இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

கொள்ளு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொள்ளு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 மே, 2021

கொள்ளு

  

                  மூலிகைப் பெயர்......................................கொள்ளு

                  மாற்றுப் பெயர்கள்....................முதிரை, காணம்.

                  தாவரவியல் பெயர்..............Macrotyloma Uniflorum

                  ஆங்கிலப் பெயர்......................................Horse Gram

====================================================


01.    கொள்ளு சிறு கொடிவகைச் செடி. பயறு வகையைச் சார்ந்த்து. கொடித் தண்டில் இருந்து எதிரடுக்கில் மூன்று இலைகள் தட்டையாக சற்று வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும். பூக்கள் வெள்ளை நிறத்திலும், அல்லி வட்டத்தின் நடுவில் ரோஜா நிறத்திலும் இருக்கும். காய்கள் 4 செ,மீ நீளத்தில் தட்டையாக இருக்கும். காயினுள் விதைகள் வரிசையாக  அமைந்திருக்கும். இந்த விதைகளே கொள்ளு என்னும் தானியம் ஆகும். (Asan)

 

02.    கொள்ளுச் செடியில் அதன் இலைகள், விதைகள் இரண்டும் மருத்துவக் குணம் உடையவை. கொள்ளில் நாட்டுக் கொள்ளு, காட்டுக் கொள்ளு என இரு வகைகள் உள்ளன. நாட்டுக் கொள் மட்டுமே மருத்துவத்தில் பயன்படுகிறது.(Asan)

 

03.    கொள்ளில் வைட்டமின்”, “பி”, “சி”, ஆகியவையும், இரும்பு, கால்சியம், புரதம், பொட்டாசியம். மாலிப்டினம், மாவு, நார், மினரல்ஸ் ஆகிய சத்துகளும் உள்ளன.(Asan)

 

04.    கொள்ளு வேக வைத்த நீரைக் குடித்தால் காய்ச்சல், சளி, கோழை  ஆகியவை கட்டுப்படும்.(Asan)

 

05.    கொள்ளு வேகவைத்த நீரில் தேவையான அளாவு உப்பு, மிளகுப் பொடி சேர்த்து அருந்தி வந்தால், உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும்.(Asan)

 

06.    கொள்ளு வேக வைத்த நீரை அருந்தினால், பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள் சரியாகும். உள் அழுக்கை வெளியேற்றும்.(Asan)

 

07.    கொள்ளும் அரிசியும் சேர்த்து செய்த கஞ்சி, பசியைத் தூண்டுவதுடன் ஆண்களுக்கு தாதுவைப் பலப்படுத்தும்.(Asan)

 

08.    இரவில் ஒருகைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊறவைத்து, காலையில் எழுந்தவுடன் குடிக்கலாம். வாதம், பித்தம், இரைப்பு, கண் நோய் சரியாகும்.(Asan)

 

09.    இளைத்த உடல் கொள்ளுச் சாற்றால் பருமனாகும்கொள்ளு இலைச் சாறு 10 மி.லி எடுத்து காசுக்கட்டி 2 கிராம்  சேர்த்து தினமும் மூன்று வேளை குடித்தால் கழிச்சல் நீங்கும்.(Asan)

 

10.    கொள்ளு 30 கிராம், முந்திரிப் பருப்பு 5 எண்ணிக்கை எடுத்து அரை லிட்டர் கொதிக்கும் நீரில் போட்டுக் காய்ச்சிக் குடித்து வந்தால் இரத்த பேதி குணமாகும்.(Asan)

 

11.    ஒரு பங்குகொள்ளுக்கு பத்துப் பங்கு நீர் விட்டுக் காய்ச்சி, 600 மி.கிராம் இந்துப்பு சேர்த்துக் கொடுத்தால் இருமல், கல்லடைப்பு போகும்.(Asan)

 

12.    கருங்கொள்ளு, காந்தக்கல், காவிக்கல், புற்றுமண், முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து அரைத்து, வீக்கம், கட்டி, யானைக்கால் நோய்க்குப் பற்றுப் போடலாம்.(Asan)

 

13.    (ஆதாரம்:- நாகர்கோயில், எஸ். மகாலிங்கம் ஆசான், 11-12-2016 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கட்டுரை.)

 

14.    கொள்ளை வேக வைத்து அடிக்கடி உண்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.(Harish)

 

15.    கொள்ளுடன் மிளகு சேர்த்து வேக வைத்து உண்டு வந்தால் இருமல் குணமாகும்.(Harish)

 

16.    கொள்ளுப் பொடி ஒரு தேக்கரண்டி எடுத்து, அதே அளவு சீரகப் பொடி சேர்த்து வெந்நீரில் இட்டுக் கொதிக்க வைத்து அதை வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் உடல் எடை குறையும். (Harish)

 

17.    கொள்ளை நீரில் இட்டுக் கொதிக்க வைத்து அந்த நீரைப் பருகி வந்தால் கழிச்சல் குணமாகும்.(Harish)

 

18.    ஒரு பங்கு கொள்ளுடன் ஐந்து பங்கு நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து அதனுடன் அரை தேக்கரண்டி இந்துப்பு சேர்த்துப் பருகி வந்தால் சிறுநீரகக் கற்கள் கரையும்.(Harish)

 

19.    கொள்ளுக் குடி நீருடன் சுக்குத் தூளும், பெருங்காயமும் சேர்த்துப் பருகி வந்தால் குன்மம் குணமாகும்.(Harish)

 

20.    உணவில் கொள்ளினை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.(Harish)

 

21.    கொள்ளை இரவில் ஊற வைத்து, காலையில் அந்த நீரினைக் கொதிக்க வைத்து மூன்று வேளையும் 60 மி.லி வீதம் அருந்தி வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.(Harish))

 

22.    முளை கட்டிய கொள்ளினைச் சுண்டல் செய்து சாப்பிட்டால் மலச் சிக்கல் தீரும்.(Harish)

 

23.    கொள்ளை வேகவைத்து மசித்து அதனுடன் நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் குணமாகும்.(Harish)

 

24.    இரவில் கொள்ளை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்தக் கொள்ளை அப்படியே சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும்.(Harish)

 

25.    கொள்ளை நீரில் இட்டு இரவில் ஊறவைக்க வேண்டும். காலையில் அதை எடுத்து மசித்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். தொடர்ந்து இப்படிச் செய்து வந்தால் முகம் பொலிவு பெறும். (Harish)

 

26.    (தொ.எண். 14 முதல் 25 வரை ஆதாரம்: வேலூர், ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ் மருத்துவ மனை முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர். வெ. ஹரிஷ் அன்புச் செல்வன் M.D. (s)., அவர்கள் 20-01-2018 நாளிட்ட தினமலர் நாளிதழின் இணைப்பான பெண்கள் மலரில் எழுதிய கட்டுரை.)

 

27.    கொள்ளு வேக வைத்த நீரை இரு வேளைகள் குடித்து வந்தால் மாதவிடாய் கோளாறு வலிகள் தீரும்(637)

 

28.    கொள்ளு ரசம் வைத்து உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்(1711)


29 .கொள்ளு (எனும் தானியத்தை) ஊறவைத்து, முளைகட்டி, சுண்டால் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும் (1712)

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

====================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )05]

{19-05-2021}

====================================================


கொள்ளு



கொள்ளு

கொள்ளு