித்து சுமார் 3 செ.மீ. நீளமுள்ள காய்களைக் காய்க்கும் காய் முற்றிப் பழுத்தபின் அது உலர்ந்து தானே வெடிக்கும்.(RUELLIA TUBEROSA).

 

3)     இப்பூண்டினால் கண்ணோய், கழலை, உட்புண், கபநோய்கள் ஆகிய இவை போம்.

 

4)     உடலில் தோன்றும் கட்டிகளைக் குணப்படுத்துவதற்கென்றே தனிப்பட்ட சக்தி பெற்ற மூலிகையாக இது இருந்துவருகிறது. உடலில் எங்காவது கட்டி தோன்றி இருந்தால் இந்த சிலந்தி நாயகம் இலையைக் கொண்டு சாறு எடுத்து 200 மி.லி. காய்ச்சிய பசும்பாலில் 1 தேக்கரண்டி அளவு சாற்றைக் கலந்து கொடுத்து வந்தால் இரத்தத்திலுள்ள கட்டிகளை உற்பத்தி செய்யும் நுண்ணிய கிருமிகளை அழித்து கட்டிகளை ஆற்றிவிடும். அதோடு இந்தச் சாற்றைக் கட்டியின் மேல் கனமாகப் பூசிவர  வேண்டும். மருந்தை தினசரி காலை மாலை கட்டி குணமாகும் வரை கொடுத்துவர வேண்டும்.

 

5)     சிலந்தி நாயகத்தின் இலைகளைக் கொண்டு வந்து நைத்து  சாறு எடுத்து 200 மி.லி காய்ச்சிய பசுவின் பாலில் 2 தேக்கரண்டி அளவு விட்டுக் கலந்து காலை மாலையாக தொடர்ந்து 40 நாட்கள் கொடுத்து வந்தால் நீரிழிவு நோய் குணமாகும்.

 

6)     சிலந்தி நாயகம் என்ற முழுச்செடியின் சாறு 100 மி.லி. குடித்து அதன் திப்பியை கடிவாயில் வைத்துக் கட்ட விஷம் நீங்கும்.

 

7)     கிரந்தி நாயகம் இலையை அரைத்து நகச்சுற்றுக்கு கனமாகப் பற்றுப்போட 3 நாட்களில் குணமாகும்.(320)

 

8)     சிலந்தி நாயகம் இலைச்சாறு  ஒரு .தேக்கரண்டி 25 மி.லி. பாலும் கலந்து 2 வேளை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நீரிழிவு நோய்க் கட்டி குணமாகும்.

 

9)     சிலந்தி நாயகம் இலைகளே மருத்துவப் பயன்கள் உடையவை. இலையை அரைத்து நகச்சுற்று, புண், சிரங்கு ஆகியவற்றுக்குப் பூச குணமாகும்.

 

10)  சிலந்திநாயகம் இலைகள் ஐந்தாறு எடுத்து மென்று தின்ன, தேள், பாம்பு ஆகியவற்றின் நஞ்சு நீங்கும். கடிவாயில் இலையை அரைத்துப் பூசலாம்.

 

11)  சிலந்திநாயகம் இலையுடன் சமனெடை நாட்டுக் கல்நார் சேர்த்து அரைத்து அடை தட்டிக் காய வைத்து வரட்டியினிடையே வைத்துப் புடமிட்டு எடுத்துப்  பொடித்துப் பற்பொடியாக்கி பல் தேய்த்து வர, பல் வலி பல் ஆட்டம், பல் அரணை, பல் சொத்தை, ஈறு வீக்கம், ஈறு புண், இரத்தக் கசிவு ஆகியவை தீரும். (221)

 

12)  சிலந்திநாயகம் இலையை அரைத்து 3 கிராம் எடுத்து, பசு வெண்ணெயுடன் கலந்து, காலை மாலை இரு வேளையாக உட்கொள்ள, பாம்பு நஞ்சு, கண் நோய், கழலை, உட்புண், கபம் ஆகியவை தீரும்.

 

13)  மேற்கண்டவாறு செய்து அக்கிப் புண்ணுக்கும் தடவலாம்.

 

14)  கிரந்திநாயகம் இலைகளை அரைத்து கட்டியின் மீது பற்றுப் போட்டால் அல்லது பூசி வந்தால் கட்டி விரைவில் பழுத்து உடையும்.(449)(813)

 

15)  கிரந்திநாயகம் இலைகளை மென்று தின்றால் தேள் கடி, பாம்பு கடி விஷம் முறியும். கடி வாயிலும் கட்ட வேண்டும்.(888)

 

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

========================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை முகநூல்.

[தி.பி,2052,விடை(வைகாசி )04]

{18-05-2021}

 

========================================================



கிரந்திநாயகம்

கிரந்திநாயகம்



கிரந்திநாயகம்



கிரந்திநாயகம்