இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

ஆமணக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆமணக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

ஆமணக்கு.

 

                      மூலிகைப் பெயர்............................... ஆமணக்கு

                      மாற்றுப் பெயர்கள்............ஏரண்டம், சித்திரம்

                      .........................தலரூபம், வயிரழித்தான், முத்து

                      தாவரவியல் பெயர்...................Ricinus communis

                      ஆங்கிலப் பெயர்...........................CASTOR PLANT

        

     ====================================================

 

 

01.  ஆமணக்குத் துளிர்களை எடுத்து சிறிது விளக்கெண்ணெய் விட்டு வதக்கி தொப்புளில் வைத்துக் கட்டினால் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.(676)

 

02.  சிற்றாமணக்கு வேர் புங்க வேர் இரண்டையும் சம அளவு எடுத்து காய்ச்சி வடிகட்டி ஒரு தேக்கரண்டி உள்ளுக்குக் கொடுத்து வந்தால் கரப்பான் தீரும்.(825)

 

03.  விளக்கெண்ணெயும் சுண்ணாம்பும் கலந்து அடுப்பில் சூடு செய்து, பொறுக்கும் சூட்டில் தொண்டையில் தடவினால், தொண்டை வலி குணமாகும்.  (076) (1931)

 

04.  விளக்கெண்ணெயுடன் பால் ஏடு சேர்த்துக் குழைத்து வெண்ணெய் போல் ஆக்கி நகத்தைச் சுற்றிலும் போட்டு வந்தால்  நகச் சுற்று நீங்கும்.  (312)

 

05.  ஆமணக்கு எண்ணெயுடன் கஞ்சாங் கோரை இலைப் பொடியைச் சேர்த்துக் கலந்து  இதை சுடு பாலில் இட்டு ஆற்றி அருந்தி வந்தால் ஆண்மை பெருகும். (500)

 

06.  ஆமணக்கு எண்ணெய், மலை வேம்பு எண்ணெய் இரண்டையும் கலந்து மாதவிடாய் காலத்தில் மூன்று நாள் உட்கொண்டால் மாதவிடாய் வலி இல்லாமல் இருக்கும்.  (599) (1953)


===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க ! 

  ===================================================

 ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]

{30-04-2021}

 

          ==================================================



ஆமணக்குச் செடி

ஆமணக்குக் காய்



ஆமணக்கு விதை




ஆமணக்கு