இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

கொத்துமல்லி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொத்துமல்லி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 மே, 2021

கொத்துமல்லி


                   மூலிகைப் பெயர்..............................கொத்துமல்லி

                   மாற்றுப் பெயர்கள்...................தனியா, உருளரிசி

                தாவரவியல் பெயர்....................Coriandrum Sativum

                ஆங்கிலப் பெயர்...........................................Coriander

 ===================================================

 

01.   கொத்துமல்லி 20 செ.மீ உயரம் வரை வளரும் சிறு செடி வகையாகும். எதிர் அடுக்கில் மூவிலை அமைப்பில் பச்சை நிற இலைகளையும், கொத்தான சிறிய வெண்ணிற மலர்களையும், நீண்ட மென்மையான பச்சை நிறத் தண்டுகளையும் கொண்டவை. (Asan)

 

02.   கொத்துமல்லிக் காய்கள் உருண்டையாக, வரிகளுடன், மர நிறத்தில் காணப்படும். இது கார்ப்புச் சுவை உடையது. (Asan)

 

03.   கொத்துமல்லியின் இலை, பூ, காய், விதை, தண்டு, வேர் ஆகியவை மருத்துவக் குணம் உடையவை. (Asan)

 

04.   கொத்துமல்லி இலையில் வைட்டமின்”, “பி”, “பி-12”, “சி”, இரும்பு, மெக்னீஷியம், பொட்டாசியம், துத்தநாகம், சுண்ணாம்புச் சத்துக்கள் உள்ளன. (Asan)

 

05.   கொத்துமல்லி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் விலகும். .கொத்துமல்லி இலைகளை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, கட்டிகளின் மீது வைத்துக் கட்டினால், கட்டிகள் கரையும். (Asan)

 

06.   கொத்துமல்லிக் கீரை சிறிதளவு எடுத்து கொதிக்க வைத்த நீரில் போட்டு சர்க்கரை சேர்த்து அருந்தலாம். உடல் சூடு நீங்கும். (Asan)

 

07.   கொத்துமல்லி இலை, சீரகம், பனங்கற்கண்டு சேர்த்துக் கசாயம் வைத்து அருந்தினால், சுவையின்மை விலகும். (Asan)

 

08.   கொத்துமல்லி இலை, கற்றாழைச் சோறு, தயிர் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து, அதில் ஒரு தேக்கரண்டி அரிசி மாவு கலந்து, முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவினால் சருமம் பொலிவுடன் காணப்படும். (Asan)

 

09.   கொத்துமல்லிச் சாறுடன் சிறிதளவு தேன் கலந்து பருகினால் பித்தம் தணியும். (Asan)

 

10.   கொத்துமல்லிச் சாறுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து நெற்றியிலும், உச்சியிலும் பற்றுப் போட்டால் தலைவலி நீங்கும். (Asan)

 

11.   அம்மைத் தழும்புகளில் கொத்துமல்லி இலைச் சாறினைத் தடவி வந்தால், காலப் போக்கில் அவை மறைந்து விடும். (Asan)

 

12.   கொத்துமல்லி இலைச் சாறுடன் சிறிது  மஞ்சள் கலந்து முகத்தில் பூசி வந்தால், பருக்கள் மறைந்து முகம் பள பளக்கும். (Asan)

 

13.   கொத்துமல்லி இலைச் சாறுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து தினமும் இரவில் உதட்டிலும், கரும் புள்ளிகளிலும்   தடவி வந்தால், கருமை நிறம் மாறும். (Asan)

 

14.   கொத்துமல்லி இலைச் சாறு, தக்காளிச் சாறு தலா 2 தேக்கரண்டி எடுத்து, சிறிது பன்னீர் விட்டுக் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவ வேண்டும். இதன் மூலம் முகத்தில் ஏற்படும் சிவப்பு நிறத் தடிப்புகள் மறையும். (Asan)

 

15.   கொத்துமல்லி விதையை அரைத்து, சந்தனம் கலந்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி விலகும். பித்தம் குறையும். (Asan)

 

16.   கொத்துமல்லி விதையை அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால், மூக்கடைப்பு நீங்கும். (Asan)

 

17.   கொத்துமல்லி விதை ஒரு கைப்பிடி அளவு எடுத்து  வாயில் போட்டு நன்றாக மென்று தின்றால் உடல் சூடு குறையும். (Asan)

 

18.   கொத்துமல்லி விதை சிறிதளவு, சுக்கு, பனை வெல்லம் சேர்த்து வாரம் ஒரு முறை கசாயம் வைத்து அருந்தினால் செரிமானம் சீராகும். மலச்சிக்கல் ஏற்படாது. (Asan)

 

19.   கொத்துமல்லி விதை 100 கிராம், சந்தனம் 50 கிராம், நெல்லி வற்றல் 50 கிராம் ஆகியவற்றை எடுத்து, இடித்து, தூள் செய்து 200 கிராம் சர்க்கரை கலந்து காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் தலை சுற்றல், நெஞ்செரிச்சல் ஆகியவை குணமாகும். (Asan)

 

20.   கொத்துமல்லி விதையைப் பொடி செய்து காயத்தின் மீது அடிக்கடி தடவி வந்தால், காயம் விரைவில் ஆறும். (Asan)

 

21.   கொத்துமல்லி விதை எண்ணெய் கரப்பான், காளான்படை ஆகிய தோல் நோய்களுக்கு சரியான மருந்தாகும். (Asan)

 

22.   கொத்துமல்லி, உடலில் கொழுப்புச் சத்தைக் குறைத்து, இரத்த நாளங்களில் கொழுப்பு உறைவதைத் தடுக்கிறது. மாரடைப்பிலிருந்து காக்கிறது. (Asan)

 

23.   இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைத் தணித்து, இன்சுலின் சுரப்பைத் தூண்டி, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை கொத்துமல்லிக்கு உண்டு. (Asan)

 

24.   கொத்துமல்லி எண்ணெயைப் பூசினால் சேற்றுப் புண் குணமாகும். (Asan)

 

25.   (ஆதாரம்:- நாகர்கோயில், எஸ்.மகாலிங்க ஆசான், 20-11.2016 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கட்டுரை.)

 

26.   கொத்துமல்லிக் கீரையை அரைத்து சிறு உருண்டை உள்ளுக்குச் சாப்பிட்டால், உடற் சூட்டினால் கண்கள் பொங்கி கண்களில் பீளை தள்ளுதல் குணமாகும்.  (030)

 

27.   கொத்துமல்லிக் கீரையை வாரம் இரு முறையாவது உணவுடன் பயன் படுத்தி வந்தால் நரம்புகள் பலம் பெறும்.  (804)

 

28.   கொத்துமல்லிக் கீரையை தினம்தோறும் உணவுடன் சேர்த்து வந்தால் மூளை, மூக்கு  தொடர்பான அனைத்து நோய்களும் குணமாகும்.  (1203)

 

29.   கொத்துமல்லி விதை, சோம்பு, சுக்கு கருப்பட்டி  ஆகியவை சேர்த்து கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் மார்பு எரிச்சல், சளி ஆகியவை தீரும்.  (169)

 

30.   கொத்துமல்லி விதையை அடிக்கடி உணவில் பயன் படுத்தி  வந்தால் உள் உறுப்புகளில் ஏற்படும் புண் (இரணம்) தீரும்.  (459)

 

31.   கொத்துமல்லி விதையை சிறிது காடியில் (வினிகர்) அரைத்துக் கொடுத்தால் சாராய போதை நீங்கும்.  (887) (1800)


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )05]

{19-05-2021}

===================================================


கொத்துமல்லி

கொத்துமல்லி

கொத்துமல்லி

கொத்துமல்லி

கொத்துமல்லி