இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

மாசிக்காய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாசிக்காய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 மே, 2021

மாசிக்காய்

          மூலிகைப் பெயர்................................................மாசிக்காய்

          மாற்றுப் பெயர்கள்.................................................மாயபலா

          தாவரவியல் பெயர்.........................QUERCUS INFECTORIA

          ஆங்கிலப் பெயர்...........................GALL NUT, MAGIC NUTS

 

===================================================

 

01.   இது மற்ற மரங்களின் காயைப் போன்று பூவிலிருந்து பிஞ்சு பிடிக்காது. இம்மரத்தின் கிளைகளை ஒருவித பூச்சிகள் துளையிடும். அப்போது கிளையிலிருந்து பால் வடிந்து, அது உறைந்து திரண்டு கெட்டிப்படும். இதுவே மாசிக்காய். (Asan)

 

02.   சிறிதாய் கோலி உருண்டை வாக்கில், மேற்புறத்தே முள் போன்ற ஆரங்களுடன் இருக்கும். (Asan)

 

03.   மாசிக்காய் துவர்ப்புச் சுவை உடையது. இதில் வைட்டமின்”, “சி”, இரும்புச் சத்து, கால்சியம் சத்து, நார்ச்சத்து அகியவை உள்ளன. (Asan)

 

04.   மாசிக்கயைப் பொடியாக்கி சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி சரியாகும். (Asan)

 

05.   மாசிக்காயைப் பொடித்து, வெந்நீரில் போட்டு, பத்து நிமிடம் கழித்து வடிகட்டி, அதில் வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் ஆறும். (Asan)

 

06.   மாசிக்காயைத் தண்ணீர் விட்டு அரைத்துத் தடவினால், தீப்புண்கள் விரைந்து குணமாகும். (Asan)

 

07.   மாசிக்கயைப் பொடி செய்து வெண்ணெய் அல்லது நெய் கலந்து தொடர்ந்து உண்டு வந்தால், குடல் புண் இம்சை தணியும். (Asan)

 

08.   மாசிக்காயைப் பால் விட்டு உரசி அரைகிராம் வீதம் எடுத்து காலை மாலை என இரு வேளை சாப்பிட்டு வந்தால் படபடப்புக் குறையும். (Asan)

 

09.   மாசிக்காயைச் சிறிதளவு நீர் சேர்த்து நன்றாக அரைத்துப் பூசினால் பித்த வெடிப்பு மறையும். (Asan)

 

10.   மாசிக்காய், கடுக்காய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், தேங்காயெண்ணெய், இவற்றைச் சம அளவாகக் கலந்து தடவினாலும் பித்த வெடிப்பு மறையும். (Asan)

 

11.   மாசிக்காயைத் தூளாக்கி நீரில் காய்ச்சி வாய் கொப்பளித்தால் ஈறுகள் பலமடையும். (Asan)

 

12.   மாசிகாய்ப் பொடி ஒரு தேக்கரண்டி, மஞ்சள் பொடி அரைத் தேக்கரண்டி எடுத்து நீரில் கொதிக்க வைத்து வாயை நன்றாகக் கொப்பளித்தால் பல் சொத்தை, தொல்லை நீங்கும். பல் வலி, ஈறுகளில் ஏற்பட்ட வீக்கம் சரியாகும். (Asan)

 

13.   மாசிக்காய் மூன்று, நெல்லிக்காய் ஆறு, எடுத்துக் காயவைத்துப் பொடித்து காலை மாலை இருவேளை ஒரு தேக்கரண்டி வீதம் வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால், வயிற்றுப் போக்கு குறையும். (Asan)

 

14.   மாசிக்காய்ப் பொடி சிறிதளவு எடுத்து சாதிக்காய்ப் பொடி, எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்றாகக் கலந்து இரவு நேரத்தில் முகத்தில் பூசி, காலையில் கழுவவும். முகப்பரு மறையும். (Asan)

 

15.   மாசிக்காய்ப் பொடி ஒரு தேக்கரண்டி எடுத்து சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து ஒரு தம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைக்கவும். பின்னர் அதை வடிகட்டி, பால் சேர்த்துக் குடித்து வரலாம். வாய்ப்புண், தொண்டைப்புண், இரத்த மூலம், உதிரப் போக்கு, வெள்ளைபடுதல் ஆகியவை கட்டுப்படும். (Asan)

 

16.   ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய் விட்டு, கைப்பிடி அளவு அகத்திக் கீரை போட்டு வதக்கி, சிறிது மாசிக்காய்ப் பொடி சேர்த்து, வடிகட்டி, அந்த எண்ணெயை மேல் பூச்சாக மூலத்திற்குத் தடவுங்கள். மூலம் கட்டுப்படும். (Asan)

 

17.   மாசிக்காயைக் கசாயமாக்கி 30 மி.லி வீதம் அருந்தும் பெண்களுக்கு மேக நோய் கட்டுப்படும். (Asan)

 

18.   மாசிக்காய்ப் பொடி, தேன் இரண்டையும் தலா அரைத் தேக்கரண்டி எடுத்து கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் அதிக உதிரப் போக்கு, தீராத வயிற்று வலி ஆகியவை சீராகும். (Asan)

 

19.   மாசிக்காயைப் பொடி செய்து தினமும் மூன்று வேளை சிறிதளவு உட்கொண்டு வரும் மங்கையருக்கு மாதவிடாய் இரத்தப் போக்கு சீராகும். (Asan)

 

20.   மாசிக்காய், ஆவாரம் பிசின், ஏலக்காய், கடுக்காய்த் தோல், கிராம்பு, சாதிக்காய், வல்லாரை ஆகியவற்றை தனித்தனியாகப் பொடித்து, ஒவ்வொன்றிலும் தலா மூன்று கிராம் எடுத்து கலந்து தினமும் காலை, மாலை வெண்ணெயில் கலந்து உண்டால் உடல் வெப்பம் தணியும். ஆண்களுக்குத் தாது விருத்தியாகும். (Asan)

 

21.   (ஆதாரம்:- நாகர்கோயில் எஸ். மகாலிங்க ஆசான் 21-05-2017 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கட்டுரை.)

 

22.   மாசிக் காய் அரைத்து தாய்ப் பாலில் கலந்து புண் உள்ள இடத்தில் தடவி வந்தால் குழந்தைகளுக்கு  ஏற்படும் வாய்ப் புண் குணமாகும்.  (212)

 

23.   மாசிக் காயைத் தூளாக்கி நீரில் இட்டுக் காய்ச்சி வாய் கொப்பளித்து வந்தால் ஈறுகள் பலமடையும்.  (227) (1798)

 

24.   மாசிக்காய், கடுக்காய், வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை எடுத்து சரி சமமாகக் கலந்து தடவி வந்தால் கை, கால்களில் ஏற்படும் வெடிப்புகள் குணமாகும்.  (446)


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை,

[தி.பி:2052,விடை(வைகாசி)15]

{29-05-2021} 

===================================================


மாசிக்காய்


மாசிக்காய்

மாசிக்காய்