இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

பரங்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரங்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 மே, 2021

பரங்கி

 

         மூலிகைப் பெயர்...................................................பரங்கி

         மாற்றுப் பெயர்கள்.............................மஞ்சள் பூசணி,

         ................................................................சர்க்கரைப் பூசணி

         தாவரவியல் பெயர்...........................................................

         ஆங்கிலப் பெயர்................SQUASH GOURD, PUMPKIN

      

 ==================================================

 

 

01.   பரங்கி என்பது  கொடி வகையைச் சார்ந்தது ஆகும். பரங்கியை பூசணி என்றும் சொல்வதுண்டு.

 

02.   உருண்டையாக பெரிய முட்டை வடிவத்தில் வெண்மை நிறத்தில் காய் காய்க்கும் கொடியை வெள்ளைப் பூசணி, சாம்பல்பூசணி என்று சொல்கின்றனர்.

 

03.   அகன்ற பெரிய இலைகளையும் இலைப் பரப்பில் வெள்ளை நிறத்தில் பட்டையான சில கோடுகளையும். தண்டுப்பகுதியில் சுரசுரப்பான சுணையையும், மலர்க் குவளை போன்ற வடிவத்தில் செம்மஞ்சள் நிறப் பூக்களையும் உடையது பரங்கி.

 

04.   பரங்கியில் வைட்டமின்”, “பி-2”, ”சி”, “”, ஆகியவையும் கால்சியம், மெக்னீஷியம், பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம், நார்ச்சத்து ஆகியவையும் உள்ளன. .(Harish)

 

05.   பரங்கியின் பொதுவான குணங்கள்: கீல்வாதத்தைக் குறைக்கும்,  வீக்கத்தைக் குறைக்கும், உடலில் உள்ள கொழுப்பின் அளவைச் சரியாக்கும், எலும்பிற்கு ஊட்டம் தரும், மன அழுத்தத்தைக் குறைக்கும், வயிற்றுப் புண்ணை ஆற்றும், புரஸ்த கோள வீக்கத்தைச் சரியாக்கும், நல்ல கண் பார்வையைத் தரும், நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கொடுக்கும், இரத்த அழுத்தத்தைச் சீராக்கும், இதயத்தைப் பாதுகாக்கும், உடல் எடையை ஒழுங்கு படுத்தும், தட்டைப் புழுக்களை வெளியேற்றும். .(Harish)

 

06.   பரங்கிக் காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் வெப்பம் தணியும். .(Harish)

 

07.   பரங்கிக் காயின் சதைப் பகுதியைச் சாறாகப் பிழிந்து தினசரி இரண்டு வேளைகள் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறையும். .(Harish)

 

08.   பரங்கிக் காய் சாறுடன் சீரகப் பொடி சேர்த்து அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் சீராகும். .(Harish)

 

09.   பரங்கிக் காய் சாறுடன் காரட் சாறும் சேர்த்து அருந்தி வந்தால் எலும்புகள் பலம் பெறும். கண்களில் ஒளி பெருகும். .(Harish)

 

10.   பரங்கிக் காய் சாறுடன் இஞ்சிச் சாறு ஒரு தேக்கரண்டி சேர்த்து, அருந்தி வந்தால் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும். சளித் தொல்லை குறையும். .(Harish)

 

11.   பரங்கிப் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், தினசரி சில துண்டுகளை உண்டு வந்தால் மலக் கட்டு நீங்கும். .(Harish)

 

12.   பரங்கிப் பழத்தில் எல்-டைப்டோபேன் என்னும் வேதிப் பொருள் இருப்பதால், மன அழுத்தத்தைக் குறைத்து, மன மகிழ்ச்சியைப் பெருக்கும். .(Harish)

 

13.   பரங்கி விதையில் துத்தநாகச் சத்து இருப்பதால், விந்து  உற்பத்திக்கு உதவும். .(Harish)

 

14.   பரங்கி விதையை வறுத்து, பொடித்து, ஒரு தேக்கரண்டி அளவு பொடியுடன்  சர்க்கரை சேர்த்து இரவில் அருந்தி, காலையில் விளக்கெண்ணெய் ஒரு தேக்கரண்டி அளவு குடித்தால், குடலில் உள்ள தட்டைப் புழுக்கள் வெளியேறும். .(Harish)

 

15.   பரங்கி விதை இரண்டு தேக்கரண்டி எடுத்து  200 மி.லி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தினால் சிறு நீரைப் பெருக்கும். மேலும் சின்னச் சின்ன சிறுநீரகக் கற்கள் வெளியேறும். .(Harish)

 

16.   பரங்கி விதைப் பொடி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து,தினமும்  மூன்று வேளைகள் வெந்நீரில் அருந்தி வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.(Harish)

 

17.   (ஆதாரம்: வேலூர், ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ் மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர். வெ. ஹரிஷ் அன்புச் செல்வன் M.D.(s) 30-12-2017 நாளிட்ட தினமலர் நாளிதழின் இணைப்பான பெண்கள் மலரில் எழுதிய கட்டுரை.)

 

18.   பரங்கி விதை, வெள்ளரி விதை, பூனைக்காலி விதை ஆகியவற்றைச் சேர்த்துக் கசாயம் வைத்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்.  (1471)

 

19.   பரங்கி விதையை உலர்த்திப் பொடி செய்து, சீரகம், வெல்லம் சேர்த்து உண்டு வந்தால் இரத்த வாந்தி நிற்கும்.  (1472)

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )11]

25-05-2021}

==================================================


பரங்கிக் காயும் பழமும்

பரங்கி கொடியும் பூவும்


பரங்கிப் பிஞ்சு
பரங்கிப் பூ

பரங்கி கொடி