இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

நத்தைச்சூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நத்தைச்சூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 மே, 2021

நத்தைச்சூரி

 

         மூலிகைப் பெயர்.........................................நத்தைச் சூரி

         மாற்றுப் பெயர்கள்..................குழி மீட்டான், கடுகம்,

         ........................................................தொலியாகரம்பை, சூரி

         ...................................................நத்தைச் சுண்டி, தாருணி

         தாவரவியல் பெயர்...................SPERMACOSE HISPIDAH

         ஆங்கிலப் பெயர்.......................SHAGGY  BUTTON WEED

         சுவை........................................................இனிப்பு, துவர்ப்பு

         தன்மை.....................................................................குளிர்ச்சி

 

 

==================================================

 

01.  நத்தைச் சூரி என்பது நான்கு பட்டையான தண்டுகளையும் எதிரடுக்கில் அமைந்த காம்பற்ற இலைகளையும்  மிகச் சிறிய மங்கலான பூக்களையும்  உடைய சிறு செடி.

 

02.  நத்தைச் சூரியின் வேர், விதை ஆகியவை மருத்துவப் பயன் உடையவை.

 

03.  நத்தைச் சூரி வேர் நோய் நீக்கி உடல் தேற்றவும், தாது பலம் அளிக்கவும் பயன்படும். விதை தாதுக்களின் எரிச்சலைத் தவிர்க்கவும் தாது வெப்புத் தணிக்கவும் மருந்தாகும்.

 

04.  நத்தைச் சூரி வேர் பத்து கிராம் பசும்பாலில் அரைத்துக் கலக்கி வடிக்கட்டிக் காலை மாலை கொடுத்து வரத் தாய்ப் பால் பெருகும்.  (1380)

 

05.  நத்தைச் சூரி வேர்  இருபது கிராம் சிதைத்து 200 மி.லி கொதி நீரில் போட்டு, 2 மணி நேரம் ஊறிய பின்  வடித்து 50 மி.லி. யாக நாள் ஒன்றுக்கு 3 வேளைக் குடித்து வர  உடம்பைப் பற்றிய எவ்வித நோயும் படிப் படியாகக் குணமடையும்.  (1379)

 

06.  நத்தை சூரி விதையை வறுத்துப் பொடித்து நீரில் இட்டுக் காய்ச்சி, வடித்து, பால், கற்கண்டு  கலந்து காலை மாலை  பருகி வர உடல் வெப்பு தணியும். கல்லடைப்பு, சதையடைப்பு, வெள்ளை படுதல் ஆகியவை தீரும்.

 

07.  நத்தைச் சூரி விதையைப் பொடித்து, சமனளவு கற்கண்டுப் பொடி கலந்து ஐந்து கிராம் அளவாகக் காலை, மதியம், மாலை சாப்பிட்டு வர  வெப்புக் கழிச்சல் (உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றோட்டம்) சீதக் கழிச்சல்  ஆகியவை தீரும்.

 

08.  நத்தைச் சூரி வேரை அரைத்து எலுமிச்சை அளவு 30 மி.லி நல்லெண்ணெயில் கலந்து காலையில் மட்டும் ஐந்து நாள் கொடுத்து வர அரையாப்புக் கட்டி கரையும். (1554)

 

09.  நத்தைச் சூரி செடியை அரைத்துப் பற்றுப் போட்டால் உடலில் ஏற்படும் கல் போன்ற வீக்கம் கரையும்.  (1535)

 

10.  நத்தைச் சூரியை குழி மீட்டான் மூலிகை என்று  அழைக்கப்  படுகிறது. அதாவது பிணமாகிக் குழியில் விழுந்தவனையும் மீட்டெடுக்கும் என்பதால் இந்தப் பெயர்.

 

11.  நத்தைச் சூரி எண்ணெய் வர்ம பாதிப்புகளில் இருந்து உடலைவிட்டு உயிர் பிரியாமல்  மீட்பதாலும் இதற்கு இந்தப் பெயர்.

 

12.  நத்தைச் சூரி உடலை மிக அதிகமாக இறுக்கும். உடல் இரும்பு போல ஆகும். ஒரு மண்டலம் இச்சா பத்தியத்துடன் இருக்க அதிக பலமுண்டாகும்

 

13.  .நத்தைச் சூரி மூலிகை விந்து விரைவில் வெளியேறாமல் செய்ய உதவும்.

 

14.  நத்தைச் சூரி வேரை வாயில் போட்டு மென்று கொண்டு சாறை நன்றாக மென்று விழுங்கிய பின் கண்ணில் மண்ணைப் போட்டால் கண் உறுத்தாது.கண் அறுகாது . நத்தைச் சூரியினால் கண் பலம் பெற்று விடுவதனால் கண் உறுத்துவதில்லை.

 

15.  நத்தைச் சூரி இலையை வதக்கி அடிபட்ட வீக்கம், காயங்களுக்குக் கட்டி வந்தால் வேதனை குறைந்து குணமாகும்.   (1383)

 

16.  நத்தைச் சூரி இலைச் சாற்றை 15மி.லி எடுத்து காலை மாலை அருந்தி வந்தால் நெஞ்சுச் சளி தீரும்.  (1384)

 

17.  நத்தைச் சூரி இலைகளை அரைத்து கல் போன்ற வீக்கங்களுக்குப் பற்றிட்டு வந்தால், வீக்கம் விரைவில் கரைந்து குணமாகும்.  (1535)

 

18.  நத்தைச் சூரி வேர் 10 கிராம் எடுத்து சுத்தம் செய்து நசுக்கி நீரில் இட்டுக் காய்ச்சி கசாயம் செய்து 3 வேளைகள் அருந்தி வந்தால் உடம்பைப் பற்றிய எவ்வித நோயும் படிப்படியாகக் குணமாகும்.  (1379)

 

19.  நத்தைச் சூரி வேரை எடுத்து சுத்தம் செய்து நசுக்கி, பசும் பாலில் போட்டுக் காய்ச்சிக் குடித்து வந்தால், தாய்ப் பால் பெருகும்.  (1380)

 

20.  நத்தைச் சூரி வேரை எடுத்து சுத்தம் செய்து அரைத்து எலுமிச்சை அளவு எடுத்து  30 மி.லி. நல்லெண்ணையில் கலந்து 5 நாட்கள் குடித்து வந்தால் அரையாப்புக் கட்டிகள் கரைந்துவிடும்.   (1554)

 

21.  நத்தைச் சூரி விதையை எடுத்து வறுத்து, பொடித்து நீர் விட்டுக் காய்ச்சி, கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் கல்லடைப்பு தீரும்.  (1376)


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

 

==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )09]

{23-05-2021}

=================================================


நத்தைச்சூரி செடி

நத்தைச்சூரி காய்

நத்தைச்சூரி செடி

நத்தைச்சூரி செடி

நத்தைச்சூரி செடி

நத்தைச்சூரி காய்

நத்தைச்சூரி விதை