இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

சுரைக்காய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுரைக்காய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 21 மே, 2021

சுரைக்காய்

  

        மூலிகைப் பெயர்.........................................சுரைக்காய்

        மாற்றுப் பெயர்.....................................................................

        தாவரவியல் பெயர்.................LAGENARIA SICERARIA

        ஆங்கிலப் பெயர்..............BOTTLE GOURD, CALABASH

  ==================================================

01.   சுரை என்பது கொடி வகையைச் சார்ந்த ஒரு தாவரம்மரம், வீட்டுக் கூரை முதலிய இடங்களில் படர்ந்து வளரும். சுரைக் கொடியின் இலை அகன்று பெரியதாக இருக்கும். வெண்மை நிறப் பூக்களை உடையது.

 

02.   சுரைக்காய் கண்ணாடிப் புட்டி வடிவத்தில் இருக்கும். நன்கு வளர்ந்த காய் 10 கிலோ வரை எடை இருக்கும்.

 

03.   சுரைக் காயை வாரம் இரு முறை உணவுடன் சேர்த்துக் கொண்டு வந்தால் தொப்பை குறையும். (653) (1141) (1307) (1778)

 

04.   சுரைக்காய் சாற்றையும் எலுமிச்சம் பழச் சாற்றையும் கலந்து அருந்தி வந்தால் சிறு நீரக நோய்கள் குணமாகும். (958) (1906)

 

05.   சுரைக் காயின் சதைப் பகுதியை எடுத்து நன்கு பிசைந்து பாதங்களில் கட்டினால் பாத எரிச்சல் குணமாகும். (1016) (1151)

 

06.   சுரைக்காயைப் பச்சடி செய்து சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும். மஞ்சள் காமாலை கட்டுக்குள் வரும்.  (1089) (1902)

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

=================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )07]

{21-05-2021}

==================================================


சுரைக்காய்


சுரைக்காய்


சுரைக்கொடி

சுரைக்காய்